தோல்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°42′N 77°54′E / 26.700°N 77.900°E / 26.700; 77.900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Rajastan Dholpur district.png|400px|thumb|[[இராஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2: வரிசை 2:
[[File:Rajastan Dholpur district.png|400px|thumb|[[இராஸ்தான்]] மாநிலத்தில் தோல்பூர் மாவட்டத்தின் அமைவிடம்]]
[[File:Rajastan Dholpur district.png|400px|thumb|[[இராஸ்தான்]] மாநிலத்தில் தோல்பூர் மாவட்டத்தின் அமைவிடம்]]
'''தோல்பூர் மாவட்டம்''' (Dholpur District) மேற்கு [[இந்தியா]]வில் அமைந்துள்ள [[இராஜஸ்தான்]] மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் '''தோல்பூர்''' ஆகும்.
'''தோல்பூர் மாவட்டம்''' (Dholpur District) மேற்கு [[இந்தியா]]வில் அமைந்துள்ள [[இராஜஸ்தான்]] மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் '''தோல்பூர்''' ஆகும்.
இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டம் மணற்பாறைகள் போன்ற கனிமங்கள் அதிக அளவில் கொண்டது. வேளாண்மையை நம்பி இதன் பொருளாதாரம் அமைந்துள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் [[பரத்பூர்]] கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டம் மணற்பாறைகள் போன்ற கனிமங்கள் அதிக அளவில் கொண்டது. வேளாண்மையை நம்பி இதன் பொருளாதாரம் அமைந்துள்ளது.


==மாவட்ட எல்லைகள்==
==மாவட்ட எல்லைகள்==

10:03, 26 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

இராஸ்தான் மாநிலத்தில் தோல்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

தோல்பூர் மாவட்டம் (Dholpur District) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் தோல்பூர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் பரத்பூர் கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டம் மணற்பாறைகள் போன்ற கனிமங்கள் அதிக அளவில் கொண்டது. வேளாண்மையை நம்பி இதன் பொருளாதாரம் அமைந்துள்ளது.

மாவட்ட எல்லைகள்

உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் எல்லையில் அமைந்த தோல்பூர் மாவட்டத்தின் தெற்கெல்லையாக சம்பல் ஆறு உள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கிலும், வடகிழக்கில் உத்திரப் பிரதேசம், வடகிழக்கில் பரத்பூர் மாவட்டம், வடக்கில் கரௌலி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தோல்பூர் மாவட்டம் தோல்பூர், பாரி, ராஜாகேரா, சேபௌ மற்றும் பசேரி என ஐந்து வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 825 கிராமங்களையும் கொண்டது. [1]

பொருளாதாரம்

இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக இம்மாவட்டத்தையும் 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது. [2]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,206,516 1,206,516 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 79.49% மக்களும்; நகரப்புறங்களில் 20.51% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 22.71% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 653,647 ஆண்களும்; 552,869 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 846 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 3,033 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 398 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 69.08 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.22 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 54.67% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 217,613 ஆக உள்ளது. [3]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,127,520 (93.45 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 72,258 (5.99 %) ஆகவும்; சமண சமய ; சீக்கிய சமய மக்கள் தொகை; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. http://vlist.in/district/106.html
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
  3. Dhaulpur (Dholpur) District : Census 2011 data

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்பூர்_மாவட்டம்&oldid=2056447" இலிருந்து மீள்விக்கப்பட்டது