ரூமிலா தாப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan, ரொமிளா தாப்பர் பக்கத்தை ரூமிலா தாப்பர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ள...
வரிசை 23: வரிசை 23:


==விருதுகள்==
==விருதுகள்==
1992இல் இந்திய ஆரசு இவருக்கு [[பத்ம பூஷன்]] விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதை இவர் தனக்கு வேண்டாமென புறக்கணித்தார். [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரிடம்]], இவ்விருதைப் புறக்கணிப்பதற்கான காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் வழங்கப்படும் விருதுகளை மட்டுமே அவர் ஏற்க அவர் தயாரக உள்ளதாகவும், அந்த விருதுகள் மட்டுமே அவருடைய துறைசார்ந்ததாக இருக்கும் என்பதாலும் அரசாங்க விருதுகளைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.
1992இல் இந்திய ஆரசு இவருக்கு [[பத்ம பூஷன்]] விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதை இவர் தமக்கு வேண்டாமென புறக்கணித்தார். [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரிடம்]], இவ்விருதைப் புறக்கணிப்பதற்கான காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் வழங்கப்படும் விருதுகளை மட்டுமே அவர் ஏற்க அவர் தயாராக உள்ளதாகவும், அந்த விருதுகள் மட்டுமே அவருடைய துறைசார்ந்ததாக இருக்கும் என்பதாலும் அரசாங்க விருதுகளைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.


==பட்டங்கள்==
==பட்டங்கள்==

00:15, 5 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

ரூமிலா தாப்பர்

ரூமிலா தாப்பர் (அ) ரொமிளா தாப்பர் (30 நவம்பர் 1931) ஒரு இந்திய வரலாற்றியலாளர். இந்தியாவின் தொன்மையையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஆய்ந்த பெண்மணி ஆவார்.

பிறப்பும் கல்வியும்

புகழ் பெற்ற பஞ்சாபிக் குடும்பத்தில் ரூமிலா தாப்பர் பிறந்தார். இவருடைய தந்தை படையில் பணியாற்றியதால் இந்தியாவின் பல பகுதிகளில் இவருடைய இளமைக் காலம் கழிந்தது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். பின்னர் 1958 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாய்வாளர் ஏ. எல். பாஷம் தலைமையின் கீழ் லண்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றை போதிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

வரலாற்றுப்பணி

ஆசிய ஐரோப்பா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று தம் வரலாற்று ஆய்வைச் செய்தார். சீனாவில் உள்ள புத்தர் காலக் குகைகளைப் பார்த்தார். ஆரியர்களின் வரலாறு முதல் முசுலிம்களின் வருகை வரை உள்ள வரலாற்றை எழுதியுள்ளார். அசோகர் பற்றியும் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிபற்றியும் ஒரு நூலில் எழுதினார். சோமநாத் கோவில் மீது நடந்த படையெடுப்புக்குப் பின் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் ஒரு நூல் எழுதினார். இந்திய நாடு மதச் சார்பில்லாமல் அமைய வேண்டியத் தேவைகளை வலியுறுத்திக் கூறுபவர். இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர். ஆணாதிக்க எண்ணம் பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் வைத்த வரலாறு எப்படி எப்போது தொடங்கியது பற்றியும் ஆய்வு செய்துள்ளார். அடிப்படை வாதம் பேசுவோரும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும் வரலாற்றைத் திரித்து மக்களிடம் பரப்பிவருகிறார்கள் என்பது அவர் கருத்து. அரசியல் நோக்கில் வரலாறு எழுதப்படுதல் கூடாது என்றும் வரலாறு அரசியலின் குறுகிய நோக்கங்களுக்கு பலி ஆகக் கூடாது என்றும் சொல்லி வருகின்றார்.

குறிப்பிடத்தக்க படைப்புகள்

  • 'அசோகர் மற்றும் மௌரிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி, '
  • 'பண்டைய இந்திய சமூக வரலாறும்: சில திரிபுகளும்,'
  • 'பண்டைய இந்தியா மீதான தற்கால பார்வை மற்றும் '
  • 'பண்டைய இந்தியா: தோற்றம் முதல் கி.பி 1300 வரை.'

பதவிகள்

  • தில்லிப் பல்கலைக் கழகத்தில் ரீடர் பதவியில் அமர்ந்தார்.
  • சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எமரிடசுப் பேராசிரியராக இருந்தார்.
  • ஆக்சுபோர்டில் லேடி மார்கரட் ஆல் என்பதில் மதிப்புமிகு உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
  • கார்லைல் பல்கலைக் கழகம் பென்சில்வேனியா பல்கலைக் கழகம் காலேஜ் தி பிரான்சு பாரீசு ஆகியவற்றில் வருகைப் பேராசிரியாக இருந்தார்.
  • 1983இல் இந்திய வரலாற்றுப் பேராயம் என்னும் அமைப்பில் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1999இல் பிரிட்டிசு அகாதமியில் தொடர்பாளர் என்னும் பதவியிலும் இருந்தார்.

விருதுகள்

1992இல் இந்திய ஆரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதை இவர் தமக்கு வேண்டாமென புறக்கணித்தார். குடியரசுத் தலைவரிடம், இவ்விருதைப் புறக்கணிப்பதற்கான காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் வழங்கப்படும் விருதுகளை மட்டுமே அவர் ஏற்க அவர் தயாராக உள்ளதாகவும், அந்த விருதுகள் மட்டுமே அவருடைய துறைசார்ந்ததாக இருக்கும் என்பதாலும் அரசாங்க விருதுகளைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.

பட்டங்கள்

  • 2004ஆம் ஆண்டில் அமெரிக்க லைப்ரரிப் பேராயத்தில் லூச் சேர் என்னும் பதவியை இவருக்கு அளித்தனர்.
  • 2008 ஆம் ஆண்டில் மனிதவியல் ஆய்வுக்காக பீட்டர் பிரவுன் என்பவரும் தாப்பரும் சேர்ந்து லூச் பரிசைப் பெற்றனர்.
  • சிக்காக்கோ பல்கலைக் கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகம் எடின்பர்க்கு பல்கலைக் கழகம் கல்கத்தா பல்கலைக் கழகம் ஐதராபாது பல்கலைக் கழகம் போன்றன இவருக்கு முனைவர் பட்டங்கள் அளித்து கெளரவித்தன.

கொள்கையில் உறுதி

கல்வி நிலையங்கள் வழங்கும் விருதுகளையும் மதிப்புகளையும் மட்டுமே ஏற்றுக் கொள்வது என்னும் கொள்கையை வரையறுத்துக் கொண்டார். ஆதலால் 1992 ஆம் ஆண்டிலும் 2005 ஆம் ஆண்டிலும் இந்திய அரசு ரொமிளா தாப்பருக்கு பத்ம பூசன் விருது வழங்க முன்வந்தபோது அவ்விருதை ஏற்க மறுத்தார். 2002 இல் பள்ளிகளில் வரலாற்றுப் பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப் பட்டன. அப்போது இந்துத்துவக் கொள்கையை கல்விநிலையங்களில் அரசு திணிக்கப் பார்க்கிறது என்று தாப்பர் கண்டித்தார்.

மேற்கோள்கள்

http://www.yourarticlelibrary.com/sociology/romila-thapar-biography-and-contribution-towards-sociology/35014/

http://www.thehindu.com/features/magazine/ideas-of-history/article5875979.ece

http://www.thehindu.com/todays-paper/tp-national/ancient-indians-had-a-sense-of-history-romila-thapar/article5575584.ece

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூமிலா_தாப்பர்&oldid=1928806" இலிருந்து மீள்விக்கப்பட்டது