அடிப்படை விசைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: lt:Fundamentalioji sąveika
வரிசை 31: வரிசை 31:
[[eo:Fundamenta forto]]
[[eo:Fundamenta forto]]
[[es:Fuerzas fundamentales]]
[[es:Fuerzas fundamentales]]
[[fa:نیروهای پایه در فیزیک]]
[[fa:نیروهای بنیادی در فیزیک]]
[[fi:Perusvuorovaikutus]]
[[fi:Perusvuorovaikutus]]
[[fr:Interaction élémentaire]]
[[fr:Interaction élémentaire]]

19:53, 7 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

அடிப்படை விசைகள் என்பவை நான்கு என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இவைகளை இவற்றினும் வேறான அடிப்படை விசைகளால் விளக்க இயலாது. செயல் முறையில் நாம் அறியும் எல்லா இயற்பியல் வினைகளும் (இதில் வேதியியல் முதலியனவும் அடங்கும்) இந்த நான்கே நான்கு விசைகளால் விளக்க முடியும். அணுவுக்குள் குவார்க்குகளுக்கு இடையே நிகழும் உறவாட்டங்கள் முதல் அண்டத்தில் விண்மீன், நாண்மீன்பேரடை, முதலியன நகர்வதும் மோதுவதும் அனைத்தும் இந்த நான்கு அடிப்படை விசைகளால் விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த நான்கு விசைகளாவன: பொருள் ஈர்ப்பு விசை, மின்காந்தவியல் விசை, மென்விசை, அணுவின் கருப் பெருவிசை. இவ்விசைகளின் வலுவின் அளவு ஒன்றுக்கு ஒன்று மிகவும் வேறுபடுவது. இந் நான்கு விசைகளில் மூன்று விசைகளுக்கு அடிப்படையில் ஒரு விசை இருக்க வேண்டும் என கருதுகிறார்கள், ஆனால் இன்றளவும் இவை தனித்தனி அடிப்படை விசைகளாகவே கருதப்படுகின்றன. மின்னியலும், காந்தவியலும் சேர்ந்து இன்று மின்காந்தவியல் என்று இணைந்த ஒரு இயக்கமாக அறியப்படுவது போலவும், குறைந்த ஆற்றல் எல்லைகளில் மின்காந்தவியலின் விசையும் மென்விசையும் ஓர் அடிப்படை மின்னிய மென்விசையின் இரு கூறுகள் என அண்மையில் உணரப்படுட்டுள்ளது. இதே போல கருப் பெருவிசையையும் சேர்ந்தெண்ணுமாறு ஓர் ஒருங்கிணைப்புக் கருத்து உருவாகும் என கருதுகின்றனர். எனினும் ஏதும் இன்றளவும் நிறைவேறவில்லை. பொருள் ஈர்ப்பு விசையையும் இணைக்கும் (குவாண்ட்டம் ஈர்ப்புக் கொள்கை) எண்ணங்களும் உள்ளன.

விசை உறவாட்டம் தற்காலக் கொள்கை இடையூடும் துகள்கள் ஒப்பீட்டு வலு மடங்கு1 தொலைவில் நிகழும் நடப்பு
அணுவின் கருப் பெருவிசை குவாண்ட்டம் நிறவியக்கம்
(Quantum chromodynamics)
(QCD)
ஒட்டுமின்னிகள்
(gluon)s
1038
(கீழே கருத்துகளைப் பார்க்கவும்)
மின்காந்தவியல் விசை குவாண்ட்டம் மின்னியக்கவியல்
(Quantum electrodynamics)
(QED)
ஒளியன்கள்
(photon)s
1036
மென்விசை மின்னிய மென்விசைக் கொள்கை
கிளாஸ்க்கோ-வைபர்க்-சலாம் கொள்கை (Sheldon Glashow -Steven Weinberg-Abdus Salam theory)
W மற்றும் Z போசான்கள் (W and Z bosons) 1025
பொருள் ஈர்ப்பு விசை பொது ஒப்பபீட்டுக் கொள்கை (General Relativity)
(இது ஒரு குவாண்ட்டம் கொள்கை அல்ல)
பொருளீர்ப்பான்கள் 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்படை_விசைகள்&oldid=192814" இலிருந்து மீள்விக்கப்பட்டது