தோல் மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan, டெர்மடோலஜி பக்கத்தை தோல் மருத்துவம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
தோல் மருத்துவம் (சரும மருத்துவம்) என்பது நமது உடலின் வெளிப்புற அமைப்பான தோலினைப் (சருமம்) பற்றிப் படிக்கும் மருத்துவத்தின் ஒரு பிரிவு ஆகும். இந்த மருத்துவப் பிரிவில் [[முடி]], நகங்கள், [[தோல்]] மற்றும் இவற்றினை பாதிக்கும் நோய்கள் ஆகியவற்றினைப் பற்றி அறியப்படும்.<ref name="randomHouse">''Random House Webster's Unabridged Dictionary.'' Random House, Inc. 2001. Page 537. ISBN 0-375-72026-X.</ref><ref name="aad.org">http://www.aad.org/public/specialty/what.html</ref> மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை என எந்தவித பார்வையிலும் இந்தவகை மருத்துவப் படிப்பு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.<ref name="aocd.org">http://www.aocd.org/?page=DermProcedures</ref><ref>{{cite web|url=http://dermnetnz.org/dermatologist.html |title=What is a dermatologist; what is dermatology. DermNet NZ |publisher=Dermnetnz.org |date=2009-06-15 |accessdate=10 August 2015}}</ref><ref>{{cite web|url=http://www.dermcoll.asn.au/public/what_is_a_dermatologist.asp |title=What is a Dermatologist |publisher=Dermcoll.asn.au |accessdate=10 August 2015}}</ref>
'''தோல் மருத்துவம்''' (Dermatology) (சரும மருத்துவம்) என்பது நமது உடலின் வெளிப்புற அமைப்பான தோலினைப் (சருமம்) பற்றிப் படிக்கும் மருத்துவத்தின் ஒரு பிரிவு ஆகும். இந்த மருத்துவப் பிரிவில் [[முடி]], நகங்கள், [[தோல்]] மற்றும் இவற்றினை பாதிக்கும் நோய்கள் ஆகியவற்றினைப் பற்றி அறியப்படும்.<ref name="randomHouse">''Random House Webster's Unabridged Dictionary.'' Random House, Inc. 2001. Page 537. ISBN 0-375-72026-X.</ref><ref name="aad.org">http://www.aad.org/public/specialty/what.html</ref> மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை என எந்தவித பார்வையிலும் இந்தவகை மருத்துவப் படிப்பு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.<ref name="aocd.org">http://www.aocd.org/?page=DermProcedures</ref><ref>{{cite web|url=http://dermnetnz.org/dermatologist.html |title=What is a dermatologist; what is dermatology. DermNet NZ |publisher=Dermnetnz.org |date=2009-06-15 |accessdate=10 August 2015}}</ref><ref>{{cite web|url=http://www.dermcoll.asn.au/public/what_is_a_dermatologist.asp |title=What is a Dermatologist |publisher=Dermcoll.asn.au |accessdate=10 August 2015}}</ref>


ஒரு தோல் மருத்துவ நிபுணர் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை திறந்தவெளிச் சிந்தனையுடன் இருக்க வேண்டும்.<ref>{{cite web|last1=Chua|first1=Shunjie|title=Dermatology is not just aesthetics|url=http://www.dukechronicle.com/articles/2015/02/26/dermatology-not-just-aesthetics#.VWcd9kbwi7A|website=The Chroincle|publisher=Duke University|accessdate=10 August 2015}}</ref> ஏனெனில், மக்கள் ஒப்பனைக்காக பலதரப்பட்ட வித்தியாசமான பொருட்களைப் பயன்படுத்துவதால் சருமம், தலையில் உள்ள முடியினைத் தாங்கியுள்ள தோல், முடி மற்றும் நகங்கள் போன்றவை பாதிப்படையும் என்பதை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.<ref name="aad.org" /><ref>http://www.aad.org</ref>
ஒரு தோல் மருத்துவ நிபுணர் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை திறந்தவெளிச் சிந்தனையுடன் இருக்க வேண்டும்.<ref>{{cite web|last1=Chua|first1=Shunjie|title=Dermatology is not just aesthetics|url=http://www.dukechronicle.com/articles/2015/02/26/dermatology-not-just-aesthetics#.VWcd9kbwi7A|website=The Chroincle|publisher=Duke University|accessdate=10 August 2015}}</ref> ஏனெனில், மக்கள் ஒப்பனைக்காக பலதரப்பட்ட வித்தியாசமான பொருட்களைப் பயன்படுத்துவதால் சருமம், தலையில் உள்ள முடியினைத் தாங்கியுள்ள தோல், முடி மற்றும் நகங்கள் போன்றவை பாதிப்படையும் என்பதை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.<ref name="aad.org" /><ref>http://www.aad.org</ref>

12:02, 10 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

தோல் மருத்துவம் (Dermatology) (சரும மருத்துவம்) என்பது நமது உடலின் வெளிப்புற அமைப்பான தோலினைப் (சருமம்) பற்றிப் படிக்கும் மருத்துவத்தின் ஒரு பிரிவு ஆகும். இந்த மருத்துவப் பிரிவில் முடி, நகங்கள், தோல் மற்றும் இவற்றினை பாதிக்கும் நோய்கள் ஆகியவற்றினைப் பற்றி அறியப்படும்.[1][2] மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை என எந்தவித பார்வையிலும் இந்தவகை மருத்துவப் படிப்பு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.[3][4][5]

ஒரு தோல் மருத்துவ நிபுணர் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை திறந்தவெளிச் சிந்தனையுடன் இருக்க வேண்டும்.[6] ஏனெனில், மக்கள் ஒப்பனைக்காக பலதரப்பட்ட வித்தியாசமான பொருட்களைப் பயன்படுத்துவதால் சருமம், தலையில் உள்ள முடியினைத் தாங்கியுள்ள தோல், முடி மற்றும் நகங்கள் போன்றவை பாதிப்படையும் என்பதை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.[2][7]

சொற்பிறப்பு

கிரேக்க வார்த்தைகளான ‘டெர்மடோஸ்’ என்பது ஆங்கிலத்தில் ‘டெர்மா’ எனத் திரிந்து பின்னர் அதனைப் பற்றிய படிப்பு ‘டெர்மடோலஜி’ (சரும மருத்துவம்) என்றானது. இதுவே தமிழில் ‘சரும மருத்துவம்’ என அறியப்படுகிறது.

வரலாறு

பாரிஸில் உள்ள, ஹோபிடல் செயின்ட் – லூயிஸ் மருத்துவமனையில், 1801 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக சரும மருத்துவம் பற்றிய கல்விப் பிரிவு தொடங்கப்பட்டது. அதற்கான வரவேற்பும் விரைவாகக் கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் சரும மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் வெளிவரத் தொடங்கின.

சிகிச்சை முறைகள் மற்றும் பயன்பாடுகள்

லேசர் துணையுடன் கூடிய முடி நீக்கும் முறை

இம்முறையின் மூலம் உடல் பாகங்களில் தேவையற்ற இடங்களில் வளர்ந்துள்ள முடிகளை களைய இயலும். இதனை பின்வரும் உடல் பாகங்களில் செயல்படுத்தலாம்.[8]

  • முகம் – முழு முகம், நெற்றி, மேல் உதடு, கீழ் உதடு, கன்னம், காதிற்கு அடியில்
  • உடல் – கை, கால், கைக்கு அடியில், கழுத்து
  • நுட்பமான பகுதி – மார்பினைச் சுற்றியுள்ள தொடு உணர்வு அதிகம் கொண்ட காம்புப் பகுதி

பயன்பாடுகள்

  • வேறுவிதமான சிகிச்சை முறைகளுக்கு செல்ல வேண்டியதில்லை
  • முடியிருந்த உடல் பாகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இலக்காக்கப்பட்ட முடி மட்டுமே நீக்கப்படும்.
  • உடலின் சருமத்தில் அமைந்துள்ள மேற்புற செல்களின் வளர்ச்சிக்கு உதவும்.
  • முடிகளை அகற்றும்போது, எவ்வித வலியும், எவ்வித பக்கவிளைவுகளும் இருக்காது.

அழகான உதடுகளை வழங்கும் முறை

அறுவை சிகிச்சை அல்லாத இம்முறையில் உதட்டிற்கு கூடுதலான பரும அளவு அளிப்பதன் மூலம், அதன் அழகினை அதிகரிக்கின்றனர். உதடு நிரப்பியினை ஊசியின் உதவியால் உதட்டில் சேர்ப்பதன் மூலம் அழகான உதடுகளைப் பெற முடியும்.

வழிமுறைகள்

1. சிகிச்சையினைத் தொடங்கும் முன் சிகிச்சை பெறுபவருக்கு வலியினைத் பொறுத்துக்கொள்வதற்காக மயக்க மருந்து அளிக்கப்படும் அல்லது உதடு நிரப்பியின் வகையினைப் பொறுத்து மயக்க மருத்து அளிப்பது பற்றி நிர்ணயிக்கப்படும்.

2. மிகவும் நுண்ணிய மருத்துவ ஊசியின் உதவியால் உதட்டின் எந்த இடத்தில் நிரப்பியினைச் செலுத்த வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படும்.

3. ஊசியினை உதட்டில் அழுத்தி, நிரப்பியினைச் செலுத்தியவுடன் ஏற்படும் தேவையற்ற வீக்கத்தினைக் கட்டுப்படுத்த சிறிய பனிக்கட்டித் துண்டுகள் பயன்படுத்தப்படும்.

4. ஊசி அளிக்கப்பட்ட அந்தப் பகுதி மட்டும் வலி குறையும் வரை சிறிது மசாஜ் செய்யப்படும், இதன் மூலம் உதட்டின் அழகு அடுத்த 24 மணி நேரத்தில் கிடைக்கும்.

5. உதட்டில் தேவையற்ற அழுத்தம் அல்லது மசாஜ் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

6. அடுத்த சில நாட்களுக்கு பல் சம்பந்தப்பட்ட எந்தவொரு வேலையும் செய்வதினைத் தவிர்க்க வேண்டும்.

7. அடுத்த இருதினங்களில் உதட்டின் வீக்கம் குறைந்தவுடன் உதடு இயற்கையாக அதிக பரும அளவு கொண்டதாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

ரசாயன சமன்

ரசாயன சமன் என்பது சருமத்தின் தோற்றத்தினை அழகாக்கும் ஒருவகையிலான மருத்துவ சிகிச்சை முறை. ரசாயனங்கள் உதவியுடன் தேவையான இடத்தில் அவை செயல்படுத்தப்படும். இந்த ரசாயனங்கள் குறிப்பிட்ட வகையிலான திசுக்களை சருமத்தின் மேற்பறப்பில் இருந்து அகற்றி, பழைய சருமம் இருந்த அதேயிடத்தில் புது சருமம் புத்துயிர் பெற உதவும். இந்த புதிய சருமம், பழைய சருமத்தின் தோல்பகுதியினைவிட மிருதுவாகவும், அதிக சுருக்கங்கள் இன்றியும் காணப்படும். இதற்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படாது, அதனால் இதனை மேற்கொள்பவர்கள் விரைவாக சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பலாம். இதனால்தான் அதிக வயதானவர்கள் தங்களது தோற்றத்தினை மாற்றிக்கொள்ள ரசாயன சமன் முறையினை நாடுகிறார்கள்.

பயிற்சிகள்

மருத்துவத் துறையில் பட்டப்படிப்பினை முடித்த பிறகு அமெரிக்காவின் சரும மருத்துவ வாரியத்தின் சான்றிதழுக்கான பயிற்சிகள் பொது சரும மருத்துவர்களுக்காக நான்கு ஆண்டுகள் நடத்தப்படும். அமெரிக்க சரும மருத்துவ வாரியம் அல்லது அமெரிக்க ஆஸ்டியோபதிக் சரும மருத்துவ வாரியம் இந்தப் பயிற்சியினை வழங்கும். இதில் ஆரம்பகால மருத்துவம், இடைக்கால மருத்துவம் அல்லது மூன்றாண்டு அறுவை சிகிச்சை வழிமுறைகள் பயிற்சிகளாகக் கற்றுத் தரப்படும்.[2][9][10] இவை முடிந்தவுடன் பயிற்சியுடன் கூடிய வேலையாக ஒன்று அல்லது இரண்டாண்டுகள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு ஒளிக்கதிர் சிகிச்சை முறை, லேசர் சிகிச்சை முறை, மோவின் நுண்ணுயிரி அறுவை சிகிச்சை, அழகுக்கான அறுவைச் சிகிச்சை எனப் பலவகைகளின்கீழ் வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் சரும மருத்துவத்தின்கீழ் பயிற்சியுடன்கூடிய வேலையினைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்துவருகிறது..[11][12][13]

குறிப்புகள்

  1. Random House Webster's Unabridged Dictionary. Random House, Inc. 2001. Page 537. ISBN 0-375-72026-X.
  2. 2.0 2.1 2.2 http://www.aad.org/public/specialty/what.html
  3. http://www.aocd.org/?page=DermProcedures
  4. "What is a dermatologist; what is dermatology. DermNet NZ". Dermnetnz.org. 2009-06-15. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
  5. "What is a Dermatologist". Dermcoll.asn.au. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
  6. Chua, Shunjie. "Dermatology is not just aesthetics". The Chroincle. Duke University. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
  7. http://www.aad.org
  8. "Dermatologist". drbatul.com. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
  9. "American Board of Dermatology". Abderm.org. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
  10. Creative Innovations. "American Osteopathic College of Dermatology - Qualifications Overview". Aocd.org. பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
  11. Wu JJ; Tyring SK. ""...has been the most competitive of all specialties for at least the last 5-6 years." This is confirmed by data from the electronic residency application service (ERAS)". பார்க்கப்பட்ட நாள் 10 August 2015.
  12. Wu JJ; Ramirez CC; Alonso CA; et al. ""Dermatology continues to be the most competitive residency to enter..." Arch Dermatol. 2006;142:845-850". பார்க்கப்பட்ட நாள் 10 August 2015. {{cite web}}: Explicit use of et al. in: |author4= (help)
  13. Singer, Natasha (2008-03-19). "For Top Medical Students, an Attractive Field". The New York Times. http://www.nytimes.com/2008/03/19/fashion/19beauty.html?_r=1&hp=&pagewanted=print&oref=slogin. பார்த்த நாள்: 10 August 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_மருத்துவம்&oldid=1894269" இலிருந்து மீள்விக்கப்பட்டது