கோசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: 200px|அமைவிடம் '''கோசோத் தீவு''', [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் க...
(வேறுபாடு ஏதுமில்லை)

11:45, 18 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

அமைவிடம் கோசோத் தீவு, மத்தியதரைக் கடலில் உள்ள, மோல்ட்டாத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். தென் ஐரோப்பிய நாடான மால்ட்டாவின் ஒரு பகுதியான இத் தீவு, மால்ட்டாத் தீவுக்கு அடுத்தபடியாக இந் நாட்டின் இரண்டாவது பெரிய தீவு ஆகும். மால்ட்டாத் தீவுடன் ஒப்பிடும்போது கோசோ நாட்டுப்புறப் பகுதியாகும். இது அழகான காட்சிகளைக் கொண்ட மலைகளுக்குப் பெயர் பெற்றது. கிரேக்க இலக்கியமான ஹோமரின் ஒடிசியில் வரும் கதை மாந்தர்களில் ஒருவனின் பெயரைத் தழுவி இத் தீவு கலிப்சோத் தீவு எனவும் அழிக்கப்படுவது உண்டு.


மோல்டா நாட்டின் மொத்த மக்கள்தொகையான 402,000 இல் கோசோ 31,000 மக்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் கோசித்தான்கள் எனப்படுகின்றனர். இத்தீவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. கண்டிஜாக் கோயில்கள் இவற்றுள் சிறப்புப் பெற்றவை. உலகின் மிகப் பழைமையான தனித்து நிற்கும் அமைப்புக்களாகவும், மிகப் பழைய சமயம் சார்ந்த கட்டிடங்களாகவும் இக் கோயில்கள் விளங்குகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசோ&oldid=204689" இலிருந்து மீள்விக்கப்பட்டது