கௌதம புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: af, ba, bg, cs, da, es, fi, fr, hu, id, jv, nds, sk, sl, sr, th Removing: et, no Modifying: ca, de, en, fa, gl, ja, ko, nl, pl, pt, ro, ru, simple, tpi, uk, vi, zh
வரிசை 29: வரிசை 29:
[[Category:சமயத் தலைவர்கள்]]
[[Category:சமயத் தலைவர்கள்]]


[[af:Boeddha]]

[[ca:Siddharta Gautama]]
[[ba:Будда]]
[[bg:Буда]]
[[de:Siddhartha Gautama]]
[[en:Gautama Buddha]]
[[ca:Buda (il·luminat)]]
[[cs:Buddha]]
[[da:Buddha]]
[[de:Buddha]]
[[en:Buddha]]
[[eo:Budho]]
[[eo:Budho]]
[[es:Buda]]
[[et:Siddhartha Gautama]]
[[fa:گوتاما بودا]]
[[fa:سیدارتا گوتاما]]
[[gl:Siddharta Gautama]]
[[fi:Siddhartha Gautama]]
[[fr:Bouddha]]
[[he:גאוטמה בודהא]]
[[gl:Siddhartha Gautama]]
[[he:גאוטמה בודהא]]
[[hu:Buddha]]
[[id:Buddha]]
[[it:Buddha]]
[[it:Buddha]]
[[ja:釈迦]]
[[ja:仏陀]]
[[jv:Buddha]]
[[ko:석가모니]]
[[nl:Gautama Boeddha]]
[[ko:부처]]
[[nds:Buddha]]
[[no:Siddharta Gautama]]
[[pl:Budda Siakjamuni]]
[[nl:Boeddha]]
[[pl:Budda]]
[[pt:Siddhartha Gautama]]
[[pt:Buda]]
[[ro:Gautama Siddhartha]]
[[ro:Buddha]]
[[ru:Будда Гаутама]]
[[ru:Будда]]
[[simple:Gautama Buddha]]
[[simple:Buddha]]
[[sk:Budha]]
[[sl:Buda]]
[[sr:Буда]]
[[sv:Buddha]]
[[sv:Buddha]]
[[th:พระพุทธเจ้า]]
[[tpi:Sidarta]]
[[tpi:Buda]]
[[vi:Th%C3%ADch Ca M%E1%BA%A7u Ni]]
[[uk:Сиддхартха Гаутама Будда]]
[[uk:Будда Готама]]
[[vi:Tất-đạt-đa Cồ-đàm]]
[[zh:释迦牟尼]]
[[zh:佛]]

20:39, 23 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம்

புத்தரின் ஒரு சிலை

கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

புத்தரின் வரலாறு

சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.

அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.

துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.

தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு ஒரு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் காலமானார்.

புத்தரின் கூற்றுக்கள்

புத்தர் எனறுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.

மற்ற மதங்களில் புத்தர்

வட இந்தியாவைச் சேர்ந்த வைணவர்கள் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக போற்றுகின்றனர்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதம_புத்தர்&oldid=19551" இலிருந்து மீள்விக்கப்பட்டது