யமாந்தகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி துப்புரவு AWB
வரிசை 23: வரிசை 23:
*[[மஞ்சுஸ்ரீ]]
*[[மஞ்சுஸ்ரீ]]
*[[யிதம்]]
*[[யிதம்]]

{{யிதம்|state=uncollapsed}}


[[பகுப்பு:யிதம்]]
[[பகுப்பு:யிதம்]]
வரிசை 30: வரிசை 32:
[[ru:Ямантака]]
[[ru:Ямантака]]
[[th:ยมานตกะ]]
[[th:ยมานตกะ]]

{{யிதம்|state=uncollapsed}}

09:30, 13 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

யமாந்தக வஜ்ரபைரவர்

யமாந்தகர்(यमान्तक) வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு யிதம் ஆவார். யாமாந்தகர் மஞ்சுஸ்ரீயின் உக்கிர அவதாரமாக கருதப்படுகிறார். மேலும் இவர் தர்மபாலகர்களில் ஒருவர் ஆவார்.

யாமாந்தக என்ற வடமொழிப்பெயரை யம மற்றும் அந்த(अन्त) என பிரிக்கலாம். 'யம' என்பது இறப்பின் கடவுளான யமனை குறிக்கும், 'அந்த(अन्त)' என்றால் முடிவு என்று பொருள். எனவே யமாந்தகர் என்றால் மரணத்தை அழிப்பவர் என்று பொருள்.

பௌத்தத்தில் மரணத்தை அழிப்பது என்பது சம்சார பந்தத்திலிருந்து விடுபட்ட அனைத்து புத்தர்களின் குணமாகும் குறிக்கும். எனவே யமாந்தகர் மகாயானத்தில் போதி நிலையை அடைவதற்கு சம்சார பந்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்துகிறார்.

யமாந்தகர் அல்லது ஸ்ரீ பகவான் யமாந்தகர் என்பது வஜ்ரபைரவரின் அல்லது ஸ்ரீ வஜ்ரமகா பைரவரின் இன்னொரு பெயராகும். வஜ்ரபைரவர் மஞ்சுஸ்ரீ போதிசத்துவரின் அம்சமாக கருதப்படுபவர். மஞ்சுஸ்ரீ போதிசத்துவர்,ஸ்ரீ வஜ்ரபைரவர், ஸ்ரீ பகவான் யமாந்தகர் ஆகியோர் தர்மகாய தத்துவத்தை உணர்த்துகின்றனர்.

இறப்பு என்பதற்கு உள்ளார்ந்த உறுதியான இருப்பு இல்லாதது. எப்போது ஒருவரின் மனது இதை அறிந்து கொள்கிறது அது மரணத்தை வென்றாதாகிறது. அப்போது யமாந்தகரின் மரணத்தை மீறிய நிலைக்கு செல்லமுடியும்.

யமாந்த தந்திரத்தில் மூன்று விதமான மரணங்கள் குறிக்கப்பெறுகின்றன: வெளி மரணம், அதாவது உடலின் மரணம், உள் மரணம் அதவது மாயையினை உண்மையாக கருதுவது, ரகசிய மரணம், அதாவது மனம் மற்றும் உடலினை இரு தனித்த கூறுகளாக கருதுவது. இம்மூன்று மரண நிலைகளையும் வெல்பவர் புத்த நிலையினை அடைகிறார்.

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமாந்தகர்&oldid=194713" இலிருந்து மீள்விக்கப்பட்டது