"ஆங்கிலேய-சீக்கியப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ஆங்கிலேய-சீக்கியப் போர்கள்''' அல்லது '''ஆங்கில-சீக்கியப் போர்கள்''' (''Anglo-Sikh wars'') என்பது 19ம் நூற்றாண்டில் [[பிரித்தானிய இந்தியா]]வில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும்]] [[சீக்கியப் பேரரசு]]க்கும் இடையே நடைபெற்ற போர்களைக் குறிக்கிறது. இவற்றின் விளைவாக சீக்கியப் பேரரசு அழிந்து, வடமேற்கு இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வந்தது.
 
[[ரஞ்சித் சிங்]]கின் மரணத்துக்குப் பின் சீக்கியப் பேரரசில் உட்பூசல் அதிகமானது. அவருக்குப் பின் பேரரசராவது யார் என்பது குறித்து பேரரசின் குறுநிலமன்னர்களிடையே வேறுபாடுகள் அதிகரித்தன. கிழக்கிந்தியக் கம்பனி நிருவாகத்துடன் மோதல்களும் அதிகரித்தன. 1845-56 இல் இம்மோதல்கள் போராக மாறின. [[முதலாம் ஆங்கிலேய-சீக்கியப்சீக்கியர் போர்|முதலாம் ஆங்கிலேயஆங்கிலேயே-சீக்கியப்சீக்கியர் போரில்]] கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் சீக்கியப் படைகளைத் தோற்கடித்தன. 1846 இல் கையெழுத்தான லாகூர் அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக சீக்கியப் பேரரசின் பல பகுதிகள் கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டன. சீக்கியர்கள் ஒன்றரை கோடி ரூபாய் தண்டமாக கிழக்கிந்திய நிறுவனத்துக்குக் கட்டினர். ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டவாறு இருந்தன. 1848 இல் மீண்டும் வெளிப்படையான போர் மூண்டது.
 
1848 - 1849 காலகட்டத்தில் நடைபெற்ற [[இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போர்|இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில்]] சீக்கியப் பேரரசு முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டது. அதன் பகுதிகள் [[பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]] மற்றும் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணமாக]] பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2092673" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி