பிறரன்பின் பணியாளர்கள் சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27: வரிசை 27:
* [http://www.wimklerkx.nl/EN/PROJECTS/TV.html (தெரேசாவின் தொண்டர்கள்] புகைப்படக் கரைஞர் விம் கிலெர்க்சு படைத்த, கொல்கத்தா நிர்மல்  இரிதயின் பணியாற்றும் தொண்டர்கள் குறித்த புகைப்பட ஆவணம், 1988
* [http://www.wimklerkx.nl/EN/PROJECTS/TV.html (தெரேசாவின் தொண்டர்கள்] புகைப்படக் கரைஞர் விம் கிலெர்க்சு படைத்த, கொல்கத்தா நிர்மல்  இரிதயின் பணியாற்றும் தொண்டர்கள் குறித்த புகைப்பட ஆவணம், 1988


[[பகுப்பு:கிறித்தவ அமைப்புகள்]]
[[பகுப்பு:கத்தோலிக்க துறவற சபைகள்‎]]
[[பகுப்பு:இந்தியத் தொண்டு நிறுவனங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொண்டு நிறுவனங்கள்]]
[[பகுப்பு:இந்திய சமய அமைப்புகள்]]
[[பகுப்பு:இந்திய சமய அமைப்புகள்]]

04:15, 30 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

அன்னை தெரேசா - பிறரன்பு பணியாளர்கள் அமைப்பினைத் தோற்றுவித்தவர்
மரபார்ந்த நீல வண்ண சரிகையுடைய வெண் புடவையில் பிறரன்பு பணியாளர்கள் அமைப்புச் சகோதரிகள்.

பிறரன்புப் பணியாளர்கள் (Missionaries of Charity) என்பது 1950-இல் அன்னை தெரேசா நிறுவிய இலத்தீன் ரீதி ரோமன் கத்தோலிக்க  மதச்சபை அமைப்பாகும். இவ்வமைப்பு தற்போது 4501-இற்கும் மேலான அருட்சகோதரிகளைக் கொண்டுள்ளது. அமைப்பின் உறுப்பினர் அமைப்புடனான தம் உறவை "M.C." என்ற தலைப்பெழுத்துக்களைக் கொண்டு அடையாளப்படுத்துவர். சபை உறுப்பினர் அனைவரும் கற்பு, வறுமை, கீழ்படிதல், மற்றும் "வறியவருக்கு முழு மனதுடனான சேவை" வழங்க வேண்டும் என்பவையான மதப்பிரமாணங்களின்படி நடக்க வேண்டும்.[1]

இன்றளவில் இச்சபை பல நாடுகளில் பல அருட்சகோதர சகோதரிகளடங்கிய சிந்தனை நிலையிலும் முனைப்பிலுமான பல கிளைகளைக் கொண்டுள்ளது. 1963-இல் சிந்தனை நிலையிலான சகோதிரிகள் கிளையும் முனைப்பான சகோதரர் கிளையும் தோற்றுவிக்கப்பட்டது. சகோதரர் கிளை, சகோதரர் ஆண்டிரூ M.C. என்றான ஆஸ்திரேலிய இயேசு சபை அருட்தந்தை இயான் டிராவர்ஸ்-பால் S.J-வால் இணை-நிறுவப்பட்டது.[2] 1979-இல் சகோதரர்களுக்கான சிந்தனை நிலை கிளை சேர்க்கப்பட்டது; மேலும் 1984-இல் மதகுருமார் பணி மற்றும் பிறரன்பு பணியாளர் பணி இரண்டனையும் இணைத்ததாக பிறரன்பு பணியாளர் அருட்தந்தைகள் என்ற மதகுருமார் கிளையையும்,[3] அன்னை தெரேசா மற்றும் அ.த. ஜோசப் லாங்க்ஃபோர்டு இணைந்து தோற்றுவித்தனர். அருட்சகோதரிகளைப் போலவே அருட்தந்தைகளும் தொலைக்காட்சி, வானொலி போன்ற வசதிகளற்ற எளிய வாழ்வுமுறையைக் கடைபிடித்தனர். புகைபிடித்தல் மற்றும் மதுஅருந்துதலையும் தவிர்த்து, உணவினையும் இரந்தே பெறுவர். தத்தம் குடும்பங்களை ஐந்தாண்டுகளுக்கொருமுறை சந்திப்பர்; ஆண்டு தோறும் விடுமுறைகள் மேற்கொள்வதில்லை.[4] பாமர கத்தொலிக்கரும் கத்தொலிக்கரல்லாதோரும் அன்னை தெரேசாவின் இணை-பணியாளர், பிணி மற்றும் வாடும் இணை-பணியாளர் மற்றும் பாமர பிறரன்பு பணியாளர் ஆகிய அமைப்புகளில் அடங்குவர்.

பணியாளர்கள் அகதிகள், முன்னாள்-விலைமாதர், உளப்பிறழ்ச்சியுடையோர், நோயுற்றக் குழந்தைகள், கைவிடப்பட்டக் குழந்தைகள், தொழுநோயாளிகள், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர், முதியோர், மற்றும் நோயிலிருந்து மீள்பவர் உள்ளிட்டோரைப் பேணுவர். தன்னார்வத் தொண்டர்கள் துணையோடு தெருப்பிள்ளைகளுக்கான பள்ளிகளை நடத்துதல்; அன்னதான அமைப்புகளை நடத்துதல் போன்ற பல சேவைகளை சமுதாயத்தின் தேவைகளைப் பொருத்து மேற்கொள்வர். பெண்களுக்கான இல்லம், அனாதை இல்லம், இறப்போர் இல்லம், எய்ட்ஸ் நல்வாழ்வு மையம்,  தெருக் குழந்தைகள் பள்ளி, தொழுநோயாளிகள் காப்பகம் என கொல்கத்தாவில மட்டும் 19 இல்லங்களை இவ்வமைப்பு நடத்திவருகிறது. இச்சேவைகள் அனைத்தும் சாதி மத பேதமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது.

பிறரன்பு பணியாளராதல்

ஒரு முழு பிறரன்பு பணியாளராக ஒன்பதாண்டு காலம் பிடிக்கும். துவக்கத்தில் பணியாளர் வாழ்வில் ஆர்வமுள்ள எவரும் குறுகிய கால "பார்த்து செல்"லும் அனுபவத்தை மேற்கொள்ளலாம். பின்னும் அவ்விளம்பெண்கள் அமைப்பில் சேர விரும்பி, மதச்சபையால் சாத்தியமுள்ள வேட்பாளராகக் கருதப்பட்டால், விழைவு கட்டத்துள் நுழைவர். இந்நிலையில் அவர்களது கிறித்துவ வாழ்க்கை முறை ஆழப்படுத்தப்படுவதோடு, ஆங்கில மொழியல்லாத நாடுகளைச் சேர்ந்தோருக்கு ஆங்கிலப் பயிற்சியும் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து மதச்சபை வேட்பாளராதல் என்ற நிலையில் புனித விவிலிய வர்ணனைகள், சமூகத்தின் நிர்ணய ஆவணங்கள், தேவாலய வரலாறு, மற்றும் இறையியல் முதலியவை குறித்த கல்வி அறிமுகப்படுத்தப்படும். தகுதியுடையோர் உண்மையான மத வாழ்வான துறவுபுகு நிலையை அடைவர். புதுத் துறவிகள் இடைக்கச்சையுடனான பருத்தி அங்கி, நீல பட்டைகளற்ற வெள்ளைப் புடவைகள் உடுத்துவர். ஒழுங்குமுறை என்றழைக்கப்படும் முதலாண்டில் இறை உறவையும் செபவாழ்வையும் மேம்படுத்துப்படுவதோடு அமைப்பு குறித்த அறிவும் போதிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் அருட்பணி வாழ்விற்குத் தேவையான செயல்முறைப் பயிற்சிக்கே பெரிதும் கவனமளிக்கப்படும். இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ஆண்டுதோறும் (ஐந்து ஆண்டுகளுக்கு) புதுப்பிக்கப்படும் ஓராண்டிற்கான தற்காலிக சத்தியப் பிரமாணத்தை மேற்கொள்வர். அப்போது மதச்சபையின் நீலப் பட்டை சரிகை பொருந்திய வெண்புடவையும், கிறித்துமீதான தம் இல்லற அன்பின் அடையாளமாக ஒரு உலோகச் சிலுவையும் வழங்கப்படும். ஆறாம் ஆண்டில் அவர்கள், துறவு முழுமை பெறல் பொருட்டு, ஓராண்டு ஆழ்ந்த ஆன்மிக மேம்பட்டிற்காக உரோமிற்கோ, கொல்கத்தாவிற்கோ அல்லது வாஷிங்க்டன் டி.சி-க்கோ பயணப்படுவர்; இவ்வாண்டு இறுதியில் தம் இறுதிப் பணியை மேற்கொள்வர்.

பொருளுடைமகள்

ஒரு அருட்சகோதரியின் உடைமைகளுள் அடங்கியவை: மூன்று புடவைகள் (உடுத்த, துவைக்க, சீரமைக்க ஒவ்வொன்று); இரண்டல்லது மூன்று பருத்தி அங்கிகள்; ஒரு அரைக்கச்சை; ஒரு ஜோடி செருப்புகள்; ஒரு திருச்சிலுவை; மற்றும் ஒரு செபமாலை. மேலும் ஒரு தட்டு, சில வெட்டுக்கருவிகள், ஒரு துடைப்பக்குட்டை, ஒரு துணிப்பை மற்றும் ஒரு செப புத்தகத்தையும் தம் வசம் வைத்திருப்பர். குளிர் பகுதிகளில் சகோதரிகள் ஒரு கம்பளிச்சட்டை மற்றும் அப்பகுதி தட்பவெட்ப நிலையைப் பொருத்து மேலங்கிகளும் பாதக்குரடுகளும் உடன் வைத்திருப்பர்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்