பிளேக் நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1: வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{About|[[எர்சினியா பெசுட்டிசு]] என்ற நுண்ணுயிரியால் ஏற்படும் நோய்|உலகு பரவுநோய்க்கு|பிளேக்}}
{{About|[[எர்சினியா பெசுட்டிசு]] என்ற நுண்ணுயிரியால் ஏற்படும் நோய்|உலகு பரவுநோய்க்கு|பிளேக்}}
{{Infobox disease
{{Infobox disease

16:15, 19 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

பிளேக்
200 முறை பெரிதாக்கப்பட்ட எர்சினியா பெசுட்டிசு நுண்ணுயிரி. உண்ணிகளால் பரப்பப்படும் இந்த நுண்ணுயிரி பிளேக் நோயின் பல்வேறு வகைகளுக்கு காரணமாக உள்ளது.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10A20.a
ஐ.சி.டி.-9020
மெரிசின்பிளசு000596
ஈமெடிசின்med/3381
பேசியண்ட் ஐ.இபிளேக் நோய்
ம.பா.தD010930

பிளேக் (Plague) குடலிய நுண்ணுயிரி வகையான எர்சினியா பெசுட்டிசால் ஏற்படும் கொடிய நோய்த்தொற்று ஆகும். இந்த பாக்டீரியாவினால் பிளேக் நோய் ஏற்படுகின்றது என்பதை பிரான்சிய-சுவிசு மருத்துவரான அலெக்சாண்டர் எர்சினும் சப்பானின் ஷிபாசாபுரோ கிடசாட்டோவும் 1894இல் ஹாங்காங்கில் கண்டறிந்து அறிவித்தனர். இந்த நோயைப் பரப்பும் நோய்ப்பரப்பி உயிரினமாக (vector) இறந்த எலிகளின் உடலில் வாழும் உண்ணிகளை அடையாளம் கண்டவர் பவுல்-லூயி சைமண்டு ஆகும்.

சூன் 2007 வரை உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட வேண்டிய மூன்று நோய்களில் ஒன்றாக பிளேக் நோய் இருந்தது; வாந்திபேதியும் மஞ்சள் காய்ச்சலும் மற்ற இரு நோய்களாகும்.[1]

நுரையீரல் தொற்றால் ஏற்பட்டதா அல்லது அசுத்தம் காரணமாக ஏற்பட்டதா என்பதைப் பொறுத்து பிளேக்நோய் காற்று மூலமாகவோ நேரடித் தொடர்பு மூலமாகவோ சரியாக சமைக்கப்படாத மாசுமிகு உணவாலோ பரவலாம். ஒவ்வொரு நபரின் பாதிக்கப்பட்ட உடற்பகுதியைப் பொறுத்து பிளேக் நோயின் அறிகுறிகள் அமைந்திருக்கும்: அரையாப்பு பிளேக்கு நிணநீர்க் கணுக்களிலும், குருதிநச்சு பிளேக்கு குருதி நாளங்களிலும், வளியிய பிளேக்கு நுரையீரல்களிலும் ஏற்படும். துவக்கத்திலேயே சிகிட்சை அளிக்கப்பட்டால் இது குணமாகக் கூடிய நோய். உலகின் சிலபகுதிகளில் பிளேக்கு இன்னமும் தொற்றுநோயாக உள்ளது.

பெயர்

நோய் தோன்றுவழி ஆய்வு பயன்பாட்டில் "பிளேக்" தற்போது அரையாப்புகளில் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுக்களைக் குறிக்கின்றது; இருப்பினும் முற்காலங்களில் உலகம்பரவுநோய்களுக்கு பொதுவாக "பிளேக்கு" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பிளேக்கு என்று பெரும்பாலும் "அரையாப்பு பிளேக்கேக்" குறிப்பிடப்பட்டாலும் இது இதன் ஒரு வெளிப்பாடே ஆகும்; மற்ற இரு வகைகளாக குருதிநச்சு பிளேக்கும் வளியிய பிளேக்கும் உள்ளன. இந்த நோய் "கருப்பு பிளேக்கு" என்றும் "கறுப்புச் சாவு" என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இச்சொல்லின் சொற்பிறப்பியல்: "பிளேக்" இலத்தீன சொல்லான plāga ("அடி, காயம்") என்பதிலிருந்தும் plangere (“அடித்தல், தாக்குதல்”) என்பதிலிருந்தும் வந்திருக்கலாம்.

மேற்சான்றுகள்

  1. "WHO IHR Brief No. 2. Notification and other reporting requirements under the IHR (2005)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.

உசாத்துணைகள்

  1. Pedro N. Acha , Zoonoses and Communicable Diseases Common to Man and Animals , Second Ed . P 132 .
  2. Parks Text book of Preventive and Social Medicine, 2007, 19th ed, Bhanot, Jabalpur
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேக்_நோய்&oldid=1756157" இலிருந்து மீள்விக்கப்பட்டது