ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56: வரிசை 56:
==References==
==References==
{{reflist}}
{{reflist}}

[[பகுப்பு:1942 தமிழ்த் திரைப்படங்கள்]]

07:43, 25 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

ஆராய்ச்சி மணி அல்லது மனுநீதி சோழன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பி. கே. ராஜா சாண்டோ
தயாரிப்புகந்தன் அன் கம்பெனி
மூலக்கதைமனுநீதிச் சோழன் வரலாறு
இசைஸ்ரீநிவாச ராவ் ஷிண்டே
நடிப்புபி. பி. ரங்காச்சாரி
எம். ஆர். சந்தானலட்சுமி
எஸ். பாலச்சந்தர்
எஸ். வரலட்சுமி
ஏ. ஆர். சகுந்தலா
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
மற்றும் பலர்
ஒளிப்பதிவுஈ. ஆர். கூப்பர்
படத்தொகுப்புபஞ்சாபி
கலையகம்கந்தன் ஸ்டூடியோ (கோவை)
வெளியீடு1942
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆராய்ச்சி மணி அல்லது மனுநீதி சோழன் 1942 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பி. பி. ரங்காச்சாரி, எம். ஆர். சந்தானலட்சுமி, எஸ். பாலச்சந்தர், எஸ். வரலட்சுமி, ஏ. ஆர். சகுந்தலா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்..[1]

திரைக்கதைச் சுருக்கம்

திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மனுநீதிச் சோழன் என்ற மன்னன் நீதி வழுவாமைக்குப் புகழ் பெற்றவன் என பழைய தமிழ் நூல்களில் தகவல் காணப்படுகிறது. ஒரு பசுக் கன்றின் மீது தேரேற்றி அக்கன்றைக் கொன்றான் என்பதற்காகத் தன் மகன் மீது தேரேற்றி அவனைக் கொன்றான் எனவும் பின்னர் கடவுள் தோன்றி அவனது மகனையும், கன்றையும் மீண்டும் உயிர் பெறச் செய்தார் எனவும் அக்கதையில் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இந்த திரைப்படத்தில் அந்தச் சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. அரசகுமாரன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒரு பெண்ணைக் கண்டு அவள் மீது காதல் வயப் படுகிறான். அப்பெண்ணும் அவனை விரும்புகிறாள் அந்தப்பெண் ஒரு அமைச்சரின் மகள். இவர்கள் காதலை அந்த அமைச்சர் விரும்பவில்லை. அரசன் அரசகுமாரனுக்கு முடிசூட்டுகிறார். அரசகுமாரன் அமைச்சரின் மகளை எவ்வாறு திருமணம் செய்கிறான் என்பதே மீதிக் கதையாகும்.

நடிகர்கள்

பி. பி. ரங்காச்சாரி
எம். ஆர். சந்தானலட்சுமி
எஸ். பாலச்சந்தர்
எஸ். வரலட்சுமி
ஏ. ஆர். சகுந்தலா
என். எஸ். கிருஷ்ணன்
டீ. ஏ. மதுரம்
பி. எஸ். சந்திரா
மாஸ்டர் ராதா
சி. பி. விஸ்வநாதன்
எம். ஆர். சாமிநாதன்
எஸ். கோசல்ராம்
டி. ஆர். லட்சுமிநாராயணன்
பி. பி. இராமலிங்கம்
டி. பி. பொன்னுசாமி பிள்ளை
ஆர். ஜி. எல். நடராஜசுந்தரம்
எம். எஸ். தனலட்சுமி
ஆர். ஏ. லட்சுமிராணி
நடனம் — கலாமண்டலம் மாதவன் தங்கமணி சித்ரலேகா குழு

[1]

தயாரிப்புக் குழு

  • இயக்கம்: பி. கே. ராஜா சாண்டோ உதவி ரக்பீர் ராம்யே
  • ஒளிப்பதிவு:ஈ. ஆர். கூப்பர்
  • ஒலிப்பதிவு: எம். டி. ராஜாராம்
  • தொகுப்பு: பஞ்சாபி (பஞ்சு)
  • ஆய்வக பொறுப்பு: கிருஷ்ணன்
  • கலையகம்: கந்தன் ஸ்டூடியோ, கோவை

[1]

தயாரிப்பு விபரம்

கோவையில் இயங்கி வந்த கந்தன் கம்பெனி நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்த கந்தன் கலையகத்தில் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அவர்களது புகழ் பெற்ற தயாரிப்புகளில் இத்திரைப்படமும் ஒன்றாகும். தற்போது இந்த நிறுவனமோ அல்லது கலையகமோ இல்லை.[1]

பாடல்கள்

இத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் ஸ்ரீநிவாச ராவ் ஷிண்டே. பாடல்களை இயற்றியவர் கம்பதாசன். பாடல்கள் அனைத்தும் கருநாடக இசை இராகங்களில் அமைக்கப்பட்டிருந்தன. பாடல்களைப் பாடியோர்: எஸ். பாலச்சந்தர், எஸ். வரலட்சுமி, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர்.[1] பின்னணி பாடியவர்கள் பற்றி தகவல் இல்லை.
இத்திரைப்படத்தின் பாட்டுப்புத்தகத்தின்படி படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. .[2]

References

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Araichimani or Manuneethi Chozhan (1942)". தி இந்து. 1 மார்ச்சு 2014. Archived from the original on 25 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 அக்டோபர் 2016.
  2. Araichimani Songbook. Coimbatore: Manickam Press. https://drive.google.com/file/d/0B7JevgDCLbuNNDlHMTFCU3NwdU0/view.