காத்மாண்டு நகரச் சதுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 27°42′14.67″N 85°18′25.5″E / 27.7040750°N 85.307083°E / 27.7040750; 85.307083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 99: வரிசை 99:
[[பகுப்பு:நேபாளம்]]
[[பகுப்பு:நேபாளம்]]
[[பகுப்பு:இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:தொல்லியற் களங்கள்]]
[[பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:நாடு வாரியாக உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:நாடு வாரியாக உலக பாரம்பரியக் களங்கள்]]

13:23, 17 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

காட்மாண்டு நகர சதுக்கம்
திரிலோக மோகன் நாராயணன் கோயில்
காலைக் கதிரில் ஒளிரும் அனுமந்துகோ
அனுமன் சிலை, அனுமந்துகோ, வசந்தபூர் நகர சதுக்கம், காட்மாண்டு, நேபாளம்
வசந்தபூர் கோபுரம்

அனுமன் தோகா நகர சதுக்கம் அல்லது காத்மாண்டு நகர சதுக்கம் அல்லது வசந்தபூர் நகர சதுக்கம் (Kathmandu Durbar Square) (நேபாளம்); वसन्तपुर दरवार क्षेत्र), Basantapur Darbar Kshetra) நேபாளத்தின் காத்மாண்டு நாட்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது காத்மாண்டு சமவெளியில் உள்ள மூன்று நகர சதுக்கங்களில் ஒன்றாகும். இம்மூன்று நகர சதுக்கங்களும் யுனேஸ்கோவால் உலகப் பாரம்பரியக்களங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.[1][2].மற்ற இரண்டு நகர சதுக்கங்கள் பாதன் நகர சதுக்கம், பக்தபூர் நகர சதுக்கம் ஆகும்.

2015 நேபாள நிலநடுக்கத்தில் இச்சதுக்கத்தில் இருந்த பல கட்டிடங்கள் பலத்த சேமடைந்து விட்டன. காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைச் சுற்றிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அழகிய நேவார் கலைஞர்களாலும், கைவினைஞர்களாலும், கட்டப்பட்ட கட்டிடக்கலையுடன் கூடிய கட்டிடங்கள், கோயில், தூபிகள் அமைந்துள்ளன.[3]

காத்மாண்டு சமவெளியை ஆட்சி செய்த ஷா வம்சத்து மல்லர் மன்னர்களின் அரண்மனைகள் காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் அமைந்துள்ளன. அரண்மனையை ஒட்டி, நகர மைய வணிக வளாகங்கள் எனப்படும் தர்பார் சதுக்கங்களும், முற்றவெளிகளும், கோயில்களும் அமைந்துள்ளன. அரண்மனையின் நுழைவு வாயில் முன், இராமனின் பக்தரான அனுமனின் உருவச்சிலையும், அனுமன் நகர சதுக்கமும் அமைந்துள்ளன.

வரலாறு

கி மு மூன்றாம் நூற்றாண்டில் லிச்சாவி மன்னர்கள் காலத்தில், முதலில் காத்மாண்டு நகர சதுக்கம் கட்டப்பட்டது. பின்னர் வந்த மன்னர்களால் இச்சதுக்கத்தில் இருந்த கட்டிடங்கள் மறுசீரமைக்கப்பட்டது. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. பத்தாம் நூற்றாண்டில் குணகாமதேவன் என்ற மன்னர் காத்மாண்டு நகர சதுக்கத்தை கட்டினார். பின்னர் (1484-1520) வந்த இரத்தின மல்லர், காத்மாண்டு அனுமன் நகர சதுக்கம் அமைந்த இடத்தில் அரண்மனையைக் கட்டினார். 1769இல் பிரிதிவி நாராயணன் ஷா காத்மாண்டு சமவெளியை கைப்பற்றிக் காத்மாண்டு அனுமன் நகரவைச் சதுக்க அரண்மனையில் இருந்து ஆட்சி செய்தார். ஷா வம்சத்து அரசர்கள், தங்களது புதிய அரண்மனையை நாராயணன் ஹிட்டி என்ற நகரத்திற்கு மாற்றும் வரையில் 1896 முடிய அனுமன் நகர சதுக்க அரண்மனையில் இருந்தே காத்மாண்டு பள்ளத்தாக்கை ஆட்சி செய்தனர்.

நேபாளத்தின் புதிய அரசர்கள் பதவி ஏற்கும் போது, காத்மாண்டு அனுமன் நகர சதுக்கத்தில்தான் முடி சூட்டிக்கொள்கின்றனர். 1975இல் வீரேந்திர வீர விக்கிரம ஷாவும், 2001இல் ஞானேதிந்திர வீர விக்கிரம ஷாவும் காத்மாண்டு அனுமன் நகர சதுக்கத்தில் முடிசூட்டிக் கொண்டவர்கள். காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைக் கட்டிய பெருமை 1069 முதல் 1083 முடிய, காத்மாண்டு சமவெளியை ஆண்ட மன்னர் சங்கர் தேவனைச் சாரும். 1501இல் மன்னர் இரத்தின மல்லர், காத்மாண்டு நகரச் சதுக்க அரண்மனையின் வடக்குப் புறத்தில் துளேஜு அம்மன் கோயிலைக் கட்டினார்.

நாராயணன் கோயிலில் இருந்த திருமாலின் விக்கிரகம் காணாமல் போனதால், அக்கோயிலைப் பகவதி அம்மன் கோயிலாக, பிரிதிவி நாராயணன் ஷா எனும் காத்மாண்டு மன்னர் மாற்றி அமைத்தார்.

இச்சதுக்கத்தின் பழமையான கோயில்கள், மகேந்திர மல்லர் 1560-1574இல் எழுப்பியவை. அவை ஜெகன்நாதர் கோயில், கோடிலிங்கேஸ்வர மகாதேவர் கோயில் மற்றும் துளேஜூ கோயில்கள் ஆகும்.

பிரதாப மல்லர் ஆட்சியில்

மல்லர் குல மன்னர் இலட்சுமி நரசிம்மர் மகன் பிரதாப சிம்மர் ஆட்சிக் காலத்தில், காத்மாண்டு நகரச் சதுக்கம் பெரிய அளவில் விரிவடைந்தது. அரண்மனை, பழைய கோயில்கள், நினைவுத்தூண்களை அவர் விரிவுப்படுத்திக் கட்டினார்.

காத்மாண்டு நகர சதுக்கத்தில், இந்திரப்பூர் கோயில் (இடது) மற்றும் விஷ்ணு கோயில் (வலது)

பிரதாப மல்லர் 1692இல் இறந்த பின் அவரது மனைவி இரதிலட்சுமி என்பவர், காத்மாண்டு நகரச் சதுக்கத்திலேயே மிக உயரமான, எழு நிலைகள் கொண்ட மஞ்சு தேவர் எனும் சிவன் கோயிலை நிர்மாணித்தார்.

பிரதாப மல்லரின் மகன் பூபாலந்திர மல்லரின் மனைவி புவனலெட்சுமி, காத்மாண்டு நகரச் சதுக்கத்தில் காகேஸ்வர மகாதேவர் எனும் சிவன் கோயிலைக் கட்டினார். 1934 நிலநடுக்கத்தில் சிதைந்த இக்கோயில் நேவாரி கட்டிடப்பாணியில் மறுசீரமைத்து கட்டப்பட்டது.

குமரி பாஹல் அரண்மனை

காத்மாண்டு சமவெளியின் இறுதி மல்ல மன்னரான ஜெயப்பிரகாஷ் என்பவர் குமரி (சிறுமி) தெய்வத்திற்கும், துர்கைக்கும் கோயில்களை எழுப்பினார். அக்கோயிலை நேவாரி கட்டிடக் கலை நயத்தில், புத்த விகாரம் போன்று எழுப்பி, குமரி பாஹல் கோயில் எனப் பெயரிட்டார். நேபாளிகளால் வாழும் தேவதையாக, குமரியாகப் பார்க்கப்பட்ட அச்சிறுமிக்குச் சுடுமண் ஓடுகளால் வேயப்பட்ட அரண்மனையும், ஒரு தேரும் உருவாக்கப்பட்டது.

ஷா வம்சம்

ஷா வம்சத்தினரது ஆட்சியின் போது, 1770இல் நாராயணன் ஷா மன்னர், காத்மாண்ட் அனுமன் நகரச் சதுக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்தனர். இரண்டு கலைநயமிக்க கோயில்களை எழுப்பினர். அவற்றில் ஒன்று ஒன்பது நிலைகளைக் கொண்ட வசந்தபூர் அரண்மனை சதுக்க கோயில் ஆகும்.

1785 முதல் 1794 முடிய ஆட்சி செய்த மன்னர் ராணா பகதூர் ஷா என்பவர் காத்மாண்ட் அனுமன் சதுக்கத்தில் செவ்வக வடிவத்தில் சிவன் - பார்வதிக்கு கோயில் எழுப்பினார். இக்கோயிலில் 12 அடி உயர பைரவர் சிலையை நிர்மாணித்தார். 1908இல் கட்டி தர்பார் எனும் புதிய அரண்மன ஐரேப்பிய கட்டிடக்கலை நயத்தில் காத்மாண்டு நகரச் சதுக்கத்திற்கு அருகே கட்டப்பட்டது.

மல்லர், ஷா மற்றும் ரானா வம்ச மன்னர்கள் காத்மாண்டு சமவெளியை ஆண்ட காலத்தில், மூன்று நூற்றாண்டுகளில், அனுமன் நகரச் சதுக்கம் அரண்மனைகள், கோயில்கள், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளிகள், முற்றவெளிகள், குளங்கள், உருவச் சிற்பங்களால் நிறைந்து இருந்தது.

பார்க்க வேண்டியவைகள்

காத்மாண்டு அனுமன் நகரச் சதுக்கம் 2013

அனுமன் தோகா அரண்மனை வளாகமே காத்மாண்டு நகரச் சதுக்கம் என்றழைக்கப்படுகிறது. 19வது நூற்றாண்டு வரை நேபாள மன்னர்கள் வசிக்கும் அரண்மனையாக விளங்கியது. மரவேலைப்பாடுகள் கொண்ட அழகிய சன்னல்கள் கொண்ட இந்த அரண்மனையில் திருபுவன் நினைவு அருங்காட்சியகம் மற்றும் மகேந்திர அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு மன்னர்கள் வாழ்ந்த அறைகளையும், கூடங்களையும் காணலாம்.

இயற்கையின் சீற்றத்தால் சிதிலமடைந்த கோயில்களையும், அரண்மனைகளையும் அவ்வப்போது செப்பனிட்டு வந்தாலும், தற்போது பத்திற்கும் குறைவான கட்டிடங்களே காத்மாண்டு அனுமன் நகரச் சதுக்கத்தில் காணப்படுகிறது. காத்மாண்டு அனுமன் நகரச் சதுக்க அரண்மனை, அனுமன் தோகா அரணமனை அருங்காட்சியகம் எனும் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள துளஜா கோயிலில் இந்து மற்றும் பௌத்த சமயத்தினரை மட்டும் அனுமதிக்கின்றனர்.

நகர சதுக்கத்தின் தெற்கு முனையில், ஒரு சிறுமியைத் துர்கையின் அம்சமாகத் தேர்ந்தெடுத்து குமரி எனும் பெயர் சூட்டி, தனி அரண்மனையில் (பூப்படைவது வரை) வைத்து வழிபடுகின்றனர்.

நிலநடுக்கத்தில் காத்மாண்டு நகர சதுக்கம்

25 ஏப்ரல் 2015 அன்று, 7.9 ரிக்டேர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், காத்மாண்டு சமவெளி முழுமையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காத்மாண்டு நகர சதுக்கமும், கட்டிடங்களும் பலத்த சேதமடைந்தது. [4][5]

காத்மாண்ட் சமவெளியில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

காத்மாண்ட் சமவெளியில் அனுமன் தோகா நகர சதுக்கம் உட்பட யுனேஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஏழு உலகப் பாரம்பரியக் களங்கள் அமைந்துள்ளது.[6]அவைகள்;

  1. பக்தபூர் நகர சதுக்கம்
  2. பதான் தர்பார் சதுக்கம்
  3. பசுபதிநாத் கோவில்
  4. சங்கு நாராயணன் கோயில்
  5. பௌத்தநாத்து
  6. சுயம்புநாதர் கோயில்

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Durbar Square
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Properties inscribed on the World Heritage List (4)
  2. Kathmandu Valley
  3. Nepal Handbook by Tom Woodhatch
  4. "'Before' & 'After' images of Nepal's key landmarks show scale of devastation (PHOTOS)". 26 April 2015. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
  5. "Nepal landmarks flattened by the quake". BBC News. http://www.bbc.com/news/world-asia-32463406. 
  6. Kathmandu Valley

வெளி இணைப்புகள்