முக்கோண அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51: வரிசை 51:
ஒரு மேல் (கீழ்) முக்கோண அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் அனைத்தும் [[1 (எண்)|1]] ஆக இருக்குமானால் அந்த அணியானது (மேல் அல்லது கீழ்) '''அலகுமுக்கோண அணி''' (''Unitriangular matrix'') எனப்படும். அலகுமுக்கோண அணியும் [[முற்றொருமை அணி|அலகு அணியும்]] ஒன்றல்ல; வெவ்வேறானவை. மேல் மற்றும் கீழ் அலகுமுக்கோண அணியாகவுள்ளது அலகுஅணி மட்டுமே ஆகும்.
ஒரு மேல் (கீழ்) முக்கோண அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் அனைத்தும் [[1 (எண்)|1]] ஆக இருக்குமானால் அந்த அணியானது (மேல் அல்லது கீழ்) '''அலகுமுக்கோண அணி''' (''Unitriangular matrix'') எனப்படும். அலகுமுக்கோண அணியும் [[முற்றொருமை அணி|அலகு அணியும்]] ஒன்றல்ல; வெவ்வேறானவை. மேல் மற்றும் கீழ் அலகுமுக்கோண அணியாகவுள்ளது அலகுஅணி மட்டுமே ஆகும்.


===எடுத்துக்காட்டுகள்===
;மேல் அலகுமுக்கோண அணி:
:<math>
\begin{bmatrix}
1 & 13 & 10 \\
0 & 1 & 5 \\
0 & 0 & 1 \\
\end{bmatrix}
</math>





15:25, 12 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

நேரியல் இயற்கணிதத்தில் முக்கோண அணி (triangular matrix) என்பது ஒரு சிறப்புவகை சதுர அணியாகும். ஒரு சதுர அணியின் முதன்மை மூலைவிட்டத்திற்கு மேலமையும் உறுப்புகள் அனைத்தும் பூச்சியமாக இருந்தால் அச்சதுர அணி கீழ் முக்கோண அணி (lower triangular) எனப்படும். அதேபோல முதன்மை மூலைவிட்டத்திற்கு கீழமையும் உறுப்புகள் அனைத்தும் பூச்சியமாக இருந்தால் மேல் முக்கோண அணி (upper triangular) எனப்படும். கீழ் அல்லது மேல் முக்கோண அணியாக அமையும் அணிகள் முக்கோண அணிகள் எனப்படும். மூலைவிட்ட அணியானது கீழ் மற்றும் மேல் முக்கோண அணியாக இருக்கும். அதாவது மூலைவிட்ட அணியின் முதன்மை மூலைவிட்டத்திற்கு மேலும் கீழும் அமையும் உறுப்புகள் எல்லாம் பூச்சியமாக அமையும்.

அணிச் சமன்பாடுகளிலுள்ள அணிகள் முக்கோண அணிகளாக இருந்தால் அதனைத் தீர்ப்பது எளிது என்பதால் எண்சார் பகுப்பியலில் முக்கோண அணிகள் அதிகம் பயனுள்ளவையாக உள்ளன.

விளக்கம்

கீழுள்ள வடிவில் அமையும் அணி கீழ் முக்கோண அணி அல்லது இடது முக்கோண அணியாகும்:

கீழுள்ள வடிவில் அமையும் அணி மேல் முக்கோண அணி அல்லது வலது முக்கோண அணியாகும்:

கீழ் மற்றும் மேல் முக்கோண அணியாகவுள்ள அணி, ஒரு மூலைவிட்ட அணியாகும்.

எடுத்துக்காட்டுகள்

மேல் முக்கோண அணி
கீழ் முக்கோண அணி

சிறப்பு வகைகள்

அலகுமுக்கோண அணி

ஒரு மேல் (கீழ்) முக்கோண அணியின் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் அனைத்தும் 1 ஆக இருக்குமானால் அந்த அணியானது (மேல் அல்லது கீழ்) அலகுமுக்கோண அணி (Unitriangular matrix) எனப்படும். அலகுமுக்கோண அணியும் அலகு அணியும் ஒன்றல்ல; வெவ்வேறானவை. மேல் மற்றும் கீழ் அலகுமுக்கோண அணியாகவுள்ளது அலகுஅணி மட்டுமே ஆகும்.

எடுத்துக்காட்டுகள்

மேல் அலகுமுக்கோண அணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கோண_அணி&oldid=2129260" இலிருந்து மீள்விக்கப்பட்டது