காந்தாரத்தில் புத்தர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10: வரிசை 10:
|period = கிபி 2ம் - 3ம் நூற்றாண்டு
|period = கிபி 2ம் - 3ம் நூற்றாண்டு
|place = [[சமால் கார்கி]], [[காந்தாரம்]], [[பாக்கிசுத்தான்]]
|place = [[சமால் கார்கி]], [[காந்தாரம்]], [[பாக்கிசுத்தான்]]
|location = அறை 33, [[பிரித்தானிய அருங்கா]], London
|location = அறை 33, [[பிரித்தானிய அருங்காட்சியகம்]], இலண்டன்
|id =
|id =
|registration =
|registration =

10:01, 6 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

காந்தாராவின் இருக்கும் புத்தர்
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காந்தாரத்தில் எடுக்கப்பட்ட இருக்கும் புத்தர் சிலை
செய்பொருள்இளகல் தீப்பாறை
அளவுஉயரம்: 95 சமீ
அகலம்: 53 சமீ
காலம்/பண்பாடுகிபி 2ம் - 3ம் நூற்றாண்டு
இடம்சமால் கார்கி, காந்தாரம், பாக்கிசுத்தான்
தற்போதைய இடம்அறை 33, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்

காந்தாராவின் இருக்கும் புத்தர் என்பது இன்றைய பாகிசுத்தானில் இருப்பதும், பண்டைய காந்தாரத்தைச் சேர்ந்ததுமான சமால் கார்கி என்னும் களத்தில் எடுக்கப்பட்ட ஒரு தொடக்ககாலப் புத்தர் சிலை ஆகும். இது கிபி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் 33ம் எண் அறையில் உள்ளது. கிபி முதலாம் நூற்றாண்டு வரை ஞானம் பெற்ற நிலையில் உள்ள புத்தர் சிலைகள் உருவாக்கப்படவில்லை. இக்காலத்துக்கு முன்னர் புத்தரை உயிரின உருவில் அமையாத காலடி போன்ற வடிவங்களிலேயே காட்டி வந்தனர். இப்பகுதி, பேரரசன் அலெக்சாண்டரால் உருவாக்கப்பட்ட கிரேக்க-பக்ட்ரிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், பிற காந்தார, கிரேக்க- பௌத்த கலைகளைப் போலவே இந்தச் சிலையும் பண்டைய கிரேக்கக் கலையின் செல்வாக்கைக் கொண்டுள்ளது.