செவான், ஆர்மீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 233: வரிசை 233:
== புற இணைப்புகள்==
== புற இணைப்புகள்==
*[http://www.sevan-hotels.com/ Sevan hotels]
*[http://www.sevan-hotels.com/ Sevan hotels]

[[பகுப்பு:கெகார்குனிக் மாகாணம்]]

17:42, 18 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

செவான்
Sevan
மேலே இடமிருந்து: செவான் இயற்கைக்காட்சி • வாசுகெனியன் இறைமையியல் கழகம் செவான் தீபகற்பம் • செவான் மடாலயம் செவான் அடிவானம் • செவான் ஏரி செவான் கடற்கரையின் அகல் காட்சி
மேலே இடமிருந்து:
நாடுஆர்மீனியா
மாகாணம்கெகார்குனிக்
நிறுவப்பட்டது1842
அரசு
 • நகரத்தந்தைகெவோர்க் மால்காசியன்
பரப்பளவு
 • மொத்தம்17.75 km2 (6.85 sq mi)
ஏற்றம்1,925 m (6,316 ft)
மக்கள்தொகை (2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு)
 • மொத்தம்19,229
 • அடர்த்தி1,100/km2 (2,800/sq mi)
தொலைபேசி குறியீடு+374(261)
இணையதளம்Official web
ஆதாரங்கள்: மக்கள் தொகை[1]

செவான் (Sevaan) (ஆர்மேனியன்: Սեւան) நகரம் ஆர்மீனியாவில் இருக்கும் ஒரு பிரபலமான உல்லாச நகரமாகும். செவான் ஏரியின் வடமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கெகார்குனிக் மாகாணத்தில், கடல் மட்டத்திலிருந்து 1925 மீட்டர் அல்லது 6316 அடி உயரத்தில் இந்நகரம் உள்ளது. செவானுக்கு வடகிழக்கில் தலைநகரம் யெரெவான் 65 கிலோமீட்டர் அல்லது 45 மைல் தொலைவிலும், வடக்கில் 35 கிலோமீட்டர் அல்லது 22 மைல் தொலைவில் கெகார்குனிக் மாகாணத்தின் நிர்வாக மையமாக இயங்கும் காவார் நகரமும் அமைந்துள்ளன.

செவான் நகரைச் சுற்றிலும் செவான் தேசியப் பூங்கா சூழ்ந்துள்ளது. நகரின் வடகிழக்குப் பகுதியில் தொடங்கும் இப்பூங்கா தென் மேற்குப் பகுதிவரை விரிவடைந்துள்ளது. கிழக்கில் செவான் ஏரி இந்நகரத்திற்கு இயற்கை எல்லையாக இருக்கிறது.

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி செவான் நகரின் மக்கள் தொகை 19,229 நபர்களாக இருந்தது. 2016 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி மக்கள் தொகை 19,200 என அறியப்படுகிறது[2].

பெயர்க்காரணம்

யெலெனோவ்கா (ஆர்மீனியா: Ելենովկա, உருசியா: Еленовка) என்ற பெயருடன் உருசிய மக்களின் குடியிருப்புப் பகுதியாக 1842 இல் இந்நகரம் இருந்தது. உருசியாவின் முதலாம் திசார் பௌலின் மகள் யெலீனா பாவ்லோவ்னாவின் பெயர் இந்நகரத்திற்குச் சூட்டப்பட்டிருந்தது. 1935 ஆம் ஆண்டு வரை யெலெனோவ்கா என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டுவந்த இந்நகரம் செவான் ஏரியை முன்வைத்து செவான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வரலாறு

செவான் மடாலயம்

ஆர்மீனியாவின் பண்டையப் பேரரசு அமைக்கப்பட்ட பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க அய்ராராட் மாகாணத்திற்குக் கிழக்கில் உள்ள மசாசு, வராசுனனிக் நிலப்பிரிவுகளுடன் தற்கால செவான் நகரப்பகுதி சேர்க்கப்பட்டது. சேர்க்கப்பட்ட இப்பகுதியானது 1842 ஆம் ஆண்டில் யெலென்கோவா என்ற பெயரில் உருசியர்களுக்கான உருவாக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உருசியர்கள் மிகுந்து வாழ்கின்ற ஒரு கிராமமாகவே யெலென்கோவா நீடித்தது.

1935 ஆம் ஆண்டில் கெகார்குனிக் மாகாணத்தைச் சேர்ந்த திசமகாபெர்டு மற்றும் கோமத்சோர் பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராமங்கள் யெலென்கோ கிரமாத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. செவான் ஏரிக்கு அருகில் இப்பகுதி அமைந்திருந்தமையால் செவான் என்று பெயர் மாற்ரம் செய்யப்பட்டது. 1967 ஆம் ஆண்டில் இப்பகுதிக்கு ஒரு நகரம் என்ற மதிப்பு வழங்கப்பட்டது.

நகரத்திற்கு இரண்டு மைல் அல்லது மூன்று கிலோமீட்டர் கிழக்கே செவான் தீபகற்பம் அமைந்துள்ளது. இங்கு 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செவானாவாங்கு மடாலயம் ஒன்று இடைக்கால ஆர்மீனியர்களின் கட்டிடக் கலைக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் மிக்க ஒரு சான்றாக உள்ளது. எச்மியாட்சின் நகரத்திலிருந்து வரும் துறவிகளுக்காக இம்மடலாயம் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு இரண்டு பேராலயங்கள் இருந்தன. திருத்தூதர்களுக்கான சர்ப் அராக்கிலாட்சு மற்றும் புனித மரியாளுக்கான சர்ப் அசுட்வாட்சட்சின் என்பவை அவ்விரண்டு பேராலயங்களாகும். இடைக்கால ஆர்மீனியாவின் பல்வேறு வகையான ஆர்மீனியா காச்கார்சு எனப்படும் கற்சிலுவைகள் இம்மடாலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். தொடக்கத்தில் தீவின் தெற்குக் கடற்கரையில் இம்மடாலயம் கட்டப்பட்டிருந்தது. யோசப் இசுடாலின் ஆட்சிக்காலத்தில் செவான் ஏரியை, செயற்கையாக வற்றச் செய்து நீர் மட்டத்தை 20 மீட்டர்களுக்கும் குறைவாக்கினார்கள். இதன் பின்னர்தான் தீவு தீபகற்பமானது. வாசுகெனியன் இறைமையியல் நிறுவனம் இத்தீபகற்பத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு மதச்சார்பு அமைப்பு ஆகும். செவான் நகரில் இந்நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பமுறாக் கற்காரைக் கட்டிடப் படையரண் ஒன்று செவானுக்கு வடக்கில் இவர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. மாசுடோட்சினெர் என்ற மற்றொரு செப்பமுறாக் கற்காரைக் கட்டிடம் அருகிலுள்ள திசமகாபெர்டுவில் காணப்படுகிறது.

புவியியல்

செவான் ஏரிக்கு வடமேற்குக் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. வடக்கில் பம்பாக் மலையும், மேற்கில் கெக்காம் மலையும் செவான் நகரத்தை பெரும்பான்மையாக ஆக்ரமித்துள்ளன[3]

செவான் தேசியப் பூங்கா

செவான் நகரில் சூரியன் மறையும் காட்சி

செவான் ஏரியையும் அதன் சுற்றுப்புறங்களையும் பாதுக்கக்கும் நோக்கில், செவான் தேசியப் பூங்கா 1978 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இயற்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகார வரம்பு இப்பூங்காவைப் பாதுகாக்கிறது. இங்கு ஓர் ஆராய்ச்சி மையம் நிர்வகிக்கப்பட்டு சுற்றுச் சூழல் கண்காணிப்புடன் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உரிமம் உள்ளவர்கள் மட்டுமே ஏரியைச் சுற்றி மீன்பிடிக்க இயலும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பூங்கா செவான் ஏரியைச் சுற்றியுள்ள பெரும்பான்மையான நிலப்பகுதியை ஆக்ரமித்துள்ளது. நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் தொடங்கி தென்மேற்குப் பகுதிவரை இப்பூங்கா பரவியுள்ளது. 1501 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவடைந்துள்ள பூங்காவின் பரப்பில் சுமார் 24900 எக்டேர் நிலப்பரப்பு ஏரிப்புறத்து நிலங்களாகும். ஆர்குனி, கெகாமா, வர்தெனிசு, பம்பாக், செவான் போன்ற மலைகளின் சரிவுகளால் இப்பூங்கா சூழப்பட்டுள்ளது. 1600 வகையான தாவரங்களும், 330 வகையான விலங்கு வகைகளும் இப்பூங்காவில் காணப்படுகின்றன. இயற்கைப் பாதுகாப்புப் பகுதி, பொழுது போக்குப் பகுதி, பொருளாதாரப் பயன்பாட்டுப் பகுதி என்ற மூன்று பகுதிகளாகப் பூங்கா பிரிக்கப்பட்டுள்ளது.

செவான் ஏரிப் பள்ளத்தாக்குப் பகுதியானது, மிதவெப்பத் தாவரங்களுக்கும், ஆர்மீனிய-ஈரானிய வறண்ட நிலத்தாவரங்களுக்கும் இடைநிலப் பகுதியாகத் திகழ்கிறது. எனினும், செவான் பள்ளத்தாக்கில் பாலூட்டிகள் பற்றிய அறிவியல் ஆய்வுகள் மிகவும் குறைவேயாகும். ஓநாய், குள்ளநரி, நரி, கீரி மற்றும் பூனை போன்றவை தேசிய பூங்காவில் காணப்படுகின்றன.

செவான் தாவரவியற் பூங்கா

செவான் தாவரவியற் பூங்கா

5 எக்டேர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் செவான் தாவரவியற் பூங்கா அமைந்துள்ளது. 650 வகைக்கும் மேற்பட்ட உள்ளூர், வட அமெரிக்க ஆசிய மற்றும் ஐரோப்பிய இனத்தாவரங்களின் இருப்பிடமாக 1944 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இப்பூங்கா ஆர்மேனியன் தேசிய அறிவியல் அகாடமியினால் கண்காணிக்கப்படுகிறது[4]

காலநிலை

மிதமான குறுகிய கோடை, நீண்ட குளிரான பனிப்பொழிவு கொண்ட குளிர்காலம் என செவான் நகரின் காலநிலை வகைப்படுத்தப்படுகிறது. தெற்குப் பகுதியில் அமைந்திருந்தாலும் உயரம் மற்றும் கண்டவியல்பு காரணமாக செவான் நகரின் காலநிலை கிழக்கு பின்லாந்தின் காலநிலையை ஒத்திருக்கிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Sevan
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) -2.8
(27)
-2.1
(28.2)
1.4
(34.5)
7.1
(44.8)
12.4
(54.3)
16.2
(61.2)
18.9
(66)
19.5
(67.1)
16.9
(62.4)
12.4
(54.3)
5.5
(41.9)
-0.1
(31.8)
8.78
(47.8)
தினசரி சராசரி °C (°F) -8.0
(17.6)
-7.5
(18.5)
-6.0
(21.2)
0.5
(32.9)
7.0
(44.6)
10.5
(50.9)
14.0
(57.2)
15.0
(59)
11.0
(51.8)
6.0
(42.8)
-1.0
(30.2)
-5.5
(22.1)
3
(37.4)
தாழ் சராசரி °C (°F) -13.0
(8.6)
-13.0
(8.6)
-12.0
(10.4)
-6.0
(21.2)
1.0
(33.8)
5.0
(41)
9.0
(48.2)
10.0
(50)
5.0
(41)
0.0
(32)
-7.0
(19.4)
-11.0
(12.2)
−2.67
(27.2)
மழைப்பொழிவுmm (inches) 16
(0.63)
23
(0.91)
33
(1.3)
60
(2.36)
87
(3.43)
78
(3.07)
44
(1.73)
33
(1.3)
25
(0.98)
49
(1.93)
31
(1.22)
18
(0.71)
497
(19.57)
சராசரி மழை நாட்கள் 8 9 12 14 19 15 10 8 8 9 8 8 128
ஆதாரம்: World Meteorological Organization[5]

மக்கள் தொகையியல்

தலைமைத் தூதர் பேராலயம்

1989 ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 27000 நபர்களாக இருந்த நகரின் மக்கள் தொகை 2011 கணக்கெடுக்கப்பின் போது 19,229 ஆக குறைந்திருந்தது. நகர மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் குறிப்பாக கோடைக் காலத்தில் விவசாயம், மீன் பிடித்தல் மற்றும் சுற்றுலா சேவைகளில் பொருள் ஈட்டுகின்றனர். 1873 ஆம் ஆண்டில் இருந்து செவான் நகரின் மக்கள் தொகை காலவரிசை இங்கு தரப்பட்டுள்ளது.

[6]
ஆண்டு 1873 1897 1926 1939 1959 1979 1989 2001 2011
மக்கள் தொகை 944 1,371 1,032 2,668 6,415 20,663 26,951 21,422 19,229

செவான் நகரின் நகராட்சிப் பகுதியாக விளங்கும் அருகிலுள்ள ககாரின் கிராமத்தின் மக்கள் தொகை 1379 ஆகும்.

மதம்

செவான் நகர மக்களில் பெரும்பாலானவர்கள் ஆர்மீனியன் திருச்சபை பேராலயத்தைச் சேர்ந்தவர்களாவர். பரிசுத்த தலைமைத் தேவதூதர் பேராலயம் இந்நகரின் முக்கியமான ஆலயமாகும். 2015 ஆம் ஆண்டு மேமாதம் 31 ஆம் நாள் இப்பேராலயம் அர்ப்பணிக்கப்பட்டது[7]. யூத மதத்தவர் சிலரும் நகரில் வசிக்கின்றனர்.

பண்பாடு

செவானில் கோடைக்காலம்

கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அரண்மனையும் பல பொது நூலகங்களும் நகரத்தில் இடம்பெற்றுள்ளன. செவான் தாவரவியற் பூங்காவைப் போன்று புவியியல் அருங்காட்சியகம் ஒன்றும் இங்கு இயங்குகிறது. ஆர்மீனியக் குடியரசுத்தலைவரின் கோடை வாழிடம் செவான் தீபகற்பத்தில் அமைந்துள்ளது.

போக்குவரத்து

எம்-4 நெடுஞ்சாலையில் செவான் நகரம் அமைந்துள்ளது. இந்நெடுஞ்சாலை கிழக்கில் தலைநகரம் யெராவனையும் வடகிழக்கு ஆர்மீனியாவையும் இணைக்கிறது. தலைநகரமான யெரவான் செல்வதற்குரிய ஒரு இரயில் பாதையும் இங்கு உண்டு.

பொருளாதாரம்

தொழிற்சாலைகள்

சோவியத் ஆட்சிக்காலத்தில் செவான் நகரில் தொழில்துறை வேகமாக வளர்ச்சியடைந்தது. 1940 களில் பல திட்டங்கள் குறிப்பாக கட்டுமானத் தொழிற் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது செவான் நகரம் பல்வேறு வகையான மதுபானங்கள்[8] தயாரிப்பின் தாயகமாக விளங்குகிறது.

இவை தவிர ஒரு பெரிய மாவு ஆலையும் பதிவு செய்யப்பட்ட உணவு மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பும் நகரத்தில் செயல்பட்டு வருகின்றன.

சுற்றுலாவும் சேவை நிறுவனங்களும்

குளிர்கால செவான் நகரம்

குறுகிய மிதமான கோடைக்காலம் செவான் நகரில் நிலவுவதால் இது ஒரு பிரபலமான உல்லாச நகரமாகத் திகழ்கிறது. தொழிமுறை மற்ரும் பொழுது போக்கு விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்காக இங்கு வருகின்றனர். கடற்கரை கால்பந்து, கடற்கரை கைப்பந்து, தண்ணிர் விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகள் இங்கு விளையாடப்படுகின்றன. தண்ணீர்ப் பூங்கா, குதிரைச் சவாரி கழ்கம், டென்னிசு மையம். கூடைப்பந்து , கால்பந்து மைதானங்கள் போன்ற வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

நகரில் ஒரு பொது மருத்துவமனை, மனநல மருத்துவமனை ஆகியன செயற்படுகின்றன.

கல்வி

வாசுகெனியன் இறைமையியல் கழகம் மற்றும் ஆகோப் பேராலயம்

பொதுக்கல்வி பள்ளிக் கூடங்கள் ஏழும் 4 கிண்டர் கார்டன் மழலையர் பள்ளிகளும் இங்கு செயற்படுகின்றன. ஆர்மீனியா தேசிய அறிவியல் நிறுவன இயற்பியல் நிறுவனத்தின் கிளை செவான் நகரில் இயங்குகிறது.

விளையாட்டு

1990 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட காலத்தில் அக்டமர் செவான் கால்பந்துக் கழகம் இந்நகரின் சார்பாக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றது. கடற்கரைக் கைப்பந்து, கடற்கரைக் கால்பந்து மற்ரும் காற்றுலாவல் போன்றவை இங்கு பிரபலமான விளையாட்டுகளாகும். கால்பந்துக் கழகமும், விலையாட்டு வளாகமும் இங்கு கட்டப்பட்டு வருகின்றன[9].

செவான் தீபகற்பம் அகன்றக் காட்சி

மேற்கோள்கள்

  1. Gegharkunik
  2. Population estimate of Armenia as of 01.01.2016
  3. Sevan history and geography
  4. About Sevan Botanical garden
  5. "World Weather Information Service – Sevan". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 24 September 2016.
  6. Sevan
  7. Armenian president takes part in the inauguration of the churches of Sevan and Artashat
  8. Kellers Beer products
  9. Sevan sports complex under construction

புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவான்,_ஆர்மீனியா&oldid=2144186" இலிருந்து மீள்விக்கப்பட்டது