"பேரரசர் அலெக்சாந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
134 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|ar}} → (7)
சி (One picture in higher resolution)
சி (clean up, replaced: {{Link FA|ar}} → (7))
அலெக்சாந்தர் அவனது தந்தை [[மக்கெடோனின் இரண்டாம் பிலிப்|இரண்டாம் பிலிப்]] இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டான். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தான். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தான். பின்னர் கிழக்குப் பகுதியில் [[அக்கீமனிட் பேரரசு|அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக்]] கைப்பற்றினான். இவன் [[அனத்தோலியா]], [[சிரியா]], [[பினீசியா]], [[காசா]], [[எகிப்து]], [[பாக்ட்ரியா]], [[மெசொப்பொத்தேமியா]] ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] வரை நீட்டியிருந்தான்.
 
இவன் இறப்பதற்கு முன்பே, [[அரேபியக் குடாநாடு|அரேபியக் குடாநாட்டுக்குள்]] தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். இதன் பின்னர் மேற்கே [[கார்த்தேஜ்]], [[ரோம்]], [[ஐபீரியக் குடாநாடு]] ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவனிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தான். இதனால் சில அறிஞர்கள் இவன் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தான் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினான். அவனும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தான்.
 
பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானான். இவனது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. [[மலேரியா]], [[நஞ்சூட்டல்]], [[தைபோய்ட்டு]]க் காய்ச்சல், [[வைரஸ்]] தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய [[குடிப்பழக்கம்|குடிப்பழக்கத்தால்]] இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவன் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் [[ஹெலெனியக் காலம்]] எனப்படுவதுடன், இது கிரேக்கம், [[மையக்கிழக்கு]], இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.
 
== தொடக்க காலம் ==
[[படிமம்:MacedonEmpire.jpg|thumb|350px|அலெக்ஸாண்டரின் சாம்ராஜ்யமும் அவர் போரிட்ட வழித்தடங்களும்]]
 
கி.மு.334 ல் தோராயமாக 48,100 காலாட்படை வீரர்களுடனும், 6,100 குதிரைப்படை வீரர்களுடனும் 120 கப்பல்களில் 38,000 கப்பற்படை வீரர்களுடனும் மாசிடோனில் இருந்து பல்வேறு கிரேக்க மாநிலங்களின் வழியாக அலெக்ஸாண்டரின் படையானது ஹெல்லஸ்போன்ட்-ஐ கடந்தது.
 
பிரமாண்ட படையுடன் த்ரஸ், பையோனியா, மற்றும் இல்லிரியாவுடன் இணைந்து பாரசீகம் வழியாக ஆசிய மண்ணில் அலெக்ஸாண்டர் தனது ஆளுமையை ஊன்றினார்.
 
மேலும் ஆசியாவை கடவுளின் பரிசாகவும் கருதினார். இதுவே அலெக்ஸாண்டருக்கு போர் மீதிருந்த நாட்டத்தை விளக்குகிறது. பாரசீகத்தின் க்ராநிகஸ்-ஸில் பெற்ற முதல் வெற்றிக்கு பிறகு ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் அலெக்ஸாண்டர் பாரசீக மாகாணங்களின் சரணடைவை ஏற்றுக்கொண்டார். அலெக்ஸாண்டரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடா-விடம் காரியா அரசின் ஆட்சிபொறுப்பை ஒப்படைத்தார்.
 
ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் இருந்து அலெக்ஸாண்டர் மலைநாடான லிசியா மற்றும் பம்பிலியா வழியாக பயணித்தார். கண்ணில்பட்ட நாடுகள அனைத்தையும் வெற்றி கொண்டார். பாரசீக கடற்படைத்தளங்கள் அனைத்தையும் அழித்தொழித்தார். பம்பிலியா-விலிருந்து கடலோரங்களை வென்ற பின்பு நிலபகுதிகள் நோக்கி வேகமாக முன்னேறினார்.
[[படிமம்:Battle of Issus.jpg|thumb|300px|போம்பெயில் உள்ள இஸூஸ் போர் நிகழ்வை காட்டும் மொசைக் முறையில் வரையப்பட்ட அலெக்ஸாண்டரின் ஓவியம்]]
 
ஆசியாவின் குளிகால போர்தொடர்களை மேற்கொண்ட பின்பு அலெக்ஸாண்டரின் படை சிலிசியன் வாயில் வழியாக கி.மு.333-ல் கடந்து சென்று பாரசீகத்தின் பிரதான படைகளான மூன்றாம் டாரியஸ்-ன் படைகளை நவம்பர் மாதத்தில் இஸ்சுஸ் போரில் வெற்றிபெற்றார்.
 
இந்த போரில் டாரியஸ் தனது மனைவியுடனும் இறந்து மகள்களுடனும் புறமுதுகிட்டு பின்வாங்கியதால் அவரது படைகள் சின்னாபின்னபடுத்தபட்டன. இதனால் டாரியஸ் தனது தாய் சிசிகம்பிஸையும், மேலும் தனது அளவற்ற செல்வங்களையும் இழக்க நேரிட்டது.<br />
இதன்பின்னர் அலெக்ஸாண்டர் சிரியாவை நோக்கி முன்னேறினார்.
 
அதில் பெரும்பாலான லிவன்ட் கடற்கரை அரசுகளையும் வென்றார். பின் கி.மு.332-ல் நெடிய போருக்கு பின் டைர்-ஐயும் வென்றார். பின்னர் போரில் பிடிபட்ட போய்க்கைதிகளை கொன்று அவர்களது மனைவி குழந்தைகளை அடிமை வியாபாரிகளிடம் விற்றார்.
[[படிமம்:Name of Alexander the Great in Hieroglyphs circa 330 BCE.jpg|thumb|left|[[பாரிஸ்|பாரிசின்]] [[லூவர் அருங்காட்சியகம், பாரிசு|லூவர் அருங்காட்சியகத்திலுள்ள]] பண்டைய எகிப்த்தின் எழுத்துமுறையான [[ஹைரோக்ளிப்ஸ்|ஹைரோக்ளிப்ஸில்]] தோராயமாக கி.மு.330ல் எழுதப்பட்ட (வலமிருந்து இடமாக) அலெக்ஸாண்டரின் பெயர்.]]
 
அலெக்ஸாண்டர் டைரை கைப்பற்றிய பின்பு அவரது வழியில் காஜாவை தவிர இடைப்பட்ட அனைத்து எகிப்திய அரசுகளனைத்தையும் சுலபமாக வென்றார். வலிமையாக செரிவூட்டபட்டிருந்த காஜா குன்றுகளின் மீது கட்டபட்டிருந்த நகரமாகும்.
 
அதை வெல்ல அலெக்ஸாண்டர் கடுமையாக போராட வேண்டி இருந்தது. மூன்று வெற்றிகரமான திடீர் தாக்குதல்களுக்கு பின்பு அதன் வலிமை குன்றி காஜா வீழ்ந்தது. இந்த போருக்கு முன்பு அலெக்ஸாண்டருக்கு இப்போரில் ஏற்பட்டதை போல கடுமையான காயம் ஏற்பட்டதில்லை. அதேபோல ஜெருசலேம் அலெக்ஸாண்டரிடம் போரிடாமலேயே பணிந்து சரணடைந்தது.
 
கி.மு.332-ல் அலெக்ஸாண்டர் எகிப்தில் நுழைந்தார். அங்கு அலெக்ஸாண்டரை விடுதலையளிக்க வந்த ஒரு போராளியாக தான் மதித்தனர். அங்கு அவர் தன்னை பிரபஞ்சத்தின் தலைவராக உணர்ந்தார். கடவுளின் மகனாக பாவித்தனர். இதற்கு பின்பு தான் அலெக்ஸாண்டர் அடிக்கடி கடவுள் ஜீயஸ்-அம்மோன்-ஐ தனது தந்தையாக சுட்டிக்காட்டினார். மற்றும் தான் மேம்பட்ட உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிடலானார்.
 
இவர் எகிப்தில் தங்கி இருந்த பொழுது எகிப்தில் எழுப்பப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா-வை நிறுவினார். அதுவே இவரது மறைவிற்கு பிறகு டோலேமைக் சாம்ராஜ்யத்தின் தலைமையாக பிற்காலத்தில் இருந்தது.
 
=== அசிரியா மற்றும் பாபிலோனியா ===
கி.மு.331-ல் அலெக்ஸாண்டர் எகிப்தை விட்டு வெளியேறி கிழக்கு நோக்கி மெசபடோமியா நோக்கி பயணித்தார் (தற்போதைய வடக்கு ஈராக்). அங்கு குகமேலா-வில் நடந்த போரில் மீண்டும் டாரியஸை வீழ்த்தினார். அந்த போரிலும் போர்க்களத்திலிருந்து டாரியஸ் மீண்டும் புறமுதுகிட்டு ஓடினார்.
 
இந்த முறை அலெக்ஸாண்டர் டாரியஸை அரபெல்லா மலைத்தொடர் வரை துரத்திசென்றார். இங்கு குகமேலாவில் நடந்த சண்டையே இவர்களிருவருக்கிடையே நடந்த கடைசிப்போராகும். அலெக்ஸாண்டர் [[பாபேல்|பாபிலோனை]] கைப்பற்றிய பொழுது டாரியஸ் அந்த போரிலிருந்து தப்பித்து எக்பட்டானா மலைத்தொடர்களை கடந்து ஓடினார்.
 
=== பாரசீகம் ===
பாபிலோனில் இருந்து அசீமேனிட்-ன் தலைநகரங்களில் ஒன்றான அலெக்ஸாண்டர் சூசா-விற்கு சென்றார். அங்கு பெரும் செல்வங்களை தனதாக்கினார். இவரது படையின் பெரும்பகுதியை பாரசீகத்தின் பிரபல தலைமையிடமான பேர்ஸ்போலிஸ்-ஸுக்கு அனுப்பினார்.
 
அலெக்ஸாண்டரே தானே தலைமையேற்று அந்த பயணத்திற்கான படைப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தார். மேலும் அந்த நகரையும் அங்கிருந்த கருவூலத்தையும் சூறாவளியை போன்று கவர்ந்தெடுத்தார். அவர் பேர்ஸ்போலிஸ்-ஸில் நுழைந்த பின்பு அவரது படையினரை அந்த நகரில் பலநாட்கள் கொள்ளையிட அனுமதித்தார். அலெக்ஸாண்டர் பேர்ஸ்போலிஸ் நகரில் ஐந்து மாதங்கள் தங்கினார்.
 
அங்கு அவர் தங்கியிருந்த பொழுது கிழக்கு சேர்சேஷ் மாளிகையும் அந்த நகரும் தீ விபத்தில் சாம்பலான பின்ம்பு அங்கிருந்து வெளியேறினார். இந்த தீ விபத்திற்கு மதுவிருந்து மாளிகையில் ஏற்பட்ட விபத்து காரணமென்றும், இரண்டாம் பாரசீக போரின் பொழுது ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் எரிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நிகழ்வென்றும் இரு வேறு காரணங்கள் நிலவின.
[[படிமம்:AlexanderCoin.jpg|thumb|left|இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள சிங்க முகம் தரித்த கிரீடம் அணிந்த அலெக்ஸாண்டர் உருவம் பதித்த வெள்ளி நாணயம்]]
 
அலெக்ஸாண்டர் டாரியஸை முதலில் மீதியாவில் இருந்தும் பின்னர் பார்தியாவில் இருந்தும் விரட்டியடித்தார்.
 
அதன் பின்னர் அந்த பாரசீக மன்னன் பெஸ்சுஸ் என்கிற ராஜியத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டான். அவர்கள் பின்னர் தாங்கள் கொண்டு சென்று கொலைசெய்த நபர் தான் டாரியஸ் மன்னன் என்று அறிவித்தனர்.
 
பின்னலில் அலெக்ஸாண்டருடன் மத்திய ஆசியாவில் குரில்லா போரிட்டு பின்வாங்கிய ஐந்தாம் அர்தஷெர்ஷெஸ் தான் பெஸ்சுஸ் ராஜ்யத்தின் மன்னன் ஆவார். அலெக்ஸாண்டர் டாரியஸை எரித்தார் அவனது இறுதி சடங்கை அசீமேனிட் வாரிசுகளை செய்ய அனுமதித்தார். டாரியஸ் இறந்த வேளையில் அசீமேனிட் அரியணைக்கு தனது பெயரை சூட்டியிருந்தான். இதுவே அதற்குப் பின்பு அந்த அரியணை ஏறிய அனைவரின் வீழ்ச்சிக்கு காரணம் என அசீமேனிடை ஆண்டவர்கள் கருதினர்.
=== அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மாசிடோன் ===
 
ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சி பொறுப்பில் அமர்த்திவிட்டு ஆசியாவில் வெகுகாலம் அலெக்ஸாண்டர் தங்கிவிட்ட்மையால் இரண்டாம் ஃப்லிப்-ன் பழைய காவலர்கள் மாசிடோனின் ஆட்ச்கட்டிலை ஆன்டிபெட்டரிடம் இருந்து பறித்தனர். அலெக்ஸாண்டர் தேபெஸ் நாட்டிலிருந்தும் வெளியேறியமையால் அங்கும் மீண்டும் கிரீஸின் ஆதிக்கம் பெற்றது.
 
மாறாக ஸ்பார்டா-வின் அரசன் மூன்றாம் அகிஸ் ஆன்டிபெட்டர்-ஐ மெகாலோபோலிஸ் போரில் வென்று கொலைசெய்தான். ஆன்டிபெட்டர் இதை ஸ்பார்டா அரசன் அலெக்ஸாண்டருக்கு அளித்த தண்டனையாக குறிப்பிட்டார். மேலும் அவ்வேளையில் ஆன்டிபெட்ட'ருக்கும் அலெக்ஸாண்டரின் தாயார் ஒலிம்பியாஸுக்கும் இடையே மனக்கசப்பும் இருந்தது.
 
ஒருவர் மீது ஒருவர் அலெக்ஸாண்டரிடம் இதை புகராகவே அளித்திருந்தனர். மொத்தத்தில் கிரேக்கம் அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மிகவும் சுதந்திரமாக அமைதியாக பழையபடிக்கே திரும்பியிருந்தது. அவர் வென்ற நாடுகளில் பலவற்றை அலெக்ஸாண்டரே விரும்பி திரும்ப போகட்டும் என்று விட்டிருந்தார்.
 
இந்த வேளையில் அவருடன் இருந்த பல வீரர்கள் மிகுந்த சோர்வில் இருந்தனர். இருந்தாலும் அலெக்ஸாண்டரின் கட்டளைக்கு பணிந்து தொடர்ந்து மாசிடோனியாவிலிருந்து அவருடன் பயணித்திருந்தனர். நீண்ட பயணமும் இடையறாத போர்களும் அவர்களை மிகுந்த சோர்வில் தள்ளியிருந்தது.
 
அவர்களில் விரும்பிய பலரை திரும்ப [[ரோம்]] நகருக்கே அனுப்பியும் வைத்தார். லட்சிய தாகம் கொண்டிருந்தவர்களை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டார்.
=== இந்திய துணைக்கண்டத்தில் அலெக்ஸாண்டரின் படையெடுப்பு ===
 
ஸ்பிடமெனிஸ்-ஸின் மரணத்திற்கு பின்பும், ரோக்ஷனா (பாக்டரியான் இனத்தின் ரோஷனக்) உடனான மரணத்தினாலும் அலெக்ஸாண்டர் இந்திய துணைக்கண்டத்தின் பக்கம் கவனம் செலுத்தினார். காந்தார (தற்போதைய வடக்கு [[பாகிஸ்தான்]]) நாட்டின் குழுக்களின் தலைவரும் முன்னாள் ஆளுநருமானவரின் அழைப்பின் பெயரில் அலெக்ஸாண்டர் அங்கு பயணித்தார்.
 
இண்டஸ் முதல் ஹைடஸ்பஸ் வரை விரிந்திருந்த அப்போதைய டக்ஸ்ஸில்லா ராஜ்யத்தின் அரசர் ஒம்பிஸ், சில மலைவாசி குழுக்கள், மற்றும் ஆஸ்பஸியோய், அஸ்ஸாகேநோயி போன்றவர்கள் அலெக்ஸாண்டரின் நண்பரிடம் பணிய மறுத்தனர்.
 
கி.மு.327/326-ஆம் ஆண்டின் குளிர்காலங்களில் அலெக்ஸாண்டர் தானே தலைமையேற்று அந்த மலைவாசி குழுக்களுடன் போர் புரிந்தார். குனார் சமவெளியில் ஆஸ்பஸியோய், ஸ்வாத் மற்றும் புநர் சமவெளியில் அஸ்ஸாகேநோயி போன்றோரிடம் சண்டையிட்டார். இவற்றிலெல்லாம் அலெக்ஸாண்டர் எளிதில் வென்ற பொழுதிலும் அவரது தோளில் ஆஸ்பஸியோய்-உடன் சண்டையிட்ட பொழுது காயம் பெரிதானது.
 
பலம் வாய்ந்த அஸ்ஸாகேநோயி-யிடம் போரிட்ட அலெக்ஸாண்டர் ஓரா மற்றும் ஒர்நோஸ் போன்ற கோட்டைகளில் பெரும் ரத்தவெள்ள சண்டைக்கு பின்பே வெற்றியை ஈட்ட முடிந்தது. அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டரின் கணுக்காலில் பலத்த காயம் உண்டானது.
 
கியூரிடஸ்-ஸின் கூற்றுப்படி ''அலெக்ஸாண்டர் மாஸ்ஸாகாவை முற்றிலும் அழிக்காவிட்டாலும் ஓரா-வில் ஏற்படுத்தியதை போன்றே பெரும் சேதத்தை உண்டு பண்ணினார்'' என்று அறிய முடிகிறது. மாஸ்ஸாகா-வின் துயர முடிவினால் அங்கிருந்த பெரும்பாலோர் வெளியேறினர். தொடர்ந்து நெருக்கமாக சண்டையிட்ட அலெக்ஸாண்டர் அந்த மலைக்கோட்டைகளை இரத்தம் தோய்ந்த நான்கு நாள் சண்டைக்கு பிறகு வென்றார்.
 
இதன் பிறகு அலெக்ஸாண்டர் [[சிந்து நதி]]யை கடந்து வந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் பஞ்சாப் பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் போரஸை வென்றார். அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து முதல் முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். ஹைடஸ்பேஸ்-ஸில் கி.மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார்.
 
மேலும் போரஸையே அவன் அதுவரை ஆண்டு வந்த பகுதிகளுக்கு '''சத்ரப்''' எனப்படும் பொறுப்பாளியாக நியமித்து அதுவரை அவனது ஆளுகைக்குட்படாத பகுதிகளையும் அவனது கட்டுபாட்டில் கொடுத்தார். கிரீஸில் இருந்து வெகுதூரத்தில் இந்த நிலப்பகுதிகள் தன்னால் கவனித்துக்கொள்ள முடியாத படியால் இந்த பகுதியில் இருந்த பெரும் பகுதியை போரஸின் ஆளுகையின் கீழ் தனது பிரதிநிதியாக நியமித்து கௌரவப்படுத்தினார்.
 
ஹைடஸ்பேஸ் ஆற்றின் இரு கரைகளிலும் இரு நகரங்களை அலெக்ஸாண்டர் நிர்மாணித்தார் அவற்றில் ஒன்றிற்கு இத்தருணத்தில் இறந்த தனது குதிரையின் நினைவாக ''பூசிஃபலா'' என்று பெயரிட்டார். மற்றொரு நகரத்தின் பெயர் நிசிய(வெற்றி) அதுவே தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் '''மாங்''' பகுதி.
=== அலெக்ஸாண்டர் படையில் ராணுவப்புரட்சி ===
 
போரஸ் மன்னனின் சாம்ராஜ்யத்திற்கு கிழக்கே இருந்த [[மகத நாடு|மகத நாட்டின்]] [[நந்தர்]] அரசும் வங்காளத்தின் கங்கரிடை அரசும் அலெக்ஸாண்டரின் மாபெரும் படைகள் அடுத்தது கிழக்கு நோக்கி தங்களை தான் குறிவைக்கும் என்று பயந்தன.
 
அதே சமயம் ஹைபசிஸ் ஆற்றின் கரையில் அலெக்ஸாண்டரின் படையில் உட்பூசல் வெடித்தது. தொடர்ந்து அவர்கள் கிழக்கு நோக்கி பயணிக்க தயாராக இல்லை. இந்த ஆறு தான் அலெக்ஸாண்டரின் கிழக்கு திசையின் எல்லையாக இருந்தது. அதே சமயம் லட்சிய வேட்கை தணிந்து சோர்ந்திருந்த மாசீடோனிய படையினர் அங்கேயே தங்கினர்.
[[படிமம்:Alexander and Hephaestion.jpg|thumb|அலெக்ஸாண்டர் (இடது) மற்றும் ஹெபெஷன் (வலது)]]
 
இவர் இல்லாத காலகட்டங்களில் இவர் ஆட்சி பொறுப்பில் அமர்த்திய பல சர்வாதிகார ஆளுநர்களும் சத்ரப்'களும் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டதை அலெக்ஸாண்டர் கண்டறிந்தார் இதன் காரணமாக அவர்களில் பலரை கொன்றார். மேலும் அவரது வீரர்களுக்கு கடன் வழங்கினார்.
 
மேலும் இவர் க்ராடேருஸ் தலைமையில் வாலிபம் கடந்த பலவீனமான வீரனாக மாசீடோன்-க்கு திரும்புவதாக அறிவித்தார். இவரது படையினர் அந்த கூற்றை தவறாக புரிந்துகொண்டு ஒபிஸ் நகரில் கழகத்தில் ஈடுபட்டனர். பாரசீகத்தின் இறையாண்மையை மதிக்க தவறினர். மூன்று நாட்களுக்கு பின்னும் அடங்காத கழகத்தினால் வெறுப்புற்ற அலெக்ஸாண்டர் மசீடோனியர்களால் அளிக்கப்பட்ட அலகுகளையே பாரசீகத்தில் பின்பற்றலாம் என்று அறிவித்தார்.
 
இதன் பின் தவறை உணர்ந்த மாசீடோனியர்கள் மன்னிப்பு கோரினர். அலெக்ஸாண்டரும் மன்னித்தார். அதற்காக அவரளித்த விருந்தில் பல்லாயிரகணக்கனோர் ஒன்றாக உணவருந்தி களித்தனர். பாரசீகத்தினருக்கும் மாசீடோனியர்களுக்கும் இடையில் சமாதானம் உண்டுபண்ணும் முயற்சியாக பாரசீகத்தின் குலத்திலிருந்து ஒருவரை அலெக்ஸாண்டர் மணந்துகொண்டார்.
 
எக்பட்டானா-விற்கு திரும்பிய பின்பு அலெக்ஸாண்டர் பாரசீகத்தின் கருவூலத்தை மீட்டெடுத்தார். இவரது நெருங்கிய ரகசிய தோழனான ஹெபெஷன் மர்மமான முறையில் இறந்தார். அவர் உடல்நலமின்றி இறந்தாலும் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதாகவும் சான்றுகள் இருந்தமையால் அலெக்ஸாண்டர் மிகவும் மனம் வெதும்பினார். அலெக்ஸாண்டர் ஹெபெஷனின் மரணத்தினால் குலைந்து போனார்.
 
மேலும் துணைவனும் தோழனுமான ஹெபெஷனின் ஈமசடங்கிற்கு பாபிலோனில் மிக்க பொருட்செலவில் ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டார். இதன் பின்னர் மீண்டும் ஒரு பெரிய அளவிலான போர்த்தொடருக்கு அலெக்ஸாண்டர் திட்டம் தீட்டினார். ஆனால் அவற்றை எல்லாம் ஆரம்பிக்கும் முன்பே அவர் மரணித்தார்.
[[பகுப்பு:போர்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|ar}}
{{Link FA|fi}}
{{Link FA|he}}
{{Link FA|li}}
{{Link FA|mk}}
{{Link FA|mr}}
{{Link FA|sk}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1828203" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி