சந்தைப்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{Marketing}}
பொருள் அல்லது சேவையை "இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று யோசித்து ஆரம்பிக்கும் நடவடிக்கையிலிருந்து அதை [[இலாபம்|இலாபகரமாகத்]] தயாரிப்பு செய்து [[சந்தை|சந்தைக்கு]] எடுத்து வந்து [[நுகர்வோர்|நுகர்வோருக்கு]] அளிப்பதை சந்தைப்படுத்தல் எனலாம். இதில் நுகர்வோர் இலக்கு என்றாலும், நுகர்வோரிடம் நெருக்கிய தொடர்புடைய [[விற்பனை|விற்பனையாளர்]] மிக முக்கியமாகக் கருதப்படுகிறார்.
பொருள் அல்லது சேவையை "இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று யோசித்து ஆரம்பிக்கும் நடவடிக்கையிலிருந்து அதை [[இலாபம்|இலாபகரமாகத்]] தயாரிப்பு செய்து [[சந்தை|சந்தைக்கு]] எடுத்து வந்து [[நுகர்வோர்|நுகர்வோருக்கு]] அளிப்பதை சந்தைப்படுத்தல் எனலாம். இதில் நுகர்வோர் இலக்கு என்றாலும், நுகர்வோரிடம் நெருக்கிய தொடர்புடைய [[விற்பனை|விற்பனையாளர்]] மிக முக்கியமாகக் கருதப்படுகிறார்.



05:19, 14 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

பொருள் அல்லது சேவையை "இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று யோசித்து ஆரம்பிக்கும் நடவடிக்கையிலிருந்து அதை இலாபகரமாகத் தயாரிப்பு செய்து சந்தைக்கு எடுத்து வந்து நுகர்வோருக்கு அளிப்பதை சந்தைப்படுத்தல் எனலாம். இதில் நுகர்வோர் இலக்கு என்றாலும், நுகர்வோரிடம் நெருக்கிய தொடர்புடைய விற்பனையாளர் மிக முக்கியமாகக் கருதப்படுகிறார்.

விற்பனையாளர்

விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் பெருமளவில் செயற்படுத்தப் படுகின்றன. அவற்றுள் சில கீழே குறிப்பிடப்படுகின்றன. இவ்வகை நடவடிக்கைகளின் நோக்கங்கள் அதிக அளவில் பொருளை கடையில் அடுக்க முனைதல், அதிக அளவில் விற்க வைக்க முனைதல் போன்றவை ஆகும்.

  • காட்சிக்கு வைப்பதற்கு சலுகை (Display Allowance) : விற்பனையாளர் தனது கடைகளில் குறிப்பிட்ட பொருளை முன்னிறுத்தி காட்சிக்கு வைக்க சம்மதிப்பதன் பேரில் இத்தகைய சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
  • தாமதமான பில்லிங் (Delayed Billing) : விற்பனையாளர் பொருளை வாங்குவதற்கான செலவுகளைக் குறைக்கும் வகையில் நமது பில்லை அனுப்புவதை சற்று தாமதப்படுத்தலாம். விற்பனையாளரின் பணச்சுழற்சிக்கு இது உதவுகிறது.
  • குலுக்கல் முறைப் பரிசுகள் (Sweepstakes) : அதிக அளவில் விற்பனையைத் தேடித் தரும் விற்பனையாளர்களுக்கு, குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலோ அல்லது குலுக்கல் முறையிலோ பரிசுகள் வழங்கப்படுகின்றன.

உற்பத்தியாளரின் நடவடிக்கைகள்

உற்பத்தி நிறுவனங்கள், பல நேரங்களில் விற்பனையை உயர்த்த, சில சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கின்றன. இவையே விற்பனை உயர்வு (Sales Promotions) என்று குறிக்கப்படுகின்றன. இவை இரண்டு வகைப்படுகின்றன.

  1. வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள்(Consumer Promotions):வாடிக்கையாளர்களை முதல்முறையாக தங்கள் பொருட்களை வாங்க வைக்கும் நோக்கத்திலோ, அல்லது ஏற்கெனவே வாங்குபவர் என்றால் கூடுதலாக வாங்க வைக்கும் நோக்கத்திலோ வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  2. விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் (Trade Promotions): விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகளின் நோக்கம், அவர்களிடையே நமது பொருட்களை தீவிரமாக விற்கின்ற முனைப்பை ஏற்படுத்தவே ஆகும். பல நேரங்களில் தேக்கம் கண்டுள்ள சரக்கினை 'தள்ளி விடுவதற்காக'வும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
  3. ஒரு ஆய்வறிக்கையின்படி, எழுபது முன்னணி நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் செலவுகளை ஆராய்ந்த போது, ஒரு நிறுவனத்தின் ஏறக்குறைய 73% செலவு, விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளுக்கே செலவிடப்படுகிறது. மீதம் 27% தான் நேரடியான விளம்பரங்களுக்கு செலவிடப்படுகிறது. எனவே இத்தகைய நடவடிக்கைகளின் முக்கியத்துவம் புலப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தைப்படுத்தல்&oldid=1754132" இலிருந்து மீள்விக்கப்பட்டது