கருப்பு நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57: வரிசை 57:
==பாடல்கள்==
==பாடல்கள்==


[[தேவா]] இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். [[வாலி| வாலியும்]],[[பிறைசுசூடன்| பிறைசூடனும்]] 5 பாடல்களை எழுதி 1995ம் ஆண்டு பாடல்கள் வெளியானது.
[[தேவா]] இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். [[வாலி| வாலியும்]],[[பிறைசூடன் (கவிஞர்)| பிறைசூடனும்]] 5 பாடல்களை எழுதி 1995ம் ஆண்டு பாடல்கள் வெளியானது.
<ref>{{cite web|url=http://play.raaga.com/tamil/album/Karuppu-Nila-songs-T0003837|title=Karuppu Nila Songs|accessdate=2015-02-19|publisher=play.raaga.com}}</ref><ref>{{cite web|url=http://mio.to/album/Karuppu+Nila+%281995%29|title=Karuppu Nila (1995) - MusicIndiaOnline|accessdate=2015-02-19|publisher=mio.to}}</ref>
<ref>{{cite web|url=http://play.raaga.com/tamil/album/Karuppu-Nila-songs-T0003837|title=Karuppu Nila Songs|accessdate=2015-02-19|publisher=play.raaga.com}}</ref><ref>{{cite web|url=http://mio.to/album/Karuppu+Nila+%281995%29|title=Karuppu Nila (1995) - MusicIndiaOnline|accessdate=2015-02-19|publisher=mio.to}}</ref>


வரிசை 70: வரிசை 70:
|3 || 'நம்ம' || [[மனோ]], [[சித்ரா]] || 5:10
|3 || 'நம்ம' || [[மனோ]], [[சித்ரா]] || 5:10
|-
|-
|4 || 'பல்லாக்கு' || [[சுவர்ணலதா]] || 4:18
|4 || 'பல்லாக்கு' || [[சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) சுவர்ணலதா]] || 4:18
|-
|-
|5 || 'சுண்ட கஞ்சி' || [[மலேசியா வாசுதேவன்]], [[சித்ரா]] || 5:08
|5 || 'சுண்ட கஞ்சி' || [[மலேசியா வாசுதேவன்]], [[சித்ரா]] || 5:08

11:36, 8 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

கருப்பு நிலா
இயக்கம்ஆர்.அரவிந்தராஜ்
கதைபி.கலைமணி
திரைக்கதைபி.கலைமணி
இசை[தேவா]]
நடிப்புவிஜயகாந்த்
குஷ்பு
ரஞ்சிதா
எஸ். எஸ். சந்திரன்
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஜி.ஜெயசந்திரன்
விநியோகம்ராவுத்தர் பிலிம்ஸ்
வெளியீடு15 ஜனவரி 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கருப்பு நிலா திரைப்படம் 1995ம் ஆண்டு வெளிவந்த அதிரடி படமாகும், ஆர்.அரவிந்த்ராஜ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். விஜயகாந்த்,குஷ்பு, ரஞ்சிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர், எம். என். நம்பியார், கஷான் கான், ஆர். சுந்தர்ராஜன், மேஜர் சுந்தர்ராஜன், எஸ். எஸ். சந்திரன், ஸ்ரீவித்யா மற்றும் பி.சி.ராமகிருஷ்ணா ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் இப்படத்தை தயாரித்தார். தேவா இசையமைப்பில் 19985ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இத்திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது. [1][2][3] 1994ம் ஆண்டு வெளியான விஜயகாந்த் படமான் என் ஆசை மச்சான் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிருந்து தலைப்பு வைக்கப்பட்டது.

கதை

சண்முக பாண்டியன் தன் தந்தை செல்வவிநாயகம் (பி.சி.ராமகிருஷ்ணா), தாய் லட்சுமி (ஸ்ரீவித்யா), தங்கை சுமதி (மீனா குமாரி) யுடன் வாழ்ந்து வரும் இளகிய மனம் படைத்த மனிதன். சண்முக பாண்டியனும் திவ்யாவும் (ரஞ்சிதா) காதலில் விழுகின்றனர் சுமதியின் கல்யாணத்தன்று, செல்வவிநாயகம் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் விநியோகம் செய்ததாக தவறுதலாக கைது செய்யப்படுகிறார். அது உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவருடைய சேமிப்புகள் அனைத்தும் அரசு கையகப்படுத்தி கொள்ளும். அதன்பின் சுமதியின் கல்யாணம் உடனடியாக நிறுத்தப்படுகிறது. லட்சுமி நொறுங்கிவிடுகிறார், திவ்யாவும் சண்முக பாண்டியன் ஏழையானதால் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறார்.

நந்தினி (குஷ்பு) சண்முக பாண்டியனை தன் நிறுவன்த்தில் எடுத்துக்கொள்கிறார், நந்தினியின் தந்தை செல்வநாயகத்தை தன் எதிரியாக கருதுகிறார். சண்முக பாண்டியனும் நந்தினியும் காதலில் விழுகின்றனர்.

ஊழல் மந்திரியான பி.கே.ஆரும் (எஸ். எஸ். சந்திரன்), அவரது மகன் வாசுவும் (கஷான் கான்) செல்வநாயகத்திற்கு எதிராக திட்டமிட்டே சதி செய்து சிக்கவைத்துள்ளனர். பின்னர், வாசு திவ்யாவை மணமுடிக்கின்றார், மனநோயாளியான வாசு திவ்யாவை கொடுமைப் படுத்துகிறார். சண்முக பாண்டியன் தந்தை குற்றமற்றவர் என்று திவ்யா, நந்தினி துணையுடன் நிரூபித்து வில்லன்களை பழிவாங்குவதுதான் மீதி கதை. இதனிடையே திவ்யா இறந்துவிட, கடைசியில் நந்தினியை சண்முகபாண்டியன் திருமணம் முடிகிறது.

நடிகர்கள்

பாடல்கள்

தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வாலியும், பிறைசூடனும் 5 பாடல்களை எழுதி 1995ம் ஆண்டு பாடல்கள் வெளியானது. [4][5]

பாடல் பாடியவர்கள் கால அளவு
1 'சின்னவரே' எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:35
2 'காஃபி வேணுமா' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 5:11
3 'நம்ம' மனோ, சித்ரா 5:10
4 'பல்லாக்கு' சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) சுவர்ணலதா 4:18
5 'சுண்ட கஞ்சி' மலேசியா வாசுதேவன், சித்ரா 5:08

மேற்கோள்கள்

  1. "Karuppu Nila (1995) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2015-02-19.
  2. "Find Tamil Movie Karuppu Nila". jointscene.com. Archived from the original on 2011-08-26. பார்க்கப்பட்ட நாள் 2015-02-19.
  3. "Tamil Movie News--1995 Review". groups.google.com. 1996-01-09. பார்க்கப்பட்ட நாள் 2015-02-19.
  4. "Karuppu Nila Songs". play.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2015-02-19.
  5. "Karuppu Nila (1995) - MusicIndiaOnline". mio.to. பார்க்கப்பட்ட நாள் 2015-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_நிலா&oldid=2102377" இலிருந்து மீள்விக்கப்பட்டது