சேசாத்திரி சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Kanags பக்கம் சேசாத்திரி சாமிகள் என்பதை சேசாத்திரி சுவாமிகள் என்பதற்கு நகர்த்தினார்
(வேறுபாடு ஏதுமில்லை)

07:11, 29 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

சேசாத்திரி சுவாமிகள்
பிறப்பு(1870-01-22)22 சனவரி 1870
தொண்டை மண்டலம்
இறப்பு4 சனவரி 1929(1929-01-04) (அகவை 58)
இயற்பெயர்சேசாத்திரி காமகோடி சாத்திரி

சேசாத்திரி சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவர் சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. இவர் இரமண மகரிசி பாதாள லிங்க சந்நதியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது, அவரை மீட்டார்.

காமகோடி வம்சத்தில் வரதராஜன் - மரகதம்பாள் தம்பதியினருக்கு 1870 ஜனவரி 22ம் நாள் உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் பிறந்தார், சாஸ்திரங்களைக் கற்று வல்லவராக இருந்தார். சேஷாத்ரியின் 14 வயதில் அவருடைய தகப்பனார் இறந்துவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தபோது அவருடைய ஜாகத்தினைக் கணித்தவர்கள், இவர் சன்னியாக மாறி யோகியாகக் கூடியவர் என்றார்கள். அவருடைய தாயார் அருணாசல, அருணாசல, அருணாசல என மூன்று முறை கூறிவிட்டு உயர்துறந்தார். இதனால் அண்ணாமலை சேசாத்திரியின் மனதில் ஆழப்பதிந்து திருவண்ணாமலைக்கு வந்தார்,

திருவண்ணாமலையில் வந்து சித்துகளை செய்துகாட்டினார். அவருடைய சித்துகளை அறிந்த மக்கள் அவரிடம் வந்தார்கள். நல்லவர்களுக்கு நல்வாக்கும், தீயவர்களுக்கு கொடுஞ்சொற்களும் கூறினார். மனநிலை சரியில்லாதவர் போல வேகமாக சிரிப்பதும், ஓடுவதும், தன்னைப் பார்க்க வருகின்றவர்களை கட்டியணைத்தல், கன்னத்தில் அறைதல், எச்சில் உமிழ்தல் என செய்வார். இவரே ரமணரை உலகிற்கு காட்டியவர்.

1929ம் ஆண்டு ஜனவரி மாதம் முக்தி அடைந்தார்.

ஆதாரங்கள்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=1807

பிறப்பு:1870 பிறப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேசாத்திரி_சுவாமிகள்&oldid=2095832" இலிருந்து மீள்விக்கப்பட்டது