வல்லவரையன் வந்தியத்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34: வரிசை 34:
* [vandiyadevan vaal] (Novel) - Vikraman
* [vandiyadevan vaal] (Novel) - Vikraman
* [Gangapuri Kavalan] (Novel) - Vikraman
* [Gangapuri Kavalan] (Novel) - Vikraman
* Udayar - Balakumaran


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

09:33, 30 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.

வாணர்கள்

"சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி 
ஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன் 
பாவேந்தர் தம்வேந்தன் வாணன் பறித்து
நட்டான் மூவேந்தர் தங்கள் முடி!" 

"என் கவிகை என் சிவிகை
என் கவசம் என்துவசம் 
என்கரி யீ(து) என்பரி யீது என்பரே - 
மன்கவன மாவேந்தன் 
வாணன் வரிசைப் பரிசு
பெற்ற பாவேந்தரை, வேந்தர் பார்த்து!" 

"வாணன் புகழுரையா வாயுண்டோ மாகதர்கோன் 
வாணன் பெயரெழுதா மார்புண்டோ - வாணன் 
கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ
அடிதாங்கி நில்லா அரசு!" 

என்று பாடல்களால் போற்றப்படும் வாணர் குலத்தில் பிறந்தவர் வந்தியத்தேவர்.

நூல்கள்

வந்தியத்தேவனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

  • "பொன்னியின் செல்வன் - கல்கி" - வந்தியத்தேவனை கதைமாந்தராக கொண்டு கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • []

இவற்றையும் பார்க்கவும்

சோழர்