பெர்சி பைச்சு செல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29: வரிசை 29:
1822 ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் நாள் படகு விபத்தில் ஷெல்லி இறந்தார்.ஒரு நூற்றாண்டுக்கு பிறகு ஆக்ஸ்போர்ட் கல்வி நிறுவனம் அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியது.
1822 ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் நாள் படகு விபத்தில் ஷெல்லி இறந்தார்.ஒரு நூற்றாண்டுக்கு பிறகு ஆக்ஸ்போர்ட் கல்வி நிறுவனம் அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியது.


==உசாத்துணைகள்==
==ஊசாத்துணைகள்==
சுப.வீரபாண்டியன் எழுதி,நக்கீரன் பிரசுரம் வெளியிட்ட '''இளமை எனும் பூங்காற்று நூல்'''.
சுப.வீரபாண்டியன் எழுதி,நக்கீரன் பிரசுரம் வெளியிட்ட '''இளமை எனும் பூங்காற்று நூல்'''.



00:16, 4 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெர்சி பைச்சு செல்லி
பிறப்புபெர்சி பைஷ் ஷெல்லி
(1792-08-04)4 ஆகத்து 1792
ஃபீல்டு பிளேஸ், ஹோர்ஷாம், இங்கிலாந்து[1]
இறப்பு8 சூலை 1822(1822-07-08) (அகவை 29)
வியாரேக்கியோ, தஸ்கனி, இத்தாலி
தொழில்எழுத்தாளர், நாடகாசிரியர், கட்டுரையாளர், கவிஞர்
இலக்கிய இயக்கம்புனைவியல்
கையொப்பம்

பெர்சி பைச்சு செல்லி அல்லது பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley, ஆகஸ்ட் 4, 1792 – ஜூலை 8, 1822) ஒரு ஆங்கிலக் கவிஞர். பி.பி. ஷெல்லி என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.புனைவியல்/கற்பனையியல் இயக்கத்தின் (romantic movement) முக்கிய கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் ஜான் கீட்ஸ் மற்றும் பைரன் பிரபு ஆகியோரின் நண்பர். இவருடைய இரண்டாவது மனைவி மேரி ஷெல்லியும் புகழ் பெற்ற புதின எழுத்தாளர்.

ஷெல்லியின் அசாத்திய கொள்கைப்பிடிப்பும், தனித்துவ வாழ்க்கைமுறையும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் புகழை அடையவிடாமல் தடுத்தன. அவருடைய படைப்புகள் பலமுறை புறக்கணிக்கப்பட்டன அல்லது உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டன. அவர் இறக்கும்வரை அவருடைய ரசிகர் கூட்டத்தின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டவில்லை. ஓசிமாண்டியாஸ், ஓட் டூ எ வெஸ்ட் விண்ட், டூ எ ஸ்கைலார்க், தி மாஸ்க் ஆஃப் அனார்க்கி அஃப் அனார்க்கி போன்ற தனிக்கவிதைகள் ஷெல்லியின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். ஆங்கில கவிதையுலகில் அழியாப்புகழ் பெற்றிருக்கும் இவை, இன்று வரை செவ்வியல் கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர அடோனாய்ஸ், குயின் மாப், அலாஸ்டர், ரிவோல்ட் ஆஃப் இஸ்லாம், தி டிருயம்ஃப் ஆஃப் லைஃப் போன்ற புகழ்பெற்ற நெடுங்கவிதைகளையும், தி சென்சி, புரோமீத்தியஸ் அன்பவுண்ட் போன்ற மேடை நாடகங்களையும் ஷெல்லி எழுதியுள்ளார். முப்பதாண்டுகளே வாழ்ந்தாலும், ஆங்கில இலக்கியத்தில் ஷெல்லி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நான்கு தலைமுறைகளாக பல கவிஞர்கள் ஷெல்லியின் படைப்புகளால் உந்தப்பட்டு கவிதைகளை எழுதினர். அவரது வன்முறையற்ற போராட்ட முறைகள் கென்றி டேவிட் தூரோவின் சட்டமறுப்புக் கொள்கைக்கும் மகாத்மா காந்தியின் அறப்போர் முறைக்கும், முன்னோடியாக இருந்தது.

தாக்கங்கள்

ஜான் மில்டன்

பின்பற்றுவோர்

வில்லியம் பட்லர் யீட்ஸ், ஜான் காஸ்புரோவிக்ஸ், ஆல்பிரட் நோபல், கிரகோரி கார்சோ, கார்ல் மார்க்ஸ், ஆஸ்கார் வைல்ட், தாமஸ் ஹார்டி, ஜார்ஜ் பெர்னாட் ஷா, பெர்ட்ரண்டு ரசல், அப்டன் சின்கிளெயர், ஜே. கிருஷ்ணமூர்த்தி

பிறப்பு மற்றும் இளமைக் காலம்

திமோதி ஷெல்லி என்பவருக்கு முதல் மகனாக ஷெல்லி 1792 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் நான்காம் திகதி பிறந்தார்.இவருக்கு நான்கு தங்கைகளும்,ஒரு தம்பியும் இருந்தனர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஈடோன் கல்லூரியில் அவர் தன் கல்லூரிப் படிப்பை படித்தார்.கல்லூரியில் மதங்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வினியோகித்த காரணங்களுக்காக அவர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.அதன் பின் அவர் ஹாரியட் வெஸ்ட் புரூக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.வில்லியம் காட்வின் என்பவரையே ஷெல்லி குருவாக ஏற்றிருந்தார்.காட்வின்னின் மகளான மேரியை ஷெல்லி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இறப்பு

1822 ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் நாள் படகு விபத்தில் ஷெல்லி இறந்தார்.ஒரு நூற்றாண்டுக்கு பிறகு ஆக்ஸ்போர்ட் கல்வி நிறுவனம் அவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியது.

உசாத்துணைகள்

சுப.வீரபாண்டியன் எழுதி,நக்கீரன் பிரசுரம் வெளியிட்ட இளமை எனும் பூங்காற்று நூல்.

மேற்கோள்கள்

  1. The Life of Percy Bysshe Shelley, Thomas Medwin (London, 1847), p. 323

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்சி_பைச்சு_செல்லி&oldid=2099895" இலிருந்து மீள்விக்கப்பட்டது