ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 96: வரிசை 96:
* http://http.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1362&cat=3
* http://http.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1362&cat=3


{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில்| திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்| ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் |97|97}}
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]

05:01, 24 மே 2015 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
கடுவாய்க்கரை புத்தூர் சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கடுவாய்க்கரைபுத்தூர், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர்
பெயர்:கடுவாய்க்கரை புத்தூர் சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஆண்டார்கோயில் (ஆண்டான்கோயில்)
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சொர்ணபுரீசுவரர்
தாயார்:சொர்ணாம்பிகை, சிவாம்பிகை
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:திரிசூலகங்கை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
தொலைபேசி எண்:+91- 4374-265 130[1] 044-26222888[2]

ஆண்டார்கோயில் சொர்ணபுரீசுவரர் கோயில் (கடுவாய்க்கரைபுத்தூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 97ஆவது சிவத்தலமாகும்.காசிப முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. இங்குள்ள இறைவன் சொர்ணபுரீசுவரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது சிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோயிலின் தல மரம் வன்னி.

இத்திருத்தலம் காவிரி தென்கரைத்தலங்களில் 97வது திருத்தலம், தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 160 வது தேவாரத்தலம்.[3]

கும்பகர்ணப் பிள்ளையார்

கும்பகர்ணனை அம்பிகை வேண்டுகோள்படி இங்கிருந்து வீசி எறிந்த பிள்ளையார் கும்பகர்ணப் பிள்ளையாராகக் காட்சி தருகின்றார். [2]

தலவரலாறு

முனிகுமாரரான மயந்தன் என்பவர் தாம் செய்த சிறு தவறுக்காக தந்தை அளித்த சாபத்தின் காரணமாக ’கண்டதேவர்’ என்ற பெயரில் பூவுலகில் மறுபிறவி எடுத்தார். முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சராக இருந்த வந்த கண்டதேவருக்கு சிவபெருமானுக்கு திருக்கோயில் எடுக்கும் ஆவல் எழ, அதற்கு பெரும் பொருள் தேவைப்படும் என்பதையும் உணர்ந்தார். பெரும்பொருள் செலவிட மன்னர் சம்மதிக்க மாட்டார் எனினும் அவரும் சிவபக்தராதலால் திருக்கோயிலைக் கட்டி முடித்த பின்னர் மறுக்கவோ தண்டிக்கவோ மாட்டார் என்ற நம்பிக்கையில் அமைச்சர் பதவியை பயன்படுத்தி அழகிய திருக்கோயிலை சிவபெருமானுக்கு எழுப்பினார்.

கண்டதேவர் தகவலைத் தெரிவித்தபோது, நேர்மையான அமைச்சர் இவ்வாறு தாம் அறியாமல் பதவியை பயன்படுத்தி கோயில் எழுப்பியது கண்டு வெகுண்டார் மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தி. சட்டத்தை மட்டுமே நினைந்த மன்னர் அமைச்சரை சிரச்சேதம் செய்ய ஆணையிட்டார்.

கலங்காமல், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி பலிக்கட்டையில் தலை வைத்த அமைச்சரைக் கொல்ல ஓங்கிய வாள் மாலையாக மாறி அமைச்சர் கழுத்தில் விழுந்தது. பல கோடி சூரியப்பிரகாசத்தில் இடபவாகனத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான்.கண்டதேவர் சிவபெருமானுடன் ஐக்கியமானார்.

தகவல் அறிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, தாம் செய்த பிழைபொறுக்க வேண்டி இறைவனிடம் அழுது முறையிட, அசரீரி வாக்கில் இறைவனுக்குத் திருக்கோயில் எழுப்புதல், சீரமைத்தல், தீபம் ஏற்றுதல் ஆகியவற்றின் புண்ணிய பலன்கள் உபதேசிக்கப்பெற்றார். [2]

வழிபட்டோர்

காசிப முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர்,[4]அகத்தியர், சூரிய பகவான், சூதமா முனிவர், இந்திராணி, உரோமச மாமுனிவர், பதஞ்சலி முனிவர், அரிச்சந்திர மன்னர்[2]

பெயர்க்காரணம்

குடமுருட்டியாற்றின் பழைய பெயர் கடுவாய். இவ்வாற்றின் தென்கரையில் அமைந்ததால் கடுவாய்க்கரை என்றழைக்கப்பட்டது.

கண்டதேவருக்கு காட்சியளிக்க இறைவன், அம்பிகையுடன் தோன்றிய போது நகரமே தங்கமயமாக ஒளிர்ந்தது. அதனால் சொர்ணபுரி என்ற பெயரை ஊரும், இறைவன் சொர்ணபுரீஸ்வரர் என்றும் அம்பிகை சொர்ணாம்பிகை என்றும் வழிபடப்படுகின்றனர்.

சிறப்புகள்

  • சித்திரை 11,12,13 ஆம் தேதிகளில் சூரியக்கதிர்கள் சிவபெருமானை வழிபடுமாறு அமைக்கப்பட்ட திருத்தலம்
  • இத்தல அம்பிகை வழிபாடு பெண்களுக்கு சிறப்பானதாகக் குறிப்பிடப்படுகின்றது.
  • விசாக நட்சத்திரத்தில் பிறந்து ஜாதகத்தில் தோஷம் இருப்போர் தோஷ நிவர்த்திக்கு வழிபட வேண்டிய திருத்தலமாகக் குறிப்பிடப்படுகின்றது.
  • இத்தல வன்னி மரம் முக்திப்பேற்றை வழங்குவது.[2]

அமைவிடம்

வலங்கைமானிலிருந்து குடவாசல் செல்லும் வழியில் இரண்டு கி.மீ தொலைவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.[2]

திருப்பணிகள்

கவனிப்பாரற்று இருந்த இத்திருக்கோயில் திருப்பணிகள் 1960 ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வரால் ஆரம்பிக்கப்பட்டு பணவசதியின்மையால் பாதியிலேயே நின்றுவிட்டன.பின்னர் மீண்டும் 2008 ஆம் வருடம் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. [2]

மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/New.php?id=291
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 குமுதம் ஜோதிடம்; 26.09.2008;அடியவர்பால் அருள்சொரியும் ஆண்டான்கோயில்!; பக்கம் 3-6 பிழை காட்டு: Invalid <ref> tag; name "கோயில்" defined multiple times with different content
  3. http://temple.dinamalar.com/New.php?id=291
  4. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 204

வெளி இணைப்பு