சண்டக்கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29: வரிசை 29:
[[பகுப்பு:2005 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:2005 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:மதுரைக்களத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மதுரைக்களத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்]]

11:10, 31 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

சண்டக்கோழி
இயக்கம்N.லிங்குசாமி
தயாரிப்புGK Films Corporation
கதைகாசி விஷ்வநாதன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புவிஷால்
மீரா ஜாஸ்மின்
ராஜ்கிரன்
லால்
சுமன் செட்டி
கருப்புசாமி
கஞ்சா கருப்பு
விநியோகம்விக்ரம் கிருஷ்ணா
வெளியீடு2005
ஓட்டம்151 நிமிடங்கள்
மொழிதமிழ்

சண்டக்கோழி திரைப்படம் (2005) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.இத்திரைப்படம் தொடர்ந்து 200 நாட்கள் திரையில் காண்பிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

வகை

மசாலாப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பாலு (விஷால்) கல்லூரியில் படிக்கும் மாணவன் பரீட்சை நடைபெறுவதற்கு முந்தைய நாள் பதற்றநிலையிலிருக்கும் மாணவர்களைச் சமாதானப்படுத்தும் மாணவன். பின்னர் அவர்களினால் பாராட்டினையும் பெறுகின்றார் பாலு.பின்னர் தனது நண்பன் வேண்டுகோளுக்கிணைய அவனின் சொந்த ஊருக்குச் செல்லும் பாலு, அங்கு நண்பனின் தங்கையான ஹேமாவுடன் (மீரா ஜாஸ்மின்) காதல் கொள்கின்றார்.மேலும் அவ்வூரில் காசி என்பவனான காடையர்களின் தலைவனைப் பற்றியும் அறிந்து கொள்ளும் பாலு அவனின் கூட்டாளிகளினால் ஒருவன் கொலை செய்யப்படுவதனையும் பார்க்கின்றான்.பின்னர் பாலு தன் சொந்த ஊர் திரும்பும் வழியில் காசி ஒருவனை அரிவாளுடன் வெட்டுவதற்குத் துரத்துகின்றான் அச்சமயம் காசியைத் தடுத்து நிறுத்தும் பாலு, அவன் தான் காசி என்பதனை தெரிந்தபிறகு அவனைத் தாக்கவும் செய்கின்றான்.பின்னர் தனது ஊரான மதுரையையும் வந்தடைகின்றான் பாலு.பாலுவைப் பழிவாங்குவதற்காக அலைந்து திரியும் காசியும் மதுரையை வந்தடைகின்றான்.அங்கு மதுரையில் மிகப்பெரிய செல்வாக்குடைய துரையின் மகனே பாலு என்பதனையும் அறிந்து கொள்கின்றான் காசி. ஒன்றிரண்டு முறை கொல்ல முயற்சித்தும் தோல்வியடையும் காசியிடம், மதுரையில் பாலு குடும்பத்திற்கு எதிரான உறவினர் ஒருவர் தன் உதவியை வழங்குகின்றார். கோவில் திருவிழாவில் துரை தவறுதலாக வெட்டப்படவே, காசி அங்கு பாலுவைக் கொல்ல வந்திருப்பதனைத் தெரிந்து கொள்ளும் பாலுவின் தந்தையும் அவரின் காவலாளிகளும் அவ்வூர் மக்கள் பலரும் சேர்ந்து காசியின் குழுவைத் தேடுகின்றனர்.பின்னர் காசிக்கு அடைக்கலம் கொடுத்திருந்தவனை அறிந்து அவ்விடத்திற்கும் செல்கின்றனர்.அங்கு பாலுவுடன் நேருக்கு நேர் மோதும்படியும் காசிக்கு கூறினார் பாலுவின் தந்தையான துறை.பாலு காசியை வெல்கின்றானா என்பதே கதையின் முடிவு.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டக்கோழி&oldid=1798991" இலிருந்து மீள்விக்கப்பட்டது