சாந்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{Infobox_Film |
{{Infobox_Film |
name = சாந்தி|
name = சாந்தி|

09:47, 7 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

சாந்தி
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஏ. எல். சீனிவாசன்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
எஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுஏப்ரல் 22, 1965
நீளம்4272 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாந்தி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த, இத்திரைப்படம் ஏ. பீம்சிங் இயக்கத்தில் ஏ. எல். சீனிவாசன் தயாரிப்பில் உருவான திரைப்படமாகும்.

கதைச் சுருக்கம்

சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது இறந்துவிடுவார். எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன்போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும். சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார்.

வெளியீடு

கதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்ததால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ. எல். சீனிவாசன் படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

பாடல்கள்

இத்திரைப்படம் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். .[1]

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்) நீளம் (நி: நொ)
1 "யார் அந்த நிலவு" கண்ணதாசன் டி. எம். சௌந்தரராஜன் 04:30
2 "நெஞ்சத்திலே நீ" பி. சுசீலா 03:24
3 "ஊரெங்கும் மாப்பிள்ளை" பி. சுசீலா 04:21
4 "செந்தூர் முருகன்" பி. சுசீலா 03:38
5 "செந்தூர் முருகன் 2" பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா 04:55
6 "வாழ்ந்து பார்க்க வேண்டும்" டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ் 03:53

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_(திரைப்படம்)&oldid=1782245" இலிருந்து மீள்விக்கப்பட்டது