எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"எக்சு-மென்: அபொகலிப்சு (ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:25, 9 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

எக்சு-மென்: அபொகலிப்சு (ஆங்கிலம்: X-Men: Apocalypse, தமிழ்: எக்சு-மனிதர்கள்: பேரழிவு) மாவல் சித்திரக்கதைகளில் தோன்றும் எக்ஸ்-மென் கதாபாத்திரங்களை மையப்படுத்தி 2016இல் திரைக்கு வரவுள்ள அமெரிக்க சூப்பர்கீரோத் திரைப்படமாகும். இது 2014இல் வெளியான எக்சு-மென்: டேசு ஒப் பியூச்ச பாசுற் (ஆங்கிலம்: X-men : Days of Future Past , தமிழ்: எக்சு-மனிதர்கள்: கடந்த காலத்தின் எதிர்காலம்) திரைப்படத்தில் தொடர்ச்சியும், எக்சு-மென் படவரிசையின் ஒன்பதாவது திரைப்படமும் ஆகும். பிறயன் சிங்கரின் இயக்கம் மற்றும் சைமன் கின்பேக்கின் திரிக்கதையில் வெளியாகும் இத்திரைப்படத்தின் கதையை இதான் காரிசு, மைக்கல் உடோகேற்றி, கின்பேக் மற்றும் சிங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் சேம்சு மெக்கவோய், மைக்கல் பாசுபெண்டர், செனிபர் இலாரன்சு,நிகோலசு கோல்ற்று, ஒசுகார் ஈசாக்கு, உரோசு பேண், இரை செறிடன், சோபி ரேணர், அலெக்சாண்ட்றா சிப்பு, கோடி சிமிற்-மெக்பீ, எவன் பீரேசு, லூகசு இரில், பென் காடி, இலானா கொண்டோர், ஒலிவியா மண் ஆகியோர் நடிக்கின்றனர்.

டிசம்பர் 2013இல் கின்பேக், உடொகெற்றி, காரிசு ஆகியோர் எழுத்தாக்கக்குழுவில் இணைக்கப்பட்டதுடன் இத்திரைப்படத்தின் வெளியீடு சிங்கரால் அறிவிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸ்-மென்:_அப்போகலிப்ஸ்&oldid=1863495" இலிருந்து மீள்விக்கப்பட்டது