கோப்பென் காலநிலை வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் கெப்பனின் காலநிலை என்பதை கோப்பென் காலநிலை வகைப்பாடு என்பதற்கு நகர்த்தினார்
*திருத்தம்*
வரிசை 50: வரிசை 50:
|}
|}
]]
]]
'''கோப்பென் வகைப்பாட்டு''' (Köppen classification) [[விலாடிமீர் கோப்பென்|விலாடிமீர் கோப்பெனால்]] உருவாக்கப்பட்ட [[காலநிலை]] வகைப்பாட்டுக்காக ஒரு முறையாகும். ஒரு பகுதியில் வளரும் [[தாவரம்|தாவரங்களை]] பிரகாரம் கோப்பென் இம்முறையை படைத்தார்.

'''கோப்பென் வகைப்பாட்டு''' (Köppen classification) [[விலாடிமீர் கோப்பென்]]ஆல் படைத்த [[காலநிலை]] வகைப்பாட்டுக்காக ஒரு முறையாகும். ஒரு பகுதியில் வளரும் [[தாவரம்|தாவரங்களை]] பிரகாரம் கோப்பென் இம்முறையை படைத்தார்.


== கெப்பனின் காலநிலை ==
== கெப்பனின் காலநிலை ==

06:54, 7 மே 2016 இல் நிலவும் திருத்தம்

Updated Köppen-Geiger climate map[1]
  Af
  Am
  Aw
  BWh
  BWk
  BSh
  BSk
  Csa
  Csb
  Cwa
  Cwb
  Cwc
  Cfa
  Cfb
  Cfc
  Dsa
  Dsb
  Dsc
  Dsd
  Dwa
  Dwb
  Dwc
  Dwd
  Dfa
  Dfb
  Dfc
  Dfd
  ET
  EF

கோப்பென் வகைப்பாட்டு (Köppen classification) விலாடிமீர் கோப்பெனால் உருவாக்கப்பட்ட காலநிலை வகைப்பாட்டுக்காக ஒரு முறையாகும். ஒரு பகுதியில் வளரும் தாவரங்களை பிரகாரம் கோப்பென் இம்முறையை படைத்தார்.

கெப்பனின் காலநிலை

உலகின் காலநிலை எங்கும் ஒரேமாதிரியாக காணப்படுவதில்லை. பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றது. முக்கியமாக காலநிலை அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ள பிரதேசங்களை ஒரே பிரிவின் கீழ் வகுத்து ஆராய்வதே காலநிலைப் பிரதேசங்கள் பற்றிய ஆய்வாகும். சூப்பான், கெப்பன், தோன்துவைற், டட்லி ஸ்ராம்ப், மில்லர் முதலான பல அறிஞர்கள் உலகத்தை காலநிலைப் பிரதேசங்களாகப் பிரித்து ஆராய்ந்துள்ளனர். உலகினைக் காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு வெப்பநிலை, மழைவீழ்ச்சி முதலான காலநிலை மூலகங்களைக் குறிகாட்டிகளாகக் கொண்டுள்ளனர்.

ஆனால் கோப்பென் உலகினை காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு சிறந்த குறிகாட்டி தாவரம் என நம்பினார். டி.கண்டோல் என்பவருடைய தாவர வகைப்பாகுபாட்டை அடிப்டையாகக் கொண்டு தனது காலநிலைப் பிரதேசங்களை வகுத்தார்.

டி.கண்டோலின் ஐந்து முக்கிய தாவரப் பிரதேசங்களாவன :

  • மிகு வெப்பநிலைக்குரியவை (Megathermal)
  • வறட்சிக்குரியவை (Xerophilous)
  • இடைவெப்பநிலைக்குரியவை (Mesothermal)
  • நுண்வெப்பநிலைக்குரியவை (Microthermal)
  • மிகத்தாழ்வெப்பநிலைக்குரியவை (Ekisthothermal)

டி.கண்டோலின் தாவரப் பிரிவுகளின் ஒழுங்கில் கெப்பன் உலகினை முதற்கட்டமாக ஐந்து காலநிலைப் பிரிவுகளாக (A,B,C,D,E) வகுத்தார். அவையாவன:

  • அயனமண்டல மழைக்காலநிலை (A)
  • உலர்ந்த காலநிலை (B)
  • இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை (C)
  • முனைவுக்காலநிலை (E)

என்றாலும், இப் பரந்த உலகை இந்த ஐந்து பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது. எனவே ஐந்து பெரும் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் கொண்டு உப பிரிவுகளாக (f,m,w,S,W,s,T,F) இரண்டாம் கட்டமாக வகுத்தார். மேலும் வேறு சில தனித்த இயல்புகளை அவதானித்த கெப்பன் மூன்றாம் கட்டமாக வேறு சில ஆங்கில எழுத்துக்களைக் (a,b,c,d,h,k,H) கொண்டு வகுத்தார்.

அயனமண்டல மழைக்காலநிலை (A)

  • அயன மழைக்காட்டுக் காலநிலை (Af)
  • அயன பருவக்காற்றுக் காலநிலை (Am)
  • அயன சவன்னாக் காலநிலை (Aw)

உலர்ந்த காலநிலை (B)

  • தெப்புவெளிக் காலநிலை (BS)
    • வருடச் சராசரி வெப்பநிலை 18°C ற்கு அதிகம் (BSh)
    • வருடச் சராசரி வெப்பநிலை 18°C ற்கு குறைவு (BSk)
  • பாலைநிலக் காலநிலை (BW)
    • வருடச் சராசரி வெப்பநிலை 18°C ற்கு மேல் உள்ள பாலை நிலங்கள் (BWh)
    • வருடச் சராசரி வெப்பநிலை 18°C ற்கு குறைவாக உள்ள பாலை நிலங்கள் (BWk)

இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை (C)

  • உலர் மாரிக் காலநிலை (Cw)
    • காலநிலையில் வெப்பமான கோடையும் வறட்சியான குளிர்ப் பருவமும் நிலவும் (Cwa)
    • காலநிலையில் மிதமான கோடையும் வறட்சியான குளிர்ப் பருவமும் நிலவும் (Cwb)
  • உலர் கோடைக் காலநிலை (மத்தியதரைக் கடற்காலநிலை) (Cs)
    • காலநிலை சமவெளிப்பரப்பில் காணப்படும் மத்தியதரைக் கடற்காலநிலை ஆகும் (Csa)
    • காலநிலை மலைப் பாங்கான பகுதியில் காணப்படும் மத்தியதரைக் கடற்காலநிலை ஆகும் (Csb)
  • காலநிலை - உலர் பருவமற்ற காலநிலை (Cf)
    • பிரதேசங்களில் பரவலாக மழை வீழ்ச்சி நிலவும் (Cfa)
    • பிரதேசங்களில் மழை வீழ்ச்சியினளவு சற்றுக் குறைவு (Cfb)
    • (முனைவுப்பக்கம்) மேககமூட்டமும் உறைபனியும் காணப்படும் (Cfc)

நனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை (D)

  • உலர் மாரிக் காலநிலை (Dw)
    • Dwa
    • Dwb
    • Dwc
  • உலர் பருவற்ற காலநிலை (Df)
    • Dfa
    • Dfb
    • Dfc

முனைவுக்காலநிலை (E)

  • துந்திராக் காலநிலை (ET)
  • உறைபனிக் காலநிலை (EF)
    • மலைக் காலநிலை (கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் மேற்பட்ட மலைப்பகுதிகள்) (ETH)

மேற்கோள்கள்

  1. Peel, M. C. and Finlayson, B. L. and McMahon, T. A. (2007). "Updated world map of the Köppen-Geiger climate classification". Hydrol. Earth Syst. Sci. 11: 1633-1644. பன்னாட்டுத் தர தொடர் எண்:1027-5606. http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html.  (direct: Final Revised Paper)