மஞ்சட்பழுப்புக் கழுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPF (பேச்சு | பங்களிப்புகள்)
remove misidentified pic
Replacing AB076_Tawny_Eagle.JPG with File:Steppe_Eagle,_Pokaran,_district_Jaisalmer,_Rajasthan,_India.jpg (by CommonsDelinker because: File renamed: identity).
வரிசை 35: வரிசை 35:
File:Aquila rapax -Ethiopia -with roadkill-8.jpg|[[எதியோப்பியா]]வில் ஒரு இறந்து போன நரியுடன்
File:Aquila rapax -Ethiopia -with roadkill-8.jpg|[[எதியோப்பியா]]வில் ஒரு இறந்து போன நரியுடன்
File:tawny eagle in closeup arp.jpg|கோம்பி மார்டின் வனவிலங்கு மற்றும் தொன்மாப் பூங்கா, [[இங்கிலாந்து]]
File:tawny eagle in closeup arp.jpg|கோம்பி மார்டின் வனவிலங்கு மற்றும் தொன்மாப் பூங்கா, [[இங்கிலாந்து]]
File:AB076_Tawny_Eagle.JPG|[[ஜெய்சல்மேர்]], [[இந்தியா]]
File:Steppe Eagle, Pokaran, district Jaisalmer, Rajasthan, India.jpg|[[ஜெய்சல்மேர்]], [[இந்தியா]]
</gallery>
</gallery>



03:18, 3 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

மஞ்சட்பழுப்புக் கழுகு
மஞ்சட்பழுப்புக் கழுகு, எடோசா தேசியப் பூங்கா, நமீபியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அக்சிபிட்ரிஃபார்மெசு
(Accipitriformes)
குடும்பம்: அக்சிபிட்ரிடே
(Accipitridae)
பேரினம்: அகுய்லா
இனம்: அ. ரபக்ஸ்
இருசொற் பெயரீடு
அகுய்லா ரபக்ஸ்
(டெம்மின்க், 1828)
வேறு பெயர்கள்

அகுய்லா ரபக்ஸ் ரபக்ஸ்

மஞ்சட்பழுப்புக் கழுகு (அகுய்லா ரபக்ஸ், ஆங்கிலம்: Aquila rapax) என்பது கழுகு இனத்தைச் (அக்சிபிட்ரிடே, ஆங்கிலம்: Accipitridae) சேர்ந்த ஒரு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது வலசை போகும் புல்வெளிக் கழுகிற்கு மிகவும் நெருங்கியதாகவும், ஒரே இனமாகவும் கருதப்பட்டுவந்தது. ஆயினும், குறிப்பிடத்தக்க உருவ மற்றும் உடற்கூறு வேறுபாடுகள் இவை வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவை என்பதை உறுதிபடுத்தின.[2][3][4][5]

மஞ்சட்பழுப்புக் கழுகுகள் ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஆரம்பித்து, வெப்பமண்டல தென்மேற்கு ஆசியா முதல் இந்தியா வரை வாழ்கின்றன. இப்பறவைகள் ஒரே இடத்தில் குடியிருந்து இனப்பெருக்கம் செய்யும். மரங்கள், பாறைக் கூர்முகடுகள் மற்றும் நிலத்தில் அமைக்கப்பட்ட சுள்ளிகளாலான கூட்டில் ஒன்று முதல் மூன்று முட்டைகள் வரை இடும். வெப்பமண்டல திறந்தவெளிகளான பாலைவனம், அரைகுறை பாலைவனம், புல்வெளி மற்றும் மரம் அருகிய வெப்பமண்டலச்சமதளப் புல்வெளிகளில் வாழும்.

விளக்கம்

மஞ்சட்பழுப்புக் கழுகின் முறைப்பு

இப்பெரிய கழுகு அகுய்லா பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிறிய இனமாகும். இது சுமார் 60 -75 செ. மீ (24 - 30 அங்குலம்) நீளம் மற்றும் 1.59 - 1.90 மீ (5.22 - 6.23 அடி) இறக்கைக் குறுக்களவையும் கொண்டிருக்கும். 1.6 - 3 கி. கி (3.5 - 6.6 பவுண்டு) எடை இருக்கும்.[6][7] இக்கழுகு மஞ்சட்பழுப்பு நிற மேற்புறங்களையும், கருமையான பறக்க உதவும் இறகுகள் மற்றும் வாலினையும், வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டிருக்கும். மஞ்சட்பழுப்புக் கழுகு, புல்வெளிக் கழுகினை விட அளவில் சிறியதாகவும் நிறத்தில் வெளிறியதாகவும் இருக்கும்; ஆயினும் புல்வெளிக் கழுகின் வெளிரிய தொண்டைப்பகுதி இவற்றிடம் கிடையாது.

சிறகுகளின் வண்ண வேறுபாடானது இளம் பறவைகளில் வளர்ந்த பறவைகளைவிட குறைவாக இருக்கும்; ஆயினும் இளம் பறவைகளிலேயே சிறகுத்தொகுதியின் வண்ண வேறுபாடுகளைக் காண முடியும்.

தன்மை

மஞ்சட்பழுப்புக் கழுகுகள் பெரும்பாலும் இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணும். சிறு ஊர்வன, முயல் அளவிலான பாலூட்டிகள், கினிக்கோழி அளவிலான பறவைகள் போன்றவற்றையும் கொன்று உண்ணும்.[7] மற்ற கொன்றுண்ணிப் பறவைகளிடமிருந்தும் உணவைப் பறித்து உண்ணும்.

மஞ்சட்பழுப்புக் கழுகின் அழைப்பு (ஒலி) காகம் கரைவதை ஒத்திருக்கும்; ஆயினும் இது ஒரு அமைதியான பறவையாகும்.

புகைப்படத் தொகுப்பு

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புக்கள்

உசாத்துணை

  1. BirdLife International (2013). "அகுய்லா ரபக்ஸ்". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Invalid |ref=harv (help)
  2. க்ளார்க் டபிள்யூ.எஸ். (Clark, W. S.) (1992): The taxonomy of Steppe and Tawny Eagles, with criteria for separation of museum specimens and live eagles. Bulletin of the British Ornithologists' Club|Bull. B.O.C. 112: 150–157
  3. ஆல்சன், ஸ்டோர்ஸ் எல். (Olson, Storrs L.) (1994): Cranial osteology of Tawny and Steppe Eagles Aquila rapax and A. nipalensis. Bulletin of the British Ornithologists' Club|Bull. B.O.C. 114: 264–267
  4. சேங்ஸ்டர், ஜார்ஜ்; நாக்ஸ், ஆலன் ஜி.; ஹெல்பிக், அன்றியாஸ் ஜெ. & பார்கின், டேவிட் டி. (Sangster, George; Knox, Alan G.; Helbig, Andreas J. & Parkin, David T.) (2002): ஐரோப்பிய பறவைகளின் வகைப்பாட்டியல் பரிந்துரை. Ibis (journal) 144(1): 153–159 எஆசு:10.1046/j.0019-1019.2001.00026.x PDF fulltext
  5. http://www.globalraptors.org/grin/SpeciesResults.asp?specID=8167
  6. ஃபெர்க்கூசன்-லீஸ், ஜெ.; கிரிஸ்டி, டி.; ஃப்ரான்க்லின், மீட் & புர்டனின் (Ferguson-Lees, Christie, Franklin, Mead & Burton) உலகின் கொன்றுண்ணிப் பறவைகள்.ஹொஃக்டன் மிஃப்லின் ஹார்குர்ட் (Houghton Mifflin Harcourt) (2001), ISBN 0-618-12762-3.
  7. 7.0 7.1 ஆர்கைவில் (Arkive) மஞ்சட்பழுப்புக் கழுகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சட்பழுப்புக்_கழுகு&oldid=2083944" இலிருந்து மீள்விக்கப்பட்டது