சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி removed Category:இந்திய அருங்காட்சியகங்கள்; added Category:தில்லி அருங்காட்சியகங்கள் using HotCat |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
* [http://www.childrensbooktrust.com/dm.html சிறுவர் புக் டிரஸ்ட் - பொம்மை அருங்காட்சியகம்] |
* [http://www.childrensbooktrust.com/dm.html சிறுவர் புக் டிரஸ்ட் - பொம்மை அருங்காட்சியகம்] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:தில்லி அருங்காட்சியகங்கள்]] |
15:08, 19 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் பெருமளவிலான பொம்மைகளைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது இந்தியாவின் தலைநகரான டில்லியில் அமைந்துள்ளது. இது ஒரு அரசியல் கேலிப்பட வரைவாளரான கே. சங்கர் பிள்ளை என்பவரால் அமைக்கப்பட்டது.
அமைவிடம்
புது டில்லியில் உள்ள பகதூர் ஷா சஃபார் சாலையில் உள்ள சிறுவர் புக் டிரஸ்ட் கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், கட்டிடத்தின் முதல் மாடியில் 5,184.5 சதுர அடி (481.66 சதுர மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது.
அமைப்பு
அருங்காட்சியகத்தின் உட்பகுதி இரண்டு சமமான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் ஆகியவற்றைச் சேர்ந்த பொம்மைகள் உள்ளன. மற்றப்பகுதியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பொம்மைகள் உள்ளன.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பொம்மைகளுடன், இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு வகை ஆடைகளை அணிந்த 150 வகையான பொம்மைகளைக் கொண்ட சிறப்புப் பகுதியும் உண்டு. இப் பொம்மைகள் அருங்காட்சியகத்துடன் அமைந்துள்ள வேலைத்தலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.