"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
*திருத்தம்*
சி (disambiguation links fixed)
சி (*திருத்தம்*)
'''இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்''' (''Anti-Hindi imposition agitations'') என்பது [[இந்தி]] மொழியை, [[இந்தியா]]வின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் [[இந்தி மொழி]] பேசாத மாநிலங்களின் [[கல்வி]]ப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் [[இந்தியா|இந்திய அரசின்]] முயற்சிக்கு எதிராகத் [[தமிழ்நாடு|தமிழக]] மக்களால், பெரும்பாலும் [[சனநாயகம்|சனநாயக, அற]] வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும்.
 
[[1937]]ஆம் ஆண்டு முதல் முறையாக [[இந்தி]]த் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] முதல்முறையாக வெற்றிபெற்ற [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுக்]] கட்சியின் [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி]] தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய [[நீதிக்கட்சி]]யும் [[ஈ. வெ. ராமசாமி|பெரியார் ஈ. வெ. இராமசாமி]]யும் மூன்று ஆண்டுகள் [[உண்ணாநோன்பு]], மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; [[பெண்]]கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு [[1939]]ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' [[பிப்ரவரி]] [[1940]]ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.
 
[[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியாவிலிருந்து]] இந்தியா விடுதலை பெற்ற பிறகு [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|அரசியலமைப்பு சட்டமன்றத்தில்]] புதிய [[இந்திய அரசு|இந்தியக் குடியரசில்]] நிலவ வேண்டிய அலுவல்மொழி குறித்து நீண்ட விவாதம் நடந்தது. பற்பல உரையாடல்களுக்குப் பின்னர் [[தேவநாகரி]] எழுத்துருவில் அமைந்த [[இந்தி]] அரசுப்பணி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு [[ஆங்கிலம்]] இணை அலுவல்மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளபட்டது. புதிய [[இந்திய அரசியலமைப்பு]] [[சனவரி]] 26, 1950 அன்று நடப்பிற்கு வந்தது. ஆகவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொண்டபடி 1965 ஆண்டிலிருந்து இந்தி மட்டுமே அரசுப்பணிமொழியாக விளங்க அரசு மேற்கோண்ட முயற்சிகள் இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலைகளை உண்டாக்கின. [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்]] இந்த எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது. இந்தக் கவலைகளை நீக்கும் விதமாக அப்போதைய [[இந்தியப் பிரதமர்]] [[ஜவஹர்லால் நேரு]] 1963ஆம் ஆண்டில் கொண்டு வந்த அரசுப்பணிமொழி சட்டத்தில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் [[ஆங்கிலம்]] அரசுமொழியாக விளங்க வழி செய்தார். ஆயினும் அச்சட்டத்தின் உள்ளடக்கம் தி.மு.க விற்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அவரது வாய்மொழி வாக்குறுதிகள் பிந்தைய அரசுகளால் ஏற்கப்படாமல் போகலாம் என்ற அச்சத்தினை வெளியிட்டனர்.
1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது. 1967ஆம் ஆண்டு நடந்த [[சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967|பொதுத்தேர்தலிலும்]] [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|சட்டப்பேரவைத் தேர்தலிலும்]] [[தி.மு.க]] பெரும் வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் காங்கிரசால் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. 1967ஆம் ஆண்டு அமைந்த [[இந்திரா காந்தி]] தலைமையிலான இந்திய அரசு, அரசுப்பணிமொழிச் சட்டத்தில் என்றென்றும் [[ஆங்கிலம்]], [[இந்தி]] ஆகிய இரு மொழிகளும் [[இந்தியாவின் அலுவல் மொழிகள்|அரசுமொழிகளாக]] விளங்கும் வகையில் திருத்தம் கொண்டுவந்தது.
 
==பின்னணி==
[[File:Gandhi and Nehru 1942.jpg|thumb|right|250px|இந்துஸ்தானி ஆதரவாளர்கள் - நேருவும் காந்தியும்]]
[[இந்தியா|இந்தியக் குடியரசில்]] பல்லாயிரக்கணக்கான [[மொழி]]கள் பேசப்படுகின்றன. 2001ஆம் ஆண்டு [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின்படி 1,635 தாய்மொழிகளும் 10,000 பேருக்கும் கூடுதலான பேசுபவர்களைக் கொண்ட 122 மொழிகளும் உள்ளதாக அறியப்பட்டது.<ref name="census">{{cite web
| title = Census of India 2001 - General Note
| publisher = Department of Education, Government of India
| date =
| accessdate = 2009-11-24
}}</ref> பிரித்தானிய ஆட்சியின்போது [[ஆங்கிலம்]] மட்டுமே அரசுமொழியாக விளங்கி வந்தது. [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தினர்]] இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளிலேயே இந்தியாவின் பல்வேறு மொழியினரையும் பிரித்தானியருக்கு எதிராக ஒன்றிணைக்க, உள்நாட்டு மொழி ஒன்றினைப் பொதுமொழியாக ஆக்கிட விருப்பம் கொண்டு [[இந்தி]]யும் [[உருது]]வும் கலந்த ''[[இந்துஸ்தானி]]'' என்ற மொழியை ஆதரித்தனர். இந்த அடிப்படையிலேயே 1918ஆம் ஆண்டு [[மகாத்மா காந்தி]] ''தட்சிண பாரத் இந்திப் பிரச்சார சபா'' என்ற அமைப்பை உருவாக்கினார். [[இந்திய தேசிய காங்கிரசு]] 1925ஆம் ஆண்டு முதல் தனது நிகழ்வுகளை இந்துஸ்தானியில் மேற்கொள்ளத் துவங்கியது.<ref name="ramaswamy421">{{Harvnb|Ramaswamy|1997| loc=ch. 4.21 (Battling the Demoness Hindi)}}</ref> [[காந்தி]] மற்றும் [[நேரு]] இருவருமே இந்துஸ்தானியை [[இந்தி]] பேசாத மாநிலங்களில் பரப்புவதில் விருப்பமுடையவர்களாக இருந்தனர்.<ref name="nehru1">{{cite book | first=Jawaharlal| last=Nehru| first2=Mohandas| last2=Gandhi| authorlink=ஜவஹர்லால் நேரு | coauthors= | origyear=| year=1937| title= The question of language: Issue 6 of Congress political and economic studies|edition= | publisher=K. M. Ashraf| location= | id= | pages= | url =http://books.google.com/books?id=R5upQgAACAAJ}}</ref><ref name="guha1">{{Harvnb|Guha|2008|pp=128-131}}</ref><ref name="ghose">{{cite book | first=Sankar| last=Ghose| authorlink= | coauthors= | origyear=| year= 1993| title= Jawaharlal Nehru, a biography |edition= | publisher=Allied Publishers| location= | id= ISBN 8170233690, ISBN 9788170233695| pages=216| url =http://books.google.com/books?id=MUeyUhVGIDMC&pg=PA216}}</ref> இம்முயற்சி தமிழரை வட இந்தியர்களுக்கு அடிமையாக்குவதாகக் கருதிய [[பெரியார்|பெரியார் ஈ.வெ.ராவிற்கு]], இந்தி அல்லது இந்துஸ்தானியைப் பொதுமொழியாக்குவதில் உடன்பாடில்லை.<ref name="saraswathi">{{cite book | first=Srinivasan| last=Saraswathi| authorlink= | coauthors= | origyear=| year= 1994| title= Towards self-respect: Periyar EVR on a new world |edition= | publisher=Institute of South Indian Studies| location= | id= | pages=88–89| url =http://books.google.com/books?id=KRgLNgAACAAJ}}</ref>
 
==1937ல் முதலாம் எதிர்ப்பு போராட்டங்கள்==
1937ஆம் ஆண்டு [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937|தேர்தலில்]] காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய [[தமிழகம்|தமிழகத்தையும்]], தெற்கு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]] பகுதிகளையும் உள்ளடக்கியது ), முதலமைச்சராக [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] 14 சூலை 1937ஆம் நாள் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே இந்தி பயிலவேண்டியதின் தேவையை விளக்கி வந்தார். அரசுப்பணிகள் குறைவாகவே இருக்கும். தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார்துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத்தேவையானது என ([[சுதேசமித்திரன்]] பத்திரிகையில் மே 6, 1937) எழுதியிருந்தார்.<ref name="more">{{Harvnb|More|1997| pp=156-159}}</ref>.அதன்படியே தாம் பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார்<ref name="venu2">{{cite book | first= E.Es. | last=Venu| authorlink=| coauthors= | origyear=| year=1979| title= Why South opposes Hindi|edition= | publisher=Justice Publications| location= | id= | pages=54| url=http://books.google.com/books?id=83xIAAAAMAAJ}}</ref>.<ref name="more"/>
1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது. <ref name="student">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 511-512</ref>
 
1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன.<ref name="ramaswamy421"/>. [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜியின்]] இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, [[மறைமலை அடிகள்]], பாவேந்தர் [[பாரதிதாசன்]] மற்றும் முத்தமிழ் காவலர் [[கி. ஆ. பெ. விசுவநாதம்]] ஆகியோர் [[திருச்சி]]யில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். [[சென்னை]]யில் நீதிக்கட்சியைச் சேர்ந்த [[ஏ. டி. பன்னீர் செல்வம்]], [[பெரியார்|ஈ.வே.ரா பெரியார்]] ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், [[வழக்குரைஞர்]]களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] 21 [[ஏப்ரல்]], 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் [[இந்தி]]யைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 3, [[திசம்பர்]] 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.<ref name="baliga1">{{cite book | first= B. S. | last=Baliga| authorlink=| coauthors= | origyear=| year=2000| title=Madras district gazetteers, Volume 10,Part 1|edition= | publisher=Superintendent, Govt. Press| location= | id= | pages=244| url=http://books.google.com/books?id=jBxuAAAAMAAJ}}</ref> சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.<ref name="more"/> 1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவல் நிலையத்திலேயே இறந்தனர். பிற்பாடு இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்றழைக்கப்பட்டனர். பெரியார் உட்பட 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.
 
===பொது மக்கள் கருத்து===
இந்தி கட்டாயப்பாடமாகத் திணிக்கப்பட்ட அப்போதைய காலகட்டத்தில் நாட்டுப்புற மாணவ மாணவியருக்கு ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி மட்டுமே கிடைத்தது. நகர்புறத்திலோ மூன்றாம் வகுப்பிலேயே ஆங்கிலமும் சொல்லித்தரப்பட்டது. தாய்மொழி வழிக் கல்வி மட்டுமே கற்று ஐந்தாம் வகுப்பு முடிந்து, நகர்ப்புறத்து உயர்நிலைப் பள்ளிகளில் சேரச்செல்லும் போது மூன்றாம் வகுப்பிலேயே இக்குழந்தைகள் சேர்க்கப்பட்ட சூழ்நிலையும் இருந்துவந்தது.
 
கிராமத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு ஆறாம் வகுப்பு பயிலச் செல்லும் நாட்டுப்புறக் குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி என இரு புதிய மொழிகளைக் கற்பதில் சிரமம் எழும். அதே சமயம் நகர்ப்புறக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆங்கில மொழிப் பரிச்சயம் இருப்பதால் கிராமத்துக் குழந்தைகளை விட முன்னேறிச் செல்லும் சூழல் ஏற்படும்.எனவே இந்தி மொழித் திணிப்பு கிராமத்தினரை முன்னேற விடாமல் தடுக்கும் சூழலை ஏற்படுத்துவதாக பொது மக்கள் கருதினர்.
<ref name="student2">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 513-516</ref>
 
===போராட்டத்திற்கு பேராதரவு===
[[File:Periyar with Jinnah and Ambedkar.JPG‎JPG|thumb|300px|right|alt=ஓர் சிறிய மேசையைச் சுற்றி ஐவர் அமர்ந்துள்ளனர்.நால்வர் மேற்கத்திய உடைகளில், ஒருவர் மட்டும் நீண்ட தாடியுடன் வேட்டி,துண்டு அணிந்துள்ளார்.|'''போராட்டத்திற்கு ஆதரவு வேண்டல்''' : மும்பையில் ஜின்னாவின் இல்லத்தில் பெரியார் [[முகமது அலி ஜின்னா]] மற்றும் [[அம்பேத்கர்|பி.ஆர்.அம்பேத்கருடன்]] (8 சனவரி 1940)<ref name="more2">{{Harvnb|More|1997| p=172}}</ref>]]
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கமும்]] நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் [[மறைமலையடிகள்]], [[சோமசுந்தர பாரதியார்]], [[கா. அப்பாதுரை]], [[முடியரசன்]], [[சி. இலக்குவனார்|இலக்குவனார்]] போன்றோர் ஆதரவளித்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். [[மூவலூர் ராமாமிருதம்]], நாராயணி, வ. ப. தாமரைக்கனி, முன்னகர் அழகியார், டாக்டர். தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதாம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில மகளிராவர்.<ref name="sarkar">{{cite book | first=Tanika| last=Sarkar| authorlink=| coauthors= | origyear=| year=2008| title=Women and social reform in modern India: a reader |edition= | publisher=Indiana University Press| location= | id= ISBN 0253220491, ISBN 9780253220493| pages=396| url=http://books.google.com/books?id=JLGBUEs74n4C}}</ref> 13 நவம்பர் 1938ல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் கூட்டப்பட்டது.<ref name="ramaswamy522">{{Harvnb|Ramaswamy|1997| loc=ch. 5.22 (The Woman Devotee)}}</ref><ref name="srilata">{{cite book | first=K.| last=Srilata| authorlink=| coauthors= | origyear=| year=2003| title=The other half of the coconut: women writing self-respect history : an anthology of self-respect literature (1928-1936) |edition= | publisher=Zubaan| location= | id= ISBN 818670650X ISBN 9788186706503| pages=11–12| url=http://books.google.com/books?id=4AOnhw_0UREC&pg=PA11}}</ref> போராட்டக்காரர்களின் பிராமணர் எதிர்ப்பு உணர்வுகளுக்கிடையிலும் [[காஞ்சிபுரம்|காஞ்சி]] ராஜகோபாலாச்சாரியார் போன்ற சில பிராமணர்களும் போராட்டத்திற்குத் துணை நின்றனர்.<ref name="ramaswamy530">{{Harvnb|Ramaswamy|1997| loc=ch. 5.30 (The Devotee as Martyr)}}</ref>
 
[[File:Rajaji1939.jpg|right|thumb|260px|1939ல் ராஜாஜி]]
இந்திப் பிரச்சினையில் ஆளும் காங்கிரசு கட்சியிலும் பிளவு இருந்தது. இராசாசியும் அவரது ஆதரவாளர்களும் இதில் உறுதியாக இருந்தபோதும் [[சத்தியமூர்த்தி]]யும் [[சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்|சர்வபள்ளி இராதாகிருஷ்ணனும்]] இதற்கு எதிராக இருந்தனர். அவர்கள் [[இந்தி]]யை விருப்பப்பாடமாகவோ அல்லது பெற்றோர்கள் தம் சிறுவர்களை இந்திப் பாடத்திலிருந்து விலக்கிக்கொள்ள அனுமதி கோரும் விதிகளைக் கொண்டதாகவோ திருத்தக் கோரினர். [[சத்தியமூர்த்தி]] போராட்டக்காரர்களுக்கு எதிராக குற்றவியல் சட்ட திருத்தம்,1932 படி நடவடிக்கை எடுப்பதையும் எதிர்த்தார்.<ref name="ramanathan"/> அவர் [[காந்தி]]க்கு சூலை 7,1938 அன்று எழுதிய கடிதத்தில்:
<blockquote>எவரது பெற்றோரோ காப்பாளரோ ஓர் [[நீதிபதி]]யின் முன்னிலையில் தன்னுடைய மகனோ மகளோ கட்டாயமாக [[இந்துஸ்தானி]] கற்பது தனது மனசாட்சிக்குப் புறம்பானது என்று காரணம் கூறி உறுதிமொழி வழங்குவாரேயானால் அச்சிறுவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். இத்தகைய விலக்கை வெகு சில பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களே விரும்புவர் என நான் நம்புகிறேன். இது எதிர்ப்பில் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்தி அதனை முறியடிக்கும். இதனை அறிவுரையாக [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|திரு.சி. இராஜகோபாலாச்சாரிக்கு]] நீங்கள் எழுதவேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் மறியல் செய்வோர்மீது மதராஸ் அரசு குற்றச் சட்டம் திருத்த ஆணையைப் பயன்படுத்துவது மகிழ்ச்சி தரவில்லை <ref name="ramanathan">{{cite book | first=K.V.| last=Ramanathan| authorlink=| coauthors= | origyear=| year=2008| title=The Satyamurti Letters, Volume II |edition= | publisher=Pearson Education India| location= | id= ISBN 8131716848 ISBN 9788131716847| pages=3,34| url=http://books.google.com/books?id=glA6t2p7arwC}}</ref></blockquote> எனக் குறிப்பிட்டிருந்தார்.
 
[[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] தமது செய்கைகளை 14 சூன் 1938 அரசாணையில் இவ்வாறு விளக்கியிருந்தார்:
<blockquote> இந்திய தேசிய வாழ்வில் இம்மாநிலம் தனக்கு சரியான இடத்தைப் பெற, நமது கல்விபெற்ற இளைஞர்கள் இந்தியாவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியில் நடைமுறை அறிவு பெற்றிருத்தல் இன்றியமைததாகும். எனவே அரசு நமது மாநில இடைநிலைப்பள்ளி பாடதிட்டத்தில் [[இந்துஸ்தானி]]யைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. எந்தவொரு தொடக்கப்பள்ளியிலும் இந்திப்பாடம் இருக்காது, [[தாய்மொழி]]யில் மட்டுமே கற்பிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த அரசு விரும்புகிறது. [[இந்தி]] இடைநிலைப்பள்ளிகளில் மட்டுமே அதுவும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் படிவங்களில், அதாவது பள்ளிவாழ்வின் 6வது, 7வது, 8வது ஆண்டுகளிலேயே அறிமுகப்படுத்தப்படும். எனவே இடைநிலைப்பள்ளிகளிலும் [[தாய்மொழி]]க் [[கல்வி]]க்கு இது எந்தவிதத்திலும் குறிக்கீடாக இருக்காது. [[இந்தி]] வகுப்புகளில் வருகை கட்டாயம் என்றளவில் மட்டுமே கட்டாயமே தவிர மாணவர்கள் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]] அல்லது [[கன்னடம்|கன்னடத்திற்கு]] மாற்றாக இந்திப் பாடத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது, அவற்றில் ஒன்றுடன் கூடுதலாகவே இந்தியைப் பயிலவேண்டும்.<ref name="ramaswamy421"/></blockquote>
 
அவர் போராட்டக்காரர்களின் குறைகளைக் கேட்க மறுத்தார். அவர்கள் தங்கள் "ஆரிய எதிர்ப்பு சாய்வு"களாலும் "காங்கிரசு வெறுப்பினாலும்" தூண்டப்பட்டவர்களாக இருப்பதாகக் கூறினார்.<ref name="ramaswamy421"/> 1,198 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்;அவர்களில் 1,179 பேர் தண்டிக்கப்பட்டனர். சிறைத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 73 பேர் மகளிராவர். அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளுடன் (32 குழந்தைகள்) சிறை சென்றனர்.<ref name="sarkar"/>). பெரியாருக்கு ஓராண்டு கடும் உழைப்பு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.<ref name="baliga2">{{cite book | first= B. S. | last=Baliga| authorlink=| coauthors= | origyear=| year=2000| title=Tamil Nadu district gazetteers, Volume 2|edition= | publisher=Superintendent, Govt. Press| location= | id= | pages=85| url=http://books.google.com/books?id=M2VDAAAAYAAJ}}</ref> போராட்டக்காரர்களின் கூட்டங்களுக்கு எதிராக [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|இராசாசி]] [[இந்துஸ்தானி]] ஆதரவு கூட்டங்களை ஏற்பாடு செய்தார்.<ref name="more"/>
 
==விளைவுகள்==
பெரியார் சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை ஏற்படுத்தியபோது அதனால் ஈர்க்கப்பட்ட [[ஜெயபிரகாஷ் நாராயண்]] ஈரோட்டிற்கு வந்திருந்து பெரியாரோடு கலந்துரையாடினார். பெரியாரை அனைத்திந்திய சமதர்மக் கட்சியில் சேர்ந்து பணிபுரிய அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அதன்பின் ஏற்பட்ட இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், தமிழக முற்போக்காளர்களும் வட இந்திய முற்போக்காளர்களும் ஒரே அணியில் இருந்து செயல்பட முடியாதபடி பிளவை ஏற்படுத்தி விட்டது. <ref name="student3">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் ;பக்கம் 536</ref>
 
| url = http://164.100.47.132/LssNew/constituent/vol9p33c.html
| title = Constituent Assembly Debate Proceeding (Volume IX) -Tuesday, the 13th September 1949
| author =
| publisher = Ministry of Parliamentary Affairs, Government of India
| accessdate = 2009-11-26
[[இந்தியா]] 15 ஆகத்து 1947 ல் [[அரசியல் விடுதலை|விடுதலை]] பெற்றது. [[இந்திய அரசியலமைப்பு]] 26 சனவரி 1950 நாளிலிருந்து நடப்புக்கு வந்தது.
 
==மொழி ஆணையம் ==
[[இந்தி]]யுடன் [[ஆங்கிலம்|ஆங்கிலமும்]] இணை அலுவலக மொழியாக விளங்கியதை [[இந்தி]] ஆதரவாளர்கள் குறை கூறி வந்தனர்; [[பாரதிய ஜனசங்கம்|பாரதிய ஜனசங்கத்தின்]] நிறுவனர் 'சியாமா பிரசாத் முகர்ஜி' இந்தி மட்டுமே தேசியமொழியாக வேண்டும் என்று கோரினார்.<ref name="prasad1">{{cite book | first=Christophe | last=Jaffrelot| | authorlink= | coauthors= | origyear=| year= 1996| title= The Hindu nationalist movement and Indian politics: 1925 to the 1990s | publisher=C. Hurst & Co Publishers| location= | id= ISBN 1850653011, ISBN 9781850653011| pages=160 | url =http://books.google.com/books?id=uywnx2IHH8cC}}</ref> [[இந்தியக் குடியரசு]] 1950, [[சனவரி]] 26-இல் நிறுவப்பட்டப்பின்னர், இந்தியை அலுவலக மொழியாகப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1952 ஆம் ஆண்டு மத்திய கல்வித்துறை, விருப்பமாக இந்தி பயிலும் திட்டத்தைத் துவக்கியது. 27 மே, 1952ல் நீதிமன்ற பிடியாணைகளில் [[இந்தி]] அறிமுகப்படுத்தப்பட்டது. 1955ஆம் ஆண்டு அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் [[இந்தி]] பயிலும் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 3 [[திசம்பர்]] 1955 முதல் அரசு ''ஒன்றியத்தின் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு'' இந்தியை (ஆங்கிலத்துடன்) பயன்படுத்தத் துவங்கியது."<ref name="timeline1">{{cite web
| url =http://rajbhasha.nic.in/eventseng.htm
| title =Sequence of Events with respect to the Official Language of the Union
| publisher = Ministry of Home Affairs, Government of India
| date =
| accessdate = 2009-11-24
}}</ref>
 
அரசியலமைப்பின் 343வது உட்பிரிவில் வரையறுக்கப்பட்டவாறு, முதல் அலுவலக மொழி ஆணையத்தை பி. ஜி. கேர் என்பவர் தலைமையில் 7 சூன், 1955ல் நேரு அமைத்தார். ஆணையம் தனது அறிக்கையை 31 சூலை, 1956 அன்று அளித்தது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக் கொணர ஆணையம் பல வழிகளைக் குறிப்பிட்டிருந்தது (ஆணையத்தின் இரு இந்தி பேசாத உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து [[பி. சுப்பராயன்]], [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலிருந்து]] சுனிதி குமார் சாட்டர்ஜி, ஒப்புமை இல்லா குறிப்புக்கள் அளித்திருந்தனர்.<ref name="simpson"/>).<ref name="kumar">{{cite book | first=Virendra| last=Kumar| authorlink=| coauthors= | origyear=| year=1993| title= Committees and commissions in India |edition= | publisher=Concept Publishing Company| location= | id= ISBN 8175963123 ISBN 9788175963122| pages=53–66| url=http://books.google.com/books?id=AXa6g_lJOWAC&pg=PA53&lpg=PA53}}</ref> கேர் ஆணைய அறிக்கையை ஆய்வு செய்ய [[கோவிந்த் வல்லப் பந்த்]] தலைமையிலான அரசுமொழிக்கான நாடாளுமன்றக் குழு செப்டம்பர் 1957ல் அமைக்கப்பட்டது. அக்குழு இரு ஆண்டுகள் விவாதித்து 8 பிப்ரவரி 1959ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்டது. அது இந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை துணைமொழியாகவும் பரிந்துரைத்தது. கேர் மற்றும் பந்த் அறிக்கைகள் இரண்டுமே சுனிதி சாட்டர்ஜி, சுப்பராயன், பிராங்க் அந்தோணி போன்ற [[இந்தி]] பேசாத அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1956ஆம் ஆண்டு நடந்த ஓர் மாநாட்டில் '[[தெலுங்கு]] அகாதெமி' இந்தி மட்டும் அலுவலக மொழியாவதை எதிர்த்தது. முன்பு தீவிரமாக இந்தியை ஆதரித்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] இவ்வமயம் ஆங்கில மாற்றாக இந்தி அமைவதற்கு எதிராக, [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[அசாமிய மொழி|அசாமி]], [[ஒரியா]], மராத்தி, கன்னட மற்றும் வங்காள மொழியினரைக் கொண்ட அனைத்திந்திய மாநாடு ஒன்றை 1958ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நடத்தினார். அப்போது "''இந்தி ஆதரவாளர்களுக்கு எவ்வாறு [[ஆங்கிலம்]] அந்நிய மொழியோ அதேயளவில் இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழியே ''என முழங்கினார்."<ref name="annamalai1"/><ref name="simpson">{{cite book | first=Andrew| last=Simpson | authorlink=| coauthors= | origyear=| year=2007| title=Language and national identity in Asia |edition= | publisher=Oxford University Press| location= | id=ISBN 0199267480, ISBN 9780199267484| pages=71| url=http://books.google.com/books?id=F3XvBbdWCKYC}}</ref><ref name="fishman">{{cite book | first=Joshua A. | last=Fishman| first2=Andrew W.| last2=Conrad|first3=Alma| last3=Rubal-Lopez|authorlink=| coauthors= | origyear=| year=1996| title= Post-imperial English: status change in former British and American colonies, 1940-1990 |edition= | publisher=Walter de Gruyter| location= | id= ISBN 3110147548 ISBN 9783110147544| pages=564| url=http://books.google.com/books?id=SIu244rlVu8C&pg=PA564}}</ref>
 
| url =http://www.sangam.org/2009/09/Anna_Centennial_3.php?print=true
| title = Anna in the dock (1953)
| author = Sachi Sri Kantha
| work = Anna's Birth Centennial Anthology Part 3
| publisher = Sangam.org
| title = A script which Karuna would never imagined in TN
| work = [[பிசினஸ் ஸ்டாண்டர்ட்]]
| publisher = Business Standard Ltd
| date = 2009-05-16
| accessdate = 2009-11-24
1963ஆம் ஆண்டு சனவரி 21 அன்று இந்த வரைவுச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. [[திமுக]] உறுப்பினர்கள் வரைவுச்சட்டத்தின் மூன்றாம் அங்கத்தில் ''[[ஆங்கிலம்]] [[இந்தி]]யுடன் தொடர'''லாம்''''' என்றிருப்பதனை எதிர்த்து ''ஆங்கிலம் இந்தியுடன் தொட'''ரும்''''' என மாற்ற வேண்டும் என திருத்தம் கொணர்ந்தனர். தொடரலாம் என்பதைப் பின்வரும் அரசினர் தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளதாக வாதிட்டனர். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் போகலாம் என்றும் கூறினர். [[ஜவஹர்லால் நேரு]] ஆங்கிலச் சொல்லான ''may'' மற்றும் ''shall'' இச்சட்டத்தின் சூழலில் ஒன்றே என வாதிட்டார். விவாதத்தை முன்னெடுத்து நடத்திய மாநில அவை உறுப்பினரும் கட்சித்தலைவருமான [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]], [[ஜவஹர்லால் நேரு]] சொல்வது போல் இருசொற்களின் பொருளும் ஒன்றே என ஒப்புக்கொண்டால் அரசிற்கு ''shall'' என்று மாற்றுவதில் என்ன தயக்கம் என வினவினார். அவர் [[ஆங்கிலம்]] காலவரையற்று தொடரவேண்டுமெனக் கோரினார். அப்போதுதான் அனைவருக்கும் கடினமோ எளிமையோ சமநிலைப்படுத்தப்படும் என்றும் வாதாடினார். ஆனால் திருத்தங்கள் எதுவும் இன்றி ஏப்ரல் 27, 1963 அன்று சட்டம் நிறைவேறியது. தாம் முன்னரே எச்சரித்தபடி, மாநிலம் முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் துவங்கினார்.<ref name="annamalai1"/><ref name="rajagopalan"/><ref name="annadurai">{{cite book | first= C. N.| last=Annadurai| authorlink=C. N. Annadurai| coauthors= | origyear=| year=1975| title=Anna speaks at the Rajya Sabha, 1962-66| publisher=Orient Longman| location= | id= ISBN | pages=65| url=http://books.google.com/books?id=3CwdAAAAMAAJ}}</ref><ref name="hindu1">{{cite news
| url = http://www.hindu.com/mag/2005/01/16/stories/2005011600260300.htm
| title = Hindi against India
| author = Ramachandra Guha
| work = [[தி இந்து]]
 
==இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965==
[[Image:Mathialagan VPRaman Anna Rajaji Karunanidhi.jpg‎jpg|thumb|300px|right|alt= five men and a boy sitting in chairs. Four of the men are middle aged and one is in his seventies. One of the middle aged men is leaning toward and speaking to the old man. | திமுக தலைவர்கள்[[கே. ஏ. மதியழகன்]], வி. பி. ராமன், [[கா. ந. அண்ணாதுரை]], [[மு. கருணாநிதி]] இவர்களுடன் [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]]]]
===சனவரி 26க்கு முந்தைய நிகழ்வுகள்===
இந்தி தன் அலுவல் மொழியாக மாறும் நாளான [[சனவரி]] 26 நெருங்க நெருங்க [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இந்தித் திணிப்பு அச்சங்கள் மேலோங்கி எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கைப் பெருகி போராட்டச் சூழல் உருவானது. சனவரி மாதம் அனைத்து இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்க ''தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம்'' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.<ref name="annamalai1"/><ref name="widmalm">{{cite book | first= Sten | last=Widmalm| authorlink=| coauthors= | origyear=| year=2002| title=Kashmir in comparative perspective: democracy and violent separatism in India| publisher=Routledge| location= | id= ISBN 0700715789 ISBN 9780700715787 | pages=107| url=http://books.google.com/books?id=eOnwrHsyXDQC}}</ref> அதன் உறுப்பினர்களாகத் தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்க தலைவர்கள் இருந்தனர். அவர்களில் சிலர்: [[பெ. சீனிவாசன்]], [[கா. காளிமுத்து]], [[நா. காமராசன்]], [[பா. செயப்பிரகாசம்]], ரவிசந்திரன், [[திருப்பூர் சு. துரைசாமி]], [[சேடப்பட்டி ஆர். முத்தையா]], [[துரை முருகன்]], கே. ராஜா முகமது, நாவளவன், எம். நடராஜன் மற்றும் [[எல்.கணேசன்]] ஆகியோராவர்.<ref name="kalachuvadu">{{cite web
| url =http://www.kalachuvadu.com/issue-106/page32.asp
| title = Interview with Pa. Seyaprakasam
| language = [[தமிழ்|Tamil]]
| work = Kalachuvadu Magazine
 
==1965 போராட்டத்தின் தாக்கம்==
=== உடனடி தாக்கம்===
தமது அமைச்சரவையில் வெளிப்பட்ட திறந்த எதிர்க்குரலுக்குப் பின்னர் [[லால் பகதூர் சாஸ்திரி]] பின்வாங்கி [[பிப்ரவரி]] 11 அன்று [[அனைத்திந்திய வானொலி]]யில் உரையாற்றினார். கலவரங்களைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்து [[ஜவஹர்லால் நேரு]]வின் வாக்குறுதியைப் பேண உறுதி கூறினார். தவிர, மேலும் நான்கு வாக்குறுதிகள் கொடுத்தார்:<ref name="hindu1"/>
 
</blockquote>
 
பின்னர் ஐந்தாவதாக: இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்.<ref name="hindu1"/>
 
அவரது வாக்குறுதிகள் நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவியது. 12 பிப்ரவரியில் மாணவர் சங்கம் தங்கள் போராட்டத்தைக் காலவரையின்றி தள்ளி வைத்தது.<ref name="minerva">{{cite book | first=| last=International Association for Cultural Freedom| | authorlink= | coauthors= | origyear=| year= 1964| title=Gerhard Fleischer d. Jüng|edition= | publisher=Minerva, Volume 3| location= | id= | pages=277 | url =http://books.google.com/books?id=WPsbAAAAIAAJ}}</ref> மேலும் 16 பிப்ரவரியன்று [[சிதம்பரம் சுப்பிரமணியன்|சி.சுப்பிரமணியனும்]] [[ஓ. வி. அழகேசன்|ஓ. வி. அழகேசனும்]] தங்கள் பதவிவிலக்கத்தை மீட்டுக் கொண்டனர். இருப்பினும் [[பிப்ரவரி]] மற்றும் மார்ச் மாதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பும், வன்முறையும் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. மார்ச் 7 அன்று மாநில அரசு மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் மீளப் பெற்றது. 14 மார்ச்சில் மாணவர் சங்கம் தனது போராட்டத்தைக் கைவிட்டது.<ref name="straitstimes1">{{cite web
| title = The Official Languages Act 1963 (As amended on 1967)
| publisher = Ministry of Home Affairs, Government of India
| date =
| accessdate = 2009-11-24
}}</ref> 1963ஆம் ஆண்டு சட்டத்தின் பகுதி மூன்றை மாற்றி அனைத்து அலுவல் நடவடிக்கைகளிலும் ''காலவரையன்றி மெய்நிகர் இருமொழிக் கொள்கையை'' (ஆங்கிலம் மற்றும் இந்தி)<ref name="chandra"/> கடைபிடிக்க உறுதி செய்தது.<ref name="ammon">{{cite book | first=Ulrich| last=Ammon | first2=Marlis | last2=Hellinger|authorlink= | coauthors= | origyear=| year= 1992| title=Status change of languages |edition= | publisher=Walter de Gruyter| location= | id= ISBN 3110126680, ISBN 9783110126686| pages=188 | url =http://books.google.com/books?id=uyY6HJYcEKYC}}</ref>
 
==1968 ஆண்டு போராட்டம்==
1967ஆம் ஆண்டின் சட்டதிருத்தம், மும்மொழித் திட்டத்தினைக் குறித்த கவலைகளை நீக்காததால் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் திருப்தியடையவில்லை. ஆயினும் [[திமுக]] ஆட்சியில் இருந்ததால் மீண்டும் தங்கள் போராட்டங்களைத் துவக்கத் தயங்கினார்கள். [[தமிழ்நாடு]] [[இந்தி]] எதிர்ப்புப் போரட்டச் சங்கம் பல பிரிவுகளாகப் பிளவுபட்டது. மிதவாதிகள் [[கா. ந. அண்ணாதுரை|அண்ணா துரையின்]] அரசை ஆவன செய்ய விடவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். தீவிரவாத பிரிவுகள் போராட்டத்தை மீண்டும் துவக்கின. மும்மொழித் திட்டத்தைக் கைவிட வேண்டும்; இந்திக் கல்வியை நீக்க வேண்டும்; [[தேசிய மாணவர் படை (இந்தியா)|தேசிய மாணவர் படையில்]] (NCC) இந்தி ஆணைகள் இடுவது நிறுத்தப்பட வேண்டும்; இந்தித் திரைப்படங்கள், பாடல்கள் தடை செய்யப்பட வேண்டும்; தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்ப நிறுவப்பட்ட ''தட்சிண இந்தி பிரசார சபை'' மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தில் இறங்கினர்.
 
19 திசம்பர் 1967 அன்று போராட்டம் துவங்கியது. 21 திசம்பர் அன்று போராட்டம் வன்முறையாக மாறியது. அண்ணாதுரை நிலமையைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றார்.<ref name="mitra"/><ref name="madrasreport">{{cite book | first=| last=| authorlink= | coauthors= | origyear=| year= 1968| title= Madras State administration report|edition= | publisher=Govt of Madras| location= | id= | pages=116| url =http://books.google.com/books?id=1nAdAAAAIAAJ}}</ref> 23 சனவரி 1968 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்கண்ட முடிவுகள் இதில் உள்ளடங்கியிருந்தது:<ref>{{cite web
| title = The Madras Legislative Assembly - IV Assembly, 2nd Session, 2nd Meeting (23 January 1968)
| publisher = Government of Tamil Nadu
| date =
| accessdate = 2009-11-24
}}</ref>
| title = National Policy on Education - 1986
| publisher = Ministry of Education Website, Government of India
| date =
| accessdate = 2009-11-24
}}</ref> இந்தக் கொள்கை நாடெங்கிலும் [[ஜவஹர் நவோதயா வித்தியாலயம்|நவோதயா பள்ளிகள்]] நிறுவிட வழி செய்தது. [[திமுக]] இப்பள்ளிகளில் [[இந்தி]] கற்பது கட்டாயமாக்கப்படும் என்று கூறியது.<ref name="deccanchronicle1">{{cite news
| title = The Tamil Nadu Legislative Assembly, XVII Assembly Third Session (12 November - 22 December, 1986)
| publisher = Government of Tamil Nadu
| date =
| accessdate = 2009-11-24
}}</ref><ref name="kumar1">{{Cite journal| first =K.|last=Kumar| title =Anti-Hindi Week| journal =''Economic and Political Weekly''| volume =21| issue = 42| pages = 1838–1839 | publisher =Economic and Political Weekly| date = 18 October, 1986| url = http://www.jstor.org/pss/4376232| accessdate = 8 December 2009}}</ref><ref name="dmk">{{cite web
| title = Anti Hindi Agitation - 1984
| publisher = [[திராவிட முன்னேற்றக் கழகம்]]
| date =
| accessdate = 2009-11-24
}}</ref>
 
[[File:Mozhip por Thiyaagigal mandabam 2.JPG|right|thumb|இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் இறந்தவர்களுக்காக சென்னையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம்]]
1937-40ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அந்நாள் வரை இந்திய தேசியக் காங்கிரசுக்கு மாகாணத்தில் முக்கிய அரசியல் மாற்றாக இருந்து வந்த [[நீதிக்கட்சி]], போராட்டத்தின் போது [[பெரியார்|ஈ. வே. ராமசாமியின்]] கட்டுப்பாட்டில் வந்தது. திசம்பர் 29, 1938ல் அவர் நீதிக்கட்சியின் தலைவரானார்.<ref name="vasantha2">{{Harvnb|Kandasamy|Smarandache|2005| p=109}}</ref> 1944ல் [[நீதிக்கட்சி]] [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகமாக]] மாறியது. [[கா. ந. அண்ணாதுரை]], [[மு. கருணாநிதி]] போன்ற பல திராவிட இயக்கத் தலைவர்களை இப்போராட்டங்களே பொதுவாழ்வுக்கு அறிமுகப்படுத்தின. இப்போராட்டங்கள் சென்னை மாகாணத்தில் இந்தி கட்டாயப் பாடமாவதைத் தடுத்து விட்டன.<ref name="ramaswamy421"/><ref name="ramaswamy530"/>
 
1960களில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், 1967 தேர்தலில் காங்கிரசு தோற்று தமிழ்நாட்டில் [[திமுக]] ஆட்சி உருவாகுவதற்கு வழிவகுத்தன. 1967க்குப் பின் திராவிடக் கட்சிகளே தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் [[திமுக]], [[அதிமுக]], [[மதிமுக]] போன்ற அரசியல் கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் பல தலைவர்கள், இப்போராட்டங்களில் மாணவர் தலைவர்களாகப் பங்கேற்றவர்கள். மேலும் திராவிட இயக்கத்தை பிராமண-ஆரிய எதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிக்கொணர்ந்து அதன் வெகுஜன ஆதரவைப் பெருக்கவும் இப்போராட்டங்கள் உதவின. ”தமிழ் மட்டும்” என்ற திராவிட இயக்கத்தின் கொள்கை இறுக்கத்தை சற்றுத் தளர்த்தி, இந்திக்கு எதிராக ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தன. தற்சமயம் தமிழகத்தில் நடப்பில் இருக்கும் இருமொழி கல்விக் கொள்கை இப்போராட்டங்களால் உருவானதே.
| title =Prof. Sumathi Ramaswamy Faculty Webpage
| publisher = Department of History, [[டியூக் பல்கலைக்கழகம்]]
| date =
| accessdate = 2009-11-24
}}</ref>
ஜூலை 2014 மாதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய(CBSE) பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு(2014) சமஸ்கிருத மொழி வாரத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதம் தாயாக விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் அந்த மொழியை கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றும்படி அறிவுறுத்தப்பட்டது.இந்த நிகழ்வினை தமிழ் மற்றும் திராவிட அமைப்புகள் எதிர்த்தன.
இதுகுறித்து தமிழக முதல்வரான அ.தி.மு.கவினை சார்ந்த சேர்ந்த ஜெயலலிதா நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கண்டனத்தை தெரிவித்தார்.
அதில்
 
{{quotation|தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் மிகவும் வளமான கலாச்சாரம் இருக்கிறது. தமிழ் மொழியை போற்றும் பல்வேறு பேரியக்கங்கள் தமிழகத்தில் இயங்கியிருக்கின்றன, இன்னும் செயல்படுகின்றன. எனவே, இங்கு கடைபிடிப்பது பொருத்தமாக இருக்காது.தமிழகத்தில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்..}}
 
===கல்லூரிகளில் இந்தி கட்டாயம்===
செப்டெம்பர் 2014 இல் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் நடுவண் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது . அத்துறையின் சார்பு செயலாளர் குல்விந்தர் குமார் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையின் மூலமாக
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் இந்தியும், ஆங்கிலமும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும் மேலும் பட்டப்படிப்புகளில் சட்டம், வணிகவியல் ஆகிய பாடங்களை இந்தி வழியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடபட்டிருந்தது.
<ref name="கல்லூரிகளில் இந்தி கட்டாயம்">{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2014/09/19034941/HindiStuffingInitiativeAgainstWill-defeatJayalalithaaReport.vpf | title=கல்லூரிகளில் இந்தி கட்டாயம் | publisher=தின தந்தி | work=ஊடகம் | accessdate=20 செப்டம்பர் 2014}}</ref>
{{refbegin}}
* {{cite book |first=Sumathy|last=Ramaswamy|year=1997|date=1997|title= Passions of the tongue: language devotion in Tamil India, 1891-1970|publisher=[[University of Chicago Press]]|ISBN=9780520208056|oclc=36084635|url=http://www.escholarship.org/editions/view?docId=ft5199n9v7;brand=ucpress | ref=harv}}
* {{cite book | first=J.B.P| last=More| authorlink=| coauthors= | origyear=| year=1997| title=Political Evolution of Muslims in Tamilnadu and Madras 1930–1947 |edition= | publisher=[[Orient Longman|Orient Blackswan]]| location= | id= ISBN 8125011927 ISBN 9788125011927| url=http://books.google.com/books?id=QDht7OyOjXMC}}| ref=harv |OCLC=37770527}}
* {{cite book | first=Ramachandra| last=Guha| | authorlink=Ramachandra Guha | coauthors= | origyear=| year= 2008| title= India after Gandhi: the history of the world's largest democracy|edition= | publisher=[[Harper Perennial]]| location= | id= ISBN 0060958588, ISBN 9780060958589| url =http://books.google.com/books?id=EcSoIAAACAAJ| ref=harv|oclc=76961156}}
* {{cite book | first=W. B. Vasantha| last=Kandasamy | first2=Florentin| last2=Smarandache| authorlink2=Florentin Smarandache| coauthors= | origyear=| year=2005| title=Fuzzy and Neutrosophic Analysis of Periyar's Views on Untouchability |edition= | publisher=American Research Press| location= | id=ISBN 1931233004, ISBN 9781931233002| url=http://books.google.com/books?id=hgb-MKcsSR0C| ref=harv|oclc=125408444}}
{{refend}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் எதிர்ப்புப் போராட்டங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
[[பகுப்பு:தமிழ் மொழி வரலாறு]]
[[பகுப்பு:இந்தியாவில் சமூக இயக்கங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2018952" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி