அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
C.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)
*திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
'''அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்''' (''State Express Transport Corporation - SETC'')தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு ''திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்'' என அழைக்கப்பட்டது. [[சென்னை]]யைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இது [[தமிழ்நாடு_அரசுப்_போக்குவரத்துக்_கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தின்]] 8 பிரிவுகளில் ஒன்றாகும்.
'''அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்''' (''State Express Transport Corporation - SETC'') தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு ''திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்'' என அழைக்கப்பட்டது. [[சென்னை]]யைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது [[தமிழ்நாடு_அரசுப்_போக்குவரத்துக்_கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தின்]] 8 பிரிவுகளில் ஒன்றாகும்.


இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் [[கேரளம்]], [[கர்நாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன.
இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் [[கேரளம்]], [[கர்நாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன.

05:44, 17 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (State Express Transport Corporation - SETC) தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என அழைக்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தின் 8 பிரிவுகளில் ஒன்றாகும்.

இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன.

தோற்றமும் வளர்ச்சியும்

தமிழக அரசால் மாவட்டங்களின் தலைநகரங்களை இணைக்க 1975ம் ஆண்டு அதிவிரைவுப் பேருந்துப் போக்குவரத்தினைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 15 செப்டம்பர் 1975 சென்னையிலிருந்து இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 14 ஜனவரி 1980ல் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்-ஆக செயல்படத் தொடங்கியது.

திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் 276 பேருந்துகளுடன் தொடங்கப்பட்டு பின்னர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்போது 954 பேருந்துகளுடன் மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

இப்போது பெரும்பாலான வழித்தடங்களில் இயங்கும் இத்துறையின் பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசு பேருந்துகளாக மாற்றப்பட்டு பயணத்திற்கு இனிமை சேர்க்கின்றன.விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை,திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப் படுகின்றன.விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்பொழுது 16 பணிமனைகள் உள்ளன.இதில் இரண்டு பணிமனைகள் பிற மாநிலங்களில்(திருவனந்தபுரம்,பாண்டிச்சேரி) அமைந்துள்ளன.இப்போக்குவரத்துக் கழகத்தின் மேற்கூரை கட்டும் பிரிவு நாகர்கோவில் பணிமனையில் அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்