"கா. செ. நடராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
356 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயில...)
1961 ஆம் ஆண்டு  இணுவிலைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வி பரமேஸ்வரியை சீர்திருத்த முறையில் மிகவும் எளிமையாக மணந்து கொண்டார். இவர்களுக்கு குமரன், கார்த்தியாயினி, குருபரன், கார்த்திகேயன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
 
1965 இல் ஆசிரியர் பயிற்சிக்காக யாழ்/கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றார். பயிற்சியை முடித்துக் கொண்டு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக மீண்டும் 1967 ஆம் ஆண்டு பூண்டுலோயா மகாவித்தியாலயத்தலும், 1968 இல் லிந்துல சிங்கள தமிழ் மகாவித்தியாலயத்திலும் தனது பணியைத் தொடர்ந்தார்.  1968 இல் வெளிவாரியாகத் தனது பட்ட மேற் படிப்பைத்  தொடங்கினார். 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். 1974 இல் யாழ்/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியராக நியமனம் பெற்றார். 1977 இல் வைத்தியர் சு.இராமலிங்கம் அவர்களின் ஒத்துழைப்போடு  இணுவை அப்பர் என்ற நூலை எழுதி வெளியிட்டார். 1987 இல் இந்திய இராணுவத்தின் வருகையால் இணுவில் மருதனார் மடத்தில் இருந்த இவருடைய இல்லம் இராணுவத்தினரின் இருப்பிடமாகியது. இவர் தன் இருப்பிடத்தை விட்டுப் புலம் பெயர்ந்து கொழும்பிற்குச் சென்றார். இங்கு வசித்த போது இந்து கலாசார அமைச்சின் வேண்டு கோளுக்கிணங்கி இந்து கலைக்களஞ்சியத்திற்குக் கட்டுரைகளை எழுதினார். தெட்சணகைலாய புராணத்திற்கு உரை எழுதினார். இவற்றை இந்து கலாசார அமைச்சே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இலங்கை வானொலியில் சைவநற்சிந்தனை வழங்கியுள்ளார். நாட்டார் வழக்கியல், சமூக சாகரம் போன்ற நிகழ்வுகளிற் கலந்து கொண்டு தொடர் உரையாற்றியுளார். 1997 இல் தனது மனைவியுடன் இந்தியா சென்று தமிழ் நாட்டிலே தனது மூத்த புதல்வன் குமரனுடன் வசித்தபோது 2001 இல் திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் மகாநாட்டிற்குக் கட்டுரை சமர்ப்பித்து ஆய்வரங்கிலும் கலந்து கொண்டுள்ளார். 27.6. 2006 ஆம் ஆண்டு காலமானார்.<ref>நூலாசிரியர் கலாபூஷணம் மூத்ததம்பி சிவலிங்கம், நூலின் பெயர் இணையிலி, வெளியீடு இணுவில் சைவதிருநெறிக்கழகம், கல்வி இயல்: பக்கம் 100 - 101.</ref>
 
==எழுதிய நூல்கள்==
58

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1933678" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி