"திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
இற்றையாக்கம்
சி (இற்றையாக்கம்)
சி (இற்றையாக்கம்)
====அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகையில் வரவேற்கிறார்====
செப்டம்பர் 23, புதன் காலை 9 மணியளவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகைத் தோட்ட வளாகத்தில் வரவேற்றார். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஆதரவு அளிப்பதிலும், சுற்றுச் சூழல் மாசுறுவதைத் தடுத்து புவியுலகத்தை உலக மக்கள் அனைவரும் வாழ உகந்த இல்லமாக மாற்றுவதிலும், சமயச் சுதந்திரத்தை ஆதரிப்பதிலும் திருத்தந்தை தலைசிறந்த விதத்தில் உழைத்து வருகிறார் என்று தம் வரவேற்புரையில் கூறிய அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை அமெரிக்க மக்கள் பெயரால் வரவேற்றார். தமது ஏற்புரையின் போது, திருத்தந்தை இரு முக்கிய கருத்துக்களை வலியுறுத்தினார். அமெரிக்க நாடு வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறிய மக்களின் ஒத்துழைப்பால் உருவானது என்றும், இந்நாட்டில் குடியேற விரும்பும் மக்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதுபோலவே, சுற்றுச் சூழல் மற்றும் புவியுலகு பாதுகாப்பில் அமெரிக்கா எடுக்கின்ற முயற்சிகளைப் பாராட்டிய பிரான்சிசு, அம்முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் கூறினார். <ref>[http://www.nytimes.com/2015/09/24/us/politics/pope-francis-obama-white-house.html?_r=0 அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகையில் வரவேற்றல்]</ref>
 
====புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருவோரை வரவேற்றல் வேண்டும்====
திருத்தந்தை தமது பயணத்தின்போது வலியுறுத்திய ஒரு முக்கிய கருத்து, புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருகின்ற மக்களை வரவேற்றல் வேண்டும் என்பதாகும். அவர் வெள்ளை மாளிகைத் தோட்ட வளாகத்தில் ஆற்றிய உரையின்போது, “நானும் புலம்பெயர்ந்து குடியேறிய ஓர் குடும்பத்தில் பிறந்தவன் தான்” என்றார். திருத்தந்தையின் பெற்றோர் இத்தாலி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அர்ஜெண்டீனா நாட்டில் குடியேறினார். அங்குதான் பிரான்சிசு பிறந்தார். எசுப்பானிய மொழி பேசுகின்ற கத்தோலிக்கர் பெருமளவில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குடியேறியுள்ளனர். அவர்களுள் சிலர் குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல் உள்ளனர். அவர்களை மீண்டும் அவர்களுடைய நாடுகளுக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றொரு கருத்தை சிலர் முன்வைக்கின்ற வேளையில் திருத்தந்தை பிரான்சிசு புலம்பெயர்வோரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிரியா, லிபியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா செல்ல முயல்கின்ற பின்னணியில் அவருடைய வேண்டுகோள் பலமாகவே ஒலிக்கின்றது.<ref>[https://www.washingtonpost.com/local/washingtons-welcome-for-francis-early-crowds-prayers-and-songs/2015/09/23/263141e8-61e0-11e5-b38e-06883aacba64_story.html?wpmm=1&wpisrc=nl_evening புலம்பெயர்ந்து குடியேறுவோரை வரவேற்றல் பற்றி திருத்தந்தை பிரான்சிசு]</ref>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1922627" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி