ஆலோவீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:32, 31 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்

ஹாலோவீன் (ஆங்கிலம்: Halloween) அக்டோபர் 31 அன்று இரவு கொண்டாடப்படும் பண்டிகையாகும். பயமுறுத்தும் அல்லது கேளியான வேடங்களில் ஆடைகள் அணிந்து பலரும் உலா வருவதும், குழந்தைகள் அலங்கரிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று இனிப்புகள் பெறுவதும் இப்பண்டிகையின் சிறப்பம்சங்கள். அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இப்பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Halloween என்கிற ஆங்கிலப் பெயர் All-Hallow-Even என்னும் பதத்திலிருந்து வந்ததாகும். All Hallow's Day அல்லது All Saints Day என்கிற கிறிஸ்தவத் திருநாளின் முன்னிரவு என்பது இதன் பொருளாகும். பண்டைய காலத்தில் அயர்லாந்து மற்றும் ஐக்கிய ராச்சியத்தில் கொண்டாடப்பட்ட சம்ஹைன் (ஆங்கிலம்: Samhain) என்கிற பாகன் (ஆங்கிலம்: Pagan) பண்டிகையே பிற்காலத்தில் ஹாலோவீன் என்று கொண்டாடப்படுகிறது.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலோவீன்&oldid=179486" இலிருந்து மீள்விக்கப்பட்டது