ரவிச்சந்திரன் அசுவின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44: வரிசை 44:
| columns = 4
| columns = 4
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]]
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]]
| matches1 = 24
| matches1 = 25
| runs1 = 1007
| runs1 = 1009
| bat avg1 = 35.96
| bat avg1 = 35.96
| 100s/50s1 = 2/4
| 100s/50s1 = 2/4
| top score1 = 124
| top score1 = 124
| deliveries1 = 5865
| deliveries1 = 5865
| wickets1 = 119
| wickets1 = 124
| bowl avg1 = 27.47
| bowl avg1 = 27.47
| fivefor1 = 9
| fivefor1 = 9

10:39, 14 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

ரவிச்சந்திரன் அஷ்வின்
படிமம்:R-Ashwin.png
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரவிச்சந்திரன் அஸ்வின்
பட்டப்பெயர்டடா
உயரம்1.91
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்நவம்பர் 6 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 185)சூன் 5 2010 எ. இலங்கை
கடைசி ஒநாபதிசம்பர் 8 2013 எ. தென்னாபிரிக்கா
ஒநாப சட்டை எண்99
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07-2011தமிழ் நாடு
2010-சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 25 87 53 108
ஓட்டங்கள் 1009 593 1,940 866
மட்டையாட்ட சராசரி 35.96 17.44 37.30 19.68
100கள்/50கள் 2/4 0/1 3/10 0/2
அதியுயர் ஓட்டம் 124 65 107* 79
வீசிய பந்துகள் 5865 3654 13,927 4,761
வீழ்த்தல்கள் 124 119 238 114
பந்துவீச்சு சராசரி 27.47 31.41 27.84 31.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 0 20 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 n/a 5 0
சிறந்த பந்துவீச்சு 7/103 3/24 7/103 3/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/0 17/0 20/– 32/&ndash
மூலம்: ESPNcricinfo, திசம்பர் 7 2013

ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin, பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஆடுகிறார். இவரும், இலங்கையைச் சேர்ந்த அஜந்த மென்டிஸ் மட்டுமே தற்போது கேரம் பந்து(carrom ball) அல்லது சொடுக்கு பந்து எனப்படும் வகையான சுழற்பந்தை வீசும் திறன் கொண்டவர்கள். தன்னுடைய பந்து வீசும் முறைக்கு சொடுக்கு பந்து என்ற பதத்தை பயன்படுத்தியவர் ரவிச்சந்திரன் அசுவின். 2011 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2011 ல், இந்தியத் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2010/11 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்[1].

ஆட்ட வாழ்வு

தமிழ்நாடு துடுப்பாட்ட அணியின் பன்முக துடுப்பாட்டக்காரரான அஸ்வின் முதல்தர துடுப்பாட்டத்தில் விதர்பா அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சு புள்ளிகளாக 6/64 எடுத்துள்ளார். இருபது20 துடுப்பாட்டத்தில் ஆந்திராவிற்கு எதிராக தமது ஆட்டத்தைத் துவங்கினார். தகவல் தொழில்நுட்பத்தில் தொழில்நுட்ப பட்டம் (பி.டெக்) பெற்றுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் 2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெல்ல இவரது 3/16 (4 பந்து பரிமாற்றங்கள்) பெரிதும் உதவ, ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஒருநாள் துடுப்பாட்டத்தில் சூன் 5, 2010 அன்று இலங்கையுடன் தமது ஆட்டவாழ்வைத் துவங்கினார். அஸ்வின் 32 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்தும் அந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றது.

2010 சாம்பியன்ஸ் லீக் இருபது20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி மிக கூடுதலான விக்கெட்களை வீழ்த்தினார்; 13 விக்கெட்களை பெற்றதற்காக போட்டியின் சிறந்த துடுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கோல்டன் விக்கெட் பரிசும் பெற்றார்.

மேற்கிந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் துடுப்பாட்டத்தின் போது 103 ஓட்டங்களைப் பெற்று நவம்பர் 25, 2011.இல் தனது கன்னிச் சதத்தைப் பெற்றுக்கொண்டார். அறிமுகமாகிய முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் (நவம்பர் ஆறு - 10, 2011.) ஒன்பது விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், தனது 3வது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் (நவம்பர் 25, 2011.) அடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் எடுத்த 3வது இந்தியர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்பு வினோ மன்கட், பாலி உம்ரிகர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். 1952ல் மங்கட்டும், 1962ம் ஆண்டு உம்ரிகரும் இந்த சாதனையைச் செய்தனர்.

விருது

2012-13 ஆண்டுக்கான பிசிசிஐயின், பாலி உம்ரிகர் விருதுக்கு (சிறந்த அனைத்துலக வீரர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்[2].

2014 - அர்ஜுனா விருது[3].

வெளி விவரங்கள்

மேற்கோள்கள்

  1. Ashwin Profile
  2. Ashwin Award 2013
  3. Arjuna Award: All-Rounder Ravichandran Ashwin to be Honoured



"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவிச்சந்திரன்_அசுவின்&oldid=1865101" இலிருந்து மீள்விக்கப்பட்டது