புத்தத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி Vinodh.vinodhஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 47: வரிசை 47:

==== புத்தரை கடவுளாக கருதுதல் ====
==== புத்தரை கடவுளாக கருதுதல் ====
பௌத்த அறிமுகமில்லாதோர், புத்தரைப் பௌத்தர்களின் 'கடவுள்' எனத் தவறுதலாக நினைத்துவிடுகின்றனர். எனினும், பௌத்தம் நாத்திக கொள்கையுடையது, கடவுள் என்ற கருத்து பௌத்தத்தில் இல்லை. புத்தர் என்றவர் உயிர்களின் நற்கதிக்கான ஒரு வழிகாட்டி மட்டுமே. அனைத்தையும் படைத்தவர், கட்டுப்படுத்தக்கூடியவர் என்ற நிலையில் 'கடவுள்' என்ற தத்துவம் பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தில் அனைத்துக்கும் காரணம் கர்மமே ஒழிய கடவுள் இல்லை.buddha then had sex with her follower
பௌத்த அறிமுகமில்லாதோர், புத்தரைப் பௌத்தர்களின் 'கடவுள்' எனத் தவறுதலாக நினைத்துவிடுகின்றனர். எனினும், பௌத்தம் நாத்திக கொள்கையுடையது, கடவுள் என்ற கருத்து பௌத்தத்தில் இல்லை. புத்தர் என்றவர் உயிர்களின் நற்கதிக்கான ஒரு வழிகாட்டி மட்டுமே. அனைத்தையும் படைத்தவர், கட்டுப்படுத்தக்கூடியவர் என்ற நிலையில் 'கடவுள்' என்ற தத்துவம் பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தில் அனைத்துக்கும் காரணம் கர்மமே ஒழிய கடவுள் இல்லை.

மகாயான பௌத்தத்தில் புத்தரைக் கடவுளைப் போன்ற ஒரு நிலையில் கருதி அவரை வழிபடுகின்றனர். புத்தர் அனைத்தும் அறிந்தவராய், எங்கும் நிறைந்திருப்பவராய் மகாயான சூத்திரங்கள் புத்தரைக் குறித்துத் தெரிவிக்கின்றன. இந்தச் சித்தரிப்பு 'கடவுள்' என்ற ஒன்றை ஒத்து இருந்தாலும், வேறு சில மதங்களின் கடவுள் என்பவர் உலகத்தை படைத்து, காத்து, அழிப்பவர் என்ற நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டது.

12:57, 9 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

அமர்ந்த புத்தர்

பௌத்தத்தில் புத்தர் என்பது முழுமையாக ஞானம் பெற்றுப் போதி நிலையை அடைந்த ஒருவரைக் குறிக்கும்.

பௌத்த சூத்திரங்களில், பூரண போதி நிலையை அடைந்த அனைவருமே புத்தர் என அழைக்கப்படுகின்றனர். அவ்வப்போது நிர்வாண நிலை அடைந்த அனைவரையும் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.

பௌத்தர்கள் கௌதம புத்தரை மட்டுமே ஒரே புத்தராகக் கருதவில்லை. பாளிச் சூத்திரங்களில் சாக்கியமுனி புத்தருக்கு முன் அவதரித்த 28 புத்தர்கள் குறித்த விவரங்கள் தரப்பட்டுள்ளன. மகாயான பௌத்தம் இதை இன்னும் விரிவாகி, அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் எனப் பல்வேறு புத்தர்களை தன்னுள் இணைத்துக்கொண்டது. அனைத்து பௌத்த பிரிவுகளும் மைத்திரியேரே அடுத்த புத்தர் என ஒன்று சேர்ந்து நம்புகின்றன.

புத்தர்களின் வகைகள்

பாளிச் சூத்திரங்களில் இரண்டுவகையான புத்தர்களே கூறப்பட்டுள்ளனர், ஆனால் உரைகளில் மூன்றாவது வகைப் புத்தரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

  1. சம்யக்சம்புத்தர்கள் (संयक्संबुद्ध): இவர்கள் புத்தநிலையை அடைந்தவுடன், மற்றவர்கள் நற்கதி அடைவதற்காக மக்களுக்குப் போதிப்பர். உலகத்தில் தர்மம் முற்றிலும் மறைந்த நிலையில், இவர்கள் தர்மத்தினை உபதேசிப்பர்.
  1. பிரத்யேகபுத்தர் (प्रत्येकबुद्ध): இவர்களை 'மௌன புத்தர்கள்' எனவும் அழைப்பர். சம்யக்சம்புத்தர்களைப் போலவே இவர்களும் ஆற்றல் பெற்றிருப்பனும், மற்றவர்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கும் இயல்பு இவர்களிடத்தில் இல்லை.
  1. ஸ்ராவகபுத்தர்கள் (श्रावकबुद्ध): சம்யக்சம்புத்தர்களின் போதனையினால் புத்தநிலையை அடைந்தவர்கள் ஸ்ராவக புத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களை அனுபுத்தர் எனவும் அழைப்பர்.

புத்தரின் கூறுகள்

ஒன்பது சிறப்பியல்புகள்

  1. அர்ஹத(அருக) (अर्हत)
  2. சம்யக்சம்புத்த (संयक्संबुद्ध)
  3. வித்யாசரணசம்பன்ன (विद्याचरणसंपन्न)
  4. சுகத (सुगत)
  5. அனுத்தரலோகவித் (अनुत्तरलोकविद्)
  6. அனுத்தரபுருஷசாரதி (अनुत्तरपुरुषदम्यसारति)
  7. சாஸ்திருதேவமனுஷ்யாணாம் (शास्तृदेवमनुष्याणां)
  8. புத்த (बुद्द)
  9. பகவத் (भगवत्)

மனத்தெளிவு

நிற்கும் நிலையில் காந்தார புத்தர்

அனைத்து பௌத்த பிரிவினரும், புத்தர் மனதால் மிகவும் தூய்மையானவர் என கருதுகின்றனர். அவருடைய மனம் ஆசை, பகைமை, அறிவின்மை போன்றவற்றுக்கு அப்பாற்ப்பட்டது. புத்தர் சம்சாரத்திலிருந்து முற்றிலும் விடுப்பட்டவர். வாழ்க்கையின் நிலையின்மையைத் தானும் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அதை போதித்து மக்களுக்கு நற்கதி காட்டுபவர்.

புத்தரின் இயல்புகள்

பாளிச் சூத்திரங்கள்

பாளிச் சூத்திரங்களில் புத்தரின் மனித இயல்புகளே மெச்சப்படுகின்றன. புத்தர் அளவற்ற மன ஆற்றல் பெற்றவராகக் கருதப்படுகிறார். புத்தரின் மனம் மற்றும் உடலும் கூட நிலையற்றவைதான், இருந்தாலும் புத்தர் அந்த நிலையற்ற தன்மையை புரிந்துப் கொண்டவராக உள்ளார். தர்மத்தின் மாற்றமில்லாத தன்மையை முற்றிலும் அறிந்தவராக உள்ளார். இவையே தேரவாத பௌத்தம் மற்றும் ஆதிகால பௌத்த பிரிவுகளின் கருத்துகளாகும்.

புத்தர்களின் தெய்வீக ஆற்றல்கள் பாளிச் சூத்திரங்களில் கூறப்பட்டிருப்பினும், தேரவாத பௌத்தம் அவர்களது மனித இயல்புகளுக்கு முதன்மை அளிக்கிறது. அழிவற்ற புத்தர் என்ற தத்துவம் ஆங்காங்கு பாளிச் சூத்திரங்களில் காணப்படுகிறது.

அழிவற்ற புத்தர்

சாக்கியமுனி புத்தர்

மகாயான பௌத்ததில், புத்தர் அழிவற்றவர். தர்மகாய உருவத்தை கொண்டவர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒருவராக அவர் கருதப்படுகிறார். புத்தர் அனைத்தையும் அறிந்தவராய், எங்கும் நிறைந்திருப்பவராய் கருதப்படுகிறார். இவரது தெய்வீக தன்மைகள் பல்வேறு மஹாயான சூத்திரங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

புத்தரை கடவுளாக கருதுதல்

பௌத்த அறிமுகமில்லாதோர், புத்தரைப் பௌத்தர்களின் 'கடவுள்' எனத் தவறுதலாக நினைத்துவிடுகின்றனர். எனினும், பௌத்தம் நாத்திக கொள்கையுடையது, கடவுள் என்ற கருத்து பௌத்தத்தில் இல்லை. புத்தர் என்றவர் உயிர்களின் நற்கதிக்கான ஒரு வழிகாட்டி மட்டுமே. அனைத்தையும் படைத்தவர், கட்டுப்படுத்தக்கூடியவர் என்ற நிலையில் 'கடவுள்' என்ற தத்துவம் பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தில் அனைத்துக்கும் காரணம் கர்மமே ஒழிய கடவுள் இல்லை.

மகாயான பௌத்தத்தில் புத்தரைக் கடவுளைப் போன்ற ஒரு நிலையில் கருதி அவரை வழிபடுகின்றனர். புத்தர் அனைத்தும் அறிந்தவராய், எங்கும் நிறைந்திருப்பவராய் மகாயான சூத்திரங்கள் புத்தரைக் குறித்துத் தெரிவிக்கின்றன. இந்தச் சித்தரிப்பு 'கடவுள்' என்ற ஒன்றை ஒத்து இருந்தாலும், வேறு சில மதங்களின் கடவுள் என்பவர் உலகத்தை படைத்து, காத்து, அழிப்பவர் என்ற நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டது.

புத்தர்களின் சித்தரிப்பு

புத்த சிலை
புத்த சிலை

புத்தர்கள் சிலைகளாகவோ இல்லை ஓவியங்களாகவோ சித்தரிக்கப்படுகின்ற்னர். புத்தர்கள் கீழ்க்கண்ட நிலைகளில் காணப்படுகின்றனர்.

  • அமர்ந்த நிலை
  • படுத்த நிலை
  • நின்ற நிலை
  • மெலிந்த நிலை

குறியீடுகள்

புத்தர்களைக் குறித்த பெரும்பாலான சித்தரிப்புகளில், அவர்களுடைய போதிநிலையினைக் குறிக்கச் சில சிறப்புக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பிராந்திய வேறுபாடுகள் இருப்பினும், கீழ்க்கண்ட இரு குறியீடுகளை அனைத்துச் சித்தரிப்புகளிலும் காணலாம்.

  • உச்சந்தலையில் புடைப்பு
  • நீளமான செவிகள்

பாளிச் சூத்திரங்களிலும் இவ்வாறாக புத்தரின் 32 குறியீடுகள் விவரிக்கப்பட்டுள்ளன.

முத்திரகைள்

ஒவ்வொரு புத்தருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முத்திரையும் ஆசனமும் இருக்கும். வஜ்ர முத்திரையை தென் - கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையாகக் காணலாம். வரத முத்திரை, அபய முத்திரை பொதுவாக அனைத்துப் புத்தர்களாலும் காட்டப்படுகிறது. சில நேரங்களில் புத்தர்களை அவர்களுடைய முத்திரையை வைத்துதான் இனம் காண்பர்.

மேற்கோள்கள்

  • What the Buddha Taught (Grove Press, Revised edition July 1974), by Walpola Rahula
  • Buddha - The Compassionate Teacher (2002), by K.M.M.Swe

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தத்தன்மை&oldid=201239" இலிருந்து மீள்விக்கப்பட்டது