அல்சீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெளியிணைப்புகள்: *விரிவாக்கம்*
வரிசை 94: வரிசை 94:
{{reflist}}
{{reflist}}
==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
* [http://www.algerie-architecture.com Algérie Art et Architecture الجزائر فن و هندسة - Algeria]
{{commonscat|அல்சீரியா}}
{{commonscat|அல்சீரியா}}
{{Sister project links|voy=Algeria|அல்சீரியா}}
{{Wikibooks|Wikijunior:Countries A-Z|அல்சீரியா}}
* [http://www.el-mouradia.dz/ People's Democratic Republic of Algeria] ''official government website'' {{ar icon}} / {{fr icon}}
* {{CIA World Factbook link|ag|Algeria}}
* {{dmoz|Regional/Africa/Algeria}}
* [http://www.bbc.co.uk/news/world-africa-14118852 Algeria profile] from the BBC News
* {{Wikiatlas|Algeria}}
* [http://www.ifs.du.edu/ifs/frm_CountryProfile.aspx?Country=DZ Key Development Forecasts for Algeria] from [[International Futures]]
* [http://www.enpi-info.eu/countrymed.php?country=1 EU Neighbourhood Info Centre: Algeria]
* [http://www.zmne.hu/aarms/docs/Volume9/Issue1/pdf/07.pdf Saharawi refugees in Algeria]
* [http://www.algerie-architecture.com Algérie Art et Architecture الجزائر فن و هندسة - Algeria]

{{Geographic location
| Northwest = '''[[நடுநிலக் கடல்]]'''
| North = '''[[நடுநிலக் கடல்]]'''
| Northeast ='''[[நடுநிலக் கடல்]]'''
| West = {{Flagicon|Morocco}} <br /> {{Flagicon|Western Sahara}}
| Centre = {{flagicon|Algeria|50px}}
| East = {{Flagicon|Tunisia}} <br /> {{Flagicon|Libya}}
| Southwest = {{Flagicon|Mauritania}}
| South = {{Flagicon|Mali}}
| Southeast = {{Flagicon|Niger}}
}}
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
{{ஆப்பிரிக்க நாடுகள்}}



06:00, 24 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

அல்ஜீரிய மக்கள் சனநாயக குடியரசு
கொடி of அல்ஜீரியா
கொடி
குறிக்கோள்:  من الشعب و للشعب   (அரபு)
"மக்களிலிருந்தும் மக்களுக்காகவும்"
நாட்டுப்பண்: Kassaman  (அரபு:)
வாக்குறுதி
அல்ஜீரியாஅமைவிடம்
தலைநகரம்அல்ஜியர்ஸ்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு1
மக்கள்அல்ஜீரியன்
அரசாங்கம்அரை அதிபர் குடியரசு
• அதிபர்
அப்துலசீஸ் பூத்தெஃப்லிக்கா
• பிரதமர்
அப்துலசீஸ் பெல்காதெம்
அமைப்பு
• அமாடீட் அரசவம்சம்
1014 இலிருந்து
• ஒட்டோமான் பேரரசு
1516 இலிருந்து
• பிரெஞ்சு காலணித்துவ ஆட்சி
1830 இலிருந்து
ஜூலை 5, 1962
பரப்பு
• மொத்தம்
2,381,740 km2 (919,590 sq mi) (11வது)
• நீர் (%)
negligible
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
33,333,216 (35வது)
• 1998 கணக்கெடுப்பு
29,100,867
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$253.4 பில்லியன் (38வது)
• தலைவிகிதம்
$7,700 (88வது)
மொ.உ.உ. (பெயரளவு)2005 மதிப்பீடு
• மொத்தம்
$102.026 பில்லியன் (48th)
• தலைவிகிதம்
$3,086 (84வது)
ஜினி (1995)35.3
மத்திமம்
மமேசு (2004) 0.728
Error: Invalid HDI value · 102வது
நாணயம்அல்ஜீரிய டினார் (DZD)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
not observed
அழைப்புக்குறி213
இணையக் குறி.dz
  1. Tamazight (berber) languages are recognized as "national languages". French is also widely spoken.

அல்சீரியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகும்.[1] இதல் வடமேற்கு எல்லையில் துனீசியாவும் கிழக்கில் லிபியாவும், தென்கிழக்கில் நைஜரும் தென்மேற்கில் மாலி மற்றும் மௌரித்தானியாவும் மேற்கில் மொரோக்கோவும் அமைந்துள்ளன. மேற்கு சஹாராவுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் மேற்கில் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது.[2] இதன் தலைநகரம் அல்ஜீயர்ஸ். பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. அரபு, பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன.

வரலாறு

கிமு 10000க்கு முன்பே அல்சீரியாவில் மனிதர்கள் இருந்துள்ளதாக தாசிலி தேசியப் பூங்கா சான்றுரைக்கின்றது. கிமு அறுநூறாவது ஆண்டுவாக்கில் திபாசாவில் பீனிசியர்கள் வாழ்ந்துள்ளனர். முஸ்லிம் அராபியர்கள் ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்தனர். பல உள்ளூர் மக்கள் இச்சமயத்தைத் தழுவினர்.

புகழ்பெற்ற கணிதவியலாளர் ஃபிபொனாச்சி (1170—1250) தமது பதின்ம அகவைகளில் அல்சீரியாவில் வாழ்ந்துள்ளார். இங்குதான் அவர் இந்து-அராபிய எண் முறைமையைக் கற்றார்.

1500களிலும் 1700களிலும் அல்சீரியாவின் பெரும்பகுதியை எசுப்பானியப் பேரரசு ஆண்டது. 1517இல் உதுமானியப் பேரரசின் அங்கமாக இருந்தது.

அல்சீரியாவின் பார்பரிக் கடலோரத்திலிருந்து கடற்கொள்ளையர்கள் இயங்கினர். இவர்கள் மக்களை அடிமைகளாக விற்க சிறை பிடித்தனர்.

1830ஆவது ஆண்டிலிருந்து பிரான்சு அல்சீரியாவை ஆண்டது. 1954ஆவது ஆண்டில் உருவான தேசிய விடுதலை முன்னணி (Front de Libération Nationale அல்லது FLN) விடுதலை வேண்டிப் போரிட்டது. இறுதியில் சூலை 5, 1962 அன்று பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. 1963ஆம் ஆண்டில் அகமது பென் பெல்லா அல்சீரியாவின் முதல் அரசுத்தலைவர் ஆனார்.

அல்சீரிய உள்நாட்டுப் போர் 1991ஆம் ஆண்டில் துவங்கியது. இது 2002ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. துனீசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மக்கள் எதிர்ப்பை அடுத்து நாட்டில் நிலவிய நெருக்கடி நிலையை அரசு பெப்ரவரி 24, 2011ஆம் ஆண்டில் இரத்து செய்தது.

புவியியல்

தெற்கு அல்சீரியாவின் பெரும்பகுதி சகாராப் பாலைவனம் ஆகும். வடக்கில் அவுரெசு,நெமெம்ச்சா மலைகள் உள்ளன. இந்த மலைகளில் மிக உயரமான சிகரமாக தகாத் மலை (3,003 மீ) உள்ளது.

மொழிகள்

அலுவல் மொழியாக அரபும் பெர்பெரும் உள்ளன. பரவலாக பிரெஞ்சும் பேசப்படுகின்றது.

மக்கள்தொகை

அல்சீரியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 35 மில்லியனாகும். அல்சீரியாவில் 100,000க்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்டதாக 40 நகரங்கள் உள்ளன.

உலகப் பாரம்பரியக் களங்கள்

யுனெசுக்கோவின் பல உலகப் பாரம்பரியக் களங்கள் அல்சீரியாவில் உள்ளன.[3]இவற்றில் அம்மதிது பேரரசின் முதல் தலைநகரம் பெனி அம்மதின் அல் கல்'ஆ , பீனிசிய மற்றும் உரோமை நகரமான திபாசா, உரோம இடிபாடுகளான இயெமிலாவும் டிம்காடும், பெரிய நகரிய பாலைவனச்சோலை அடங்கிய சுண்ணக்கல் பள்ளத்தாக்கான எம்'சப் பள்ளத்தாக்கு ஆகியன அடங்கும். இவற்றுடன் அல்சீரியாவின் கஸ்பா முக்கியமான கோட்டையாகும். அல்சீரியாவின் ஒரே இயற்கை உலகப் பாரம்பரியக் களமாக மலைத்தொடர் தாசிலி விளங்குகின்றது.

மேற்கோள்கள்

  1. CIA Factbook
  2. http://www.apn-dz.org/apn/english/constitution96/preambule.htm Constitution 1996
  3. UNESCO. "UNESCO World Heritage Centre". பார்க்கப்பட்ட நாள் 25 September 2011.

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அல்சீரியா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்சீரியா&oldid=1810320" இலிருந்து மீள்விக்கப்பட்டது