பரிமாற்றுக் குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: zh-classical:交換群
சி robot Adding: fa:گروه آبلی
வரிசை 25: வரிசை 25:
[[es:Grupo abeliano]]
[[es:Grupo abeliano]]
[[et:Abeli rühm]]
[[et:Abeli rühm]]
[[fa:گروه آبلی]]
[[fi:Abelin ryhmä]]
[[fi:Abelin ryhmä]]
[[fr:Groupe abélien]]
[[fr:Groupe abélien]]

20:56, 30 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம்

கணிதத்தில் குலம் என்ற அமைப்பு இயற்கணித அமைப்புகளில் ஓர் அடிப்படை அமைப்பு. ஒட்டுறவுள்ள ஒரு செயல்பாடு அமைக்கப்பெற்ற ஒரு கணத்தில் அதற்கு ஓர் ஒற்றொருமையும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு நேர்மாறும் இருந்துவிட்டால அவ்வமைப்பு குலம் எனப் பெயர் பெறும். குலங்களில் இருவகையுண்டு. பரிமாற்று விதிக்கொத்த குலங்கள் பரிமாற்றுக் குலங்கள் என்று பெயர் பெறுகின்றன. இவைகளுக்கு ஏபெல் குலங்கள் என்ற மாற்றுப் பெயரும் உண்டு. ஏபெல் என்பவர் நார்வேயில் 19-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதத்தில் உலகமனைத்தும் போற்றிய பல முன்னோட்டங்களைச் செய்தவர்.

பரிமாற்று விதி முழுமையாக ஒவ்வாத குலங்கள் பரிமாறாக் குலங்கள் அல்லது பரிமாறலற்ற குலங்கள் என்று கூறப்படும்.

இருபதாவது நூற்றாண்டில் குவாண்டம் இயக்கவியல் தோன்றிய காலத்திலிருந்து பரிமாறாக் குலங்களின் முக்கியத்துவம் அதிகமாகி, இன்று கணிதத்திலும் இயற்பியலிலும் அது ஒரு முக்கிய பிரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. அணிகளடங்கிய பல குலங்களும், ஐந்து பிளேடோனிக் திண்மங்கள் சார்ந்த குலங்களும் பரிமாறாக் குலங்களே.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிமாற்றுக்_குலம்&oldid=179253" இலிருந்து மீள்விக்கப்பட்டது