"தேயிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Tea plantation picking.JPG|right|thumb|220px|[[தன்சானியா]]வில் தேயிலை பறிக்கும் காட்சி]]
'''தேயிலை''' (''Tea'', ''Camellia sinensis'') ஒரு பசுமைத் [[தாவரம்]]. இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் [[இலை]]களையும் கொய்து அதனை உலர வைத்து, [[நொதிப்பு|நொதிக்கச்]] செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி [[தேனீர்|தேநீர்]] தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலைத்திணை தொடக்கத்தில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு [[ஆசியா]]வில் காணப்பட்டது. [[வெள்ளைத் தேயிலை]], [[பச்சைத் தேயிலை]], [[ஊலோங் தேயிலை]], [[கறுப்புத் தேயிலை]] போன்ற வெவ்வேறு வகையான தேயிலைகள் இவ்வின நிலைத்திணையிலிருந்து பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் வேறுபடுகின்றன. [[குக்கிச்சா]]வில் இவ்வின நிலைத்திணையின் இலைகளுக்குப் பதிலாக கொப்பு, தண்டு என்பவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்படுகிறது.
[[File:Camellia sinensis MHNT.BOT.2016.12.24.jpg|thumb|''Camellia sinensis'']]
 
இந்நிலைத்திணையின் [[இருசொற் பெயரீடு|இருசொற்பெயர்]] ''Camellia sinensis'' என்பதாகும், இங்கு ''sinensis'' என்பது [[இலத்தீன்]] மொழியில் [[சீனா|சீனாவைச் சேர்ந்த]] என்ற பொருள்படும். ''Camellia'' என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற [[இயேசு சபை]] பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுப்பிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய [[கரோலஸ் லின்னேயஸ்]] அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல் துறைக்காற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.
112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2115112" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி