தொழில்மயமாதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:01, 12 பெப்பிரவரி 2008 இல் நிலவும் திருத்தம்

ஜெர்மனியின் இல்மனோவில் உள்ள ஒரு தொழிற்சாலை, 1860

தொழில்மயமாதல் என்பது, ஒரு சமூகம் முன்-தொழில்சார் நிலையில் இருந்து தொழில்சார் சமூகமாவதற்கு உரிய சமூக, பொருளாதார மாற்றங்களுக்கான ஒரு செயல்முறை ஆகும். முன்-தொழில்சார் நிலை என்பது ஆள்வீத மூலதனக் குவிவு (per capita capital accumulation) மிகக் குறைவாக இருக்கும் ஒரு நிலை ஆகும். தொழில்சார் சமூகம், முழு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூகம் ஆகும். தொழில்மயமாதல், பரந்த நவீனமயமாதலின் ஒரு பகுதியாகும். இது சிறப்பாக பாரிய சக்தி மற்றும் உலோகவியல் உற்பத்தியின் வளர்ச்சியைச் சார்ந்த தொழில்நுட்பப் புத்தாக்கத்துடன் தொடர்புடையது ஆகும். தொழில்மயமாக்கம், இயற்கை குறித்த புதிய கண்ணோட்டத்தையோ அல்லது ஒரு வகையான தத்துவம் சார்ந்த மாற்றத்தையோ கூட ஏற்படுத்துகிறது எனலாம்.


ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, பாரிய தொழிற் துறைகள் இல்லாமை ஒரு பெரிய தடையாகக் கருதப்படுகின்றது. இதனால், பல நாடுகளின் அரசுகள் செயற்கையாகத் தொழில்மயமாதலைத் தூண்ட முயல்கின்றன. உலகில் தொழில்மயமாதல், 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சியுடன் தொடங்கியது எனலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்மயமாதல்&oldid=212193" இலிருந்து மீள்விக்கப்பட்டது