செல்யூக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
→‎உசாத்துணைகள்: *திருத்தம்*
வரிசை 19: வரிசை 19:
{{Reflist}}
{{Reflist}}
==உசாத்துணைகள்==
==உசாத்துணைகள்==
*[[Kevin Alan Brook|Brook, Kevin Alan]]. ''The Jews of Khazaria.'' 2nd ed. Rowman & Littlefield Publishers, Inc, 2006.
*Brook, Kevin Alan. ''The Jews of Khazaria.'' 2nd ed. Rowman & Littlefield Publishers, Inc, 2006.
*[[Douglas M. Dunlop|Dunlop, D.M]]. "The Khazars." ''The [[Dark Ages (historiography)|Dark Ages]]: Jews in Christian Europe, 711-1096''. 1966.
*Dunlop, D.M. "The Khazars." ''The Dark Ages: Jews in Christian Europe, 711-1096''. 1966.
*Findley, Carter Vaughn. ''The Turks in World History'', pp. 68, 2005, Oxford University Press
*Findley, Carter Vaughn. ''The Turks in World History'', pp. 68, 2005, Oxford University Press
*Grousset, Rene . ''The Empire of the Steppes'' Rutgers University Press, 1970.
*Grousset, Rene . ''The Empire of the Steppes'' Rutgers University Press, 1970.
*Rice, Tamara Talbot. ''The Seljuks in [[Asia Minor]].'' Thames and Hudson, London, 1961.
*Rice, Tamara Talbot. ''The Seljuks in [[அனத்தோலியா]].'' Thames and Hudson, London, 1961.
*Golden, Peter B. "Central Asia in World History". Oxford University Press, New York, 2011.
*Golden, Peter B. "Central Asia in World History". Oxford University Press, New York, 2011.
[[பகுப்பு:செல்யூக் அரசர்கள்]]
[[பகுப்பு:செல்யூக் அரசர்கள்]]

16:14, 6 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

செல்யுக்
செல்யூக் துருக்கியரின் நாயகன்
முழுப்பெயர்
Seljuk
மரபுசெல்யூக் அரசமரபு
இறப்புஅண். 1036

செல்யூக் (Seljuk, துருக்கிய மொழி: Selçuk, பாரசீக மொழி: سلجوق‎; இறப்பு அண். 1038) தனது பெயரால் அழைக்கப்படும் செல்யூக் துருக்கியரின் நாயகன் ஆவார். தெமுர் யாலிக் ("இரும்பு வில்லுடைய" எனப் பொருள்படும்) என்ற கடைசிப்பெயருடைய டோகாக் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஓகுசு துருக்கியரின் கினிக் இனத் தலைவராகவோ முக்கிய நபராகவோ இருந்திருக்கலாம். ஏரல் மற்றும் காசுப்பியன் கடல்களுக்கு இடையே வாழ்ந்த ஒன்பது இனங்களின் கூட்டான டோகுசு-ஓகுசு இனத்திலிருந்து 985இல் செல்யூக் இனம் பிரிந்தது.[1][2] தற்கால தென்-மத்திய கசக்ஸ்தானின் கிசைல் ஓர்டா அருகே சிர் தர்யா ஆற்றின் வலது கரையில் குடியேறினர். இங்கு, செல்யூக் இசுலாம் சமயத்தைத் தழுவினார்.[3]

இவரது மகன்களின் விவிலியப் பெயர்களைக் கொண்டு — மிக்கைல் (Michael), இசுரைல் (Israel), மூசா (Moses), யூனிசு (Jonah) — இவரது முன்னாள் சமயம் கசர் யூதமாகவோ நெசுடோரியன் கிறித்தவமாகவோ இருந்திருக்கலாம்.[4] சில சான்றுகளின்படி செல்யூக் கசார் படையில் தளபதியாக தனது பணிவாழ்வைத் துவங்கியிருக்கலாம். [5]

மிக்கைலின் மகன்கள் துக்ருல்லும் காக்ரியும் செல்யூக் பேரரசை குராசனுக்கு மாற்றினர். செல்யூக்கள் உள்ளூர் முஸ்லிம்களை கொள்ளையடிப்பதை கசுனவிடு தடுத்ததால் மே 23, 1040இல் டண்டனகான் சண்டை மூண்டது. இதில் வென்ற செல்யூக்குகள் குரசானின் தலைவர்களாயினர். அவர்களது ஆட்சி ஈரான் வரை பரவியது. 1055இல் துக்ருல் தனது ஆட்சியை பக்தாத் வரை விரிவுபடுத்தி அப்பாசியக் கலீபகத்தை வென்றான்; அங்கு இவனுக்கு சுல்தான் என்ற பட்டம் வழங்கப்பட்டது. முந்தைய ஆட்சியாளர்களுக்கும் இந்தப் பட்டம் வழங்கப்பட்டிருக்கலாம்;ஆனால் செல்யூக்கியர்களே இந்தப் பட்டதை தங்கள் காசுகளில் பதிந்தவர்களாவர்.[6]

மரபு

செல்யூக் காலத்திலிருந்து துருக்கிய மக்கள் செல்யூக் என்பதை தங்கள் முதல் பெயராகக் கொள்வது பரவலாக உள்ளது.

மேற்சான்றுகள்

  1. Golden, Peter B. Central Asia in World History, (Oxford University Press, New York, 2011), 74.
  2. The Political and Dynastic History of the Iranian World, C.E. Bosworth, The Cambridge History of Iran:The Saljuq and Mongol Periods, Vol.5, ed. J. A. Boyle, (Cambridge University Press, 1968), 16.
  3. Michael Adas, Agricultural and Pastoral Societies in Ancient and Classical History, (Temple University Press, 2001), 99.
  4. Brook 74; Dunlop passim.
  5. Rice 18-19.
  6. Findley 68.

உசாத்துணைகள்

  • Brook, Kevin Alan. The Jews of Khazaria. 2nd ed. Rowman & Littlefield Publishers, Inc, 2006.
  • Dunlop, D.M. "The Khazars." The Dark Ages: Jews in Christian Europe, 711-1096. 1966.
  • Findley, Carter Vaughn. The Turks in World History, pp. 68, 2005, Oxford University Press
  • Grousset, Rene . The Empire of the Steppes Rutgers University Press, 1970.
  • Rice, Tamara Talbot. The Seljuks in அனத்தோலியா. Thames and Hudson, London, 1961.
  • Golden, Peter B. "Central Asia in World History". Oxford University Press, New York, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்யூக்&oldid=1762116" இலிருந்து மீள்விக்கப்பட்டது