ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,537 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
'''ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா''' ([[செப்டம்பர் 17]] [[1906]] - [[நவம்பர் 1]] [[1996]]), [[இலங்கை]]யின் இரண்டாவது [[இலங்கை சனாதிபதி|சனாதிபதியும்]] [[நிறைவேற்று அதிகாரம்]] கொண்ட முதலாவது சனாதிபதியுமாவார். இவர் பெயரின் சுருக்கமான ஜே.ஆர். என பிரபலமாக அறியப்பட்டார். இவர் சனாதிபதி பதவியை ஏற்கும் முன் அரசில் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார்.
 
==இளமைக் காலம்==
இவர் இலங்கையின் சட்டத்துறையில் பிரபலமாக விளங்கிய குடும்பமொன்றில் பிறந்தார். இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த கௌரவ நீதியரசர் இயுஜீன் வில்பிரெட் ஜயவர்தனாவுக்கும், இலங்கையின் செல்வந்த வணிகர்களுள் ஒருவரின் மகளான அக்னசு டொன் பிலிப் விஜயவர்தனாவுக்கும் பிறந்த 11 பிள்ளைகளுள் இவரே முதலாமவர். இராணியின் வழக்கறிஞர் (QC) ஹெக்டர் வில்பிரெட் ஜயவர்தனா, மருத்துவர் ரொலி ஜயவர்தனா ஆகியோர் இவரது தம்பியர்கள். கர்னல் தியடோர் ஜயவர்தனா, நீதியரசர் [[வலன்டைன் ஜயவர்தனா]] ஆகியோர் இவரது தந்தையின் உடன்பிறந்தோர். பத்திரிகைத் துறையில் பிரபலமான [[டி. ஆர். விஜேவர்தனா]] இவரது மாமா.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1747973" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி