"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
*முன்னள் கடல்படைத் தலைவர்களுள் ஒருவரான ஆல்பிரேடோ ஆஸ்டிஸ் என்பவருக்கும் அவரோடு பாதுகாப்புப் படையினர் வேறு பதினொரு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் அர்ஜென்டீனாவின் ''இழிவான போர்'' காலத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியில் பங்கேற்று மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற அடிப்படையில் இத்தண்டனை பெற்றார்கள்.
 
*2012 சூலை - அர்ஜென்டீனாவின் ''இழிவான போர்'' காலத்தில் (1976-1983) அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளைத் திருடியதை மேற்பார்வை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் இராணுவ ஆட்சித் தலைவர் ஹோர்கே விதேலா மற்றும் ரெய்னால்டோ பிக்னோனே என்பவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் வேறு மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக ஏற்கெனவேஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.
 
மேலே தரப்பட்டுள்ள வரலாற்றுப் பின்னணியில் திருத்தந்தை பிரான்சிசு அர்ஜென்டீனா கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் என்னும் முறையிலும் இயேசு சபைக்கு அந்நாட்டில் தலைவராகச் செயல்பட்டார் என்னும் முறையிலும் மனித உரிமை மீறலில் எத்தகைய பொறுப்பு கொண்டிருந்தார் என்பது ஆய்வுக்கு உரியது.
 
இராணுவ ஆட்சியாளர்களால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட குருக்களில் ஒருவர் இறந்துவிட்டார். அங்கேரியில் பிறந்து அர்ஜென்டீனா சென்று பணிபுரிந்தவரும் இப்போது உயிரோடு இருப்பவருமான அருள்திரு பிரான்சு யாலிக்சு (''Franz Jalics, S.J.'') இவ்விடயம் குறித்து செருமானிய மொழியில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில், தான் கடத்திச்செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கும் பெர்கோலியோவுக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து, தான் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், அவர் கூறியது:<ref>[http://www.indcatholicnews.com/news.php?viewStory=22167 திருத்தந்தை பிரான்சிசு குற்றவாளியா என்பது குறித்து அருள்தந்தை யாலிக்சு நிலைப்பாடு எடுக்கவில்லை]</ref>
{{cquote|அர்ஜென்டீனாவில் விடுதலை அடைந்ததும் நான் அந்நாட்டை விட்டு வெளியேறினேன். பல ஆண்டுகளுக்குப் பின்னரே அருள்திரு பெர்கோலியோவை சந்தித்து, நடந்தது என்னவென்பதைக் குறித்து அவரோடு உரையாட எங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கிடையில் அவர் புவேனோஸ் ஐரேசின் பேராயராக நியமனம் பெற்றிருந்தார். பிறகு நாங்கள் ஒன்றாக இணைந்து கூட்டுத் திருப்பலியை பொதுமக்கள் முன் நிகழ்த்தினோம். எல்லோர் முன்னிலையிலும் ஒருவர் ஒருவரைத் தழுவிக்கொண்டோம். நடந்த காரியங்கள் குறித்து ஏற்கெனவேஏற்கனவே சமாதானம் ஏற்பட்டுவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு நடந்துபோன நிகழ்ச்சி மட்டுமே.}}
 
திருத்தந்தை பிரான்சிசு குற்றமற்றவர் என்று சான்றுகூறுவோரில் ஒரு முக்கிய நபர் அடோல்ஃபோ பேரஸ் எஸ்கிவேல் (''Adolfo Perez Esquivel'') என்பவர். இவர் அர்ஜென்டீனாவின் இராணுவ ஆட்சியின்போது நிகழ்ந்த அட்டூழியங்களை உலகுக்கு வெளிப்படுத்தியதற்காக 1980இல் நோபல் பரிசு பெற்றவர். அவர் புவேனோஸ் ஐரேசில் "ராடியோ டெ லா ரேத்" (''Radio de la Red'') என்னும் ஒலிபரப்பு நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியது<ref>[http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-vatican-defends-pope-francis-dirty-war-20130315,0,4196062.story -"Perhaps he didn't have the courage of other priests, but he never collaborated with the dictatorship," Perez Esquivel told Radio de la Red in Buenos Aires. "Bergoglio was no accomplice of the dictatorship. He can't be accused of that." நோபல் பரிசு பெற்ற அடோல்ஃபோ பேரஸ் எஸ்கிவேல் திருத்தந்தை பிரான்சிசுக்கு ஆதரவாகத் தரும் சான்று]</ref>:
ஆசியாவின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோருக்கு செய்தி வழங்கிய திருத்தந்தை, கொரியா நாட்டுக் குடும்பத்திற்காக இறைவனை வேண்டுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். இளையோர் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த கொரியா நாட்டுப் பெண் ஒருவர் திருத்தந்தை பிரான்சிசிடம், “எங்கள் கொரியா நாடு இன்று வடக்கு ஒன்று, தெற்கு ஒன்று எனப் பிரிந்துகிடக்கின்றது. இதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்கள் என்றுதான் மறையுமோ” என்று கூறியதை அவர் கூர்ந்து கேட்டார்.
 
இளைஞர்களைச் சந்திக்கையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உரையை வாசித்து அளிப்பதில் திருத்தந்தை சிரமப்பட்டது தெரிந்தது. அப்போது திருத்தந்தை “ஏற்கெனவே“ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பது இளையோரைக் கவராது. அவர்களோடு உறவாட வேண்டுமென்றால், இதயத்தின் ஆழத்திலிருந்து நேராகப் பேச வேண்டும் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார்” என்று கூறியதுமே, கூட்டத்திலிருந்து பலத்த கைத்தட்டு எழுந்தது. உடனேயே, திருத்தந்தை, ஆங்கில மொழியில் பேசுவதை விட்டுவிட்டு, இத்தாலிய மொழியில் உரையாடல் பாணியில் பேசத் தொடங்கினார். அப்போது, “கொரியா நாட்டு மக்கள் ஒரே மொழியைப் பேசுகின்றனர். நீங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு கொரியா என்று நாடு பிளவுபட்டுக் கிடப்பது மறைந்தது ஒரே குடும்பமாக நீங்கள் மாறிட அமைதியாக இறைவனை வேண்டுவோம்” என்று கூறியதும் கூட்டத்தில் பேரமைதி நிலவியது.
 
கம்போடியா நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண், திருத்தந்தையிடம், கம்போடியாவிலும் பல கிறித்தவ மக்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களையும் புனிதர் என்று அறிக்கையிடுவது நல்லது என்று கூறியதும், திருத்தந்தை அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1869327" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி