மினார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Egypt.Aswan.Mosque.02.jpg|thumb|right|150px|எகிப்திய மசூதி]]
[[படிமம்:Egypt.Aswan.Mosque.02.jpg|thumb|right|150px|எகிப்திய மசூதி]]
[[படிமம்:Minaret of the Great Mosque of Kairouan, Tunisia.jpg|thumb|left|150px|துனீசியாவின் கைரூவான் நகரில் உள்ள உக்பா மசூதியில் உள்ள மினார். உலகின் நிலைத்திருக்கும் மினார்களில் மிகவும் பழையது.<ref name="art of islam"/>]]
[[படிமம்:Minaret of the Great Mosque of Kairouan, Tunisia.jpg|thumb|150px|துனீசியாவின் கைரூவான் நகரில் உள்ள உக்பா மசூதியில் உள்ள மினார். உலகின் நிலைத்திருக்கும் மினார்களில் மிகவும் பழையது.<ref name="art of islam"/>]]
'''மினார்''' என்பது, [[இஸ்லாமியர்|இஸ்லாமியரின்]] வணக்கத்தலமான [[பள்ளிவாசல்]]களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை. இவை பள்ளிவாசலின் ஏனைய பகுதிகளிலும் உயரமாக அமைந்திருக்கக் காணலாம். மினார்கள் பள்ளிவாசல் கட்டிடத்துடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமைந்திருக்கும்.
'''மினார்''' என்பது, [[இஸ்லாமியர்|இஸ்லாமியரின்]] வணக்கத்தலமான [[பள்ளிவாசல்]]களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை. இவை பள்ளிவாசலின் ஏனைய பகுதிகளிலும் உயரமாக அமைந்திருக்கக் காணலாம். மினார்கள் பள்ளிவாசல் கட்டிடத்துடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமைந்திருக்கும்.



15:38, 26 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

எகிப்திய மசூதி
துனீசியாவின் கைரூவான் நகரில் உள்ள உக்பா மசூதியில் உள்ள மினார். உலகின் நிலைத்திருக்கும் மினார்களில் மிகவும் பழையது.[1]

மினார் என்பது, இஸ்லாமியரின் வணக்கத்தலமான பள்ளிவாசல்களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை. இவை பள்ளிவாசலின் ஏனைய பகுதிகளிலும் உயரமாக அமைந்திருக்கக் காணலாம். மினார்கள் பள்ளிவாசல் கட்டிடத்துடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமைந்திருக்கும்.

பயன்பாடு

மினார்களின் முக்கிய செயற்பாடு, தொழுகை நேரங்களில் முஸ்லீம்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியான உயரமான இடமாகத் தொழிற்படுவதாகும். எனினும் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள்மீது பொருத்தப்படுகின்றன. அழைப்பவர் பெரும்பாலும் தொழுகை மண்டபத்திலிருந்தபடியே அழைப்பு விடுப்பார். இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், அழகியல் அம்சமாகவுமே பயன்படுகின்றன.

தோற்றமும் வளர்ச்சியும்

ஆரம்பகால பள்ளிவாசல்கள் மினார்களைக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாத்தின் முதல் தொழுகைகள் முகம்மது நபி அவர்களின் வீட்டிலேயே நடைபெற்றது. அக்காலங்களில் வீட்டுக்கூரையில் ஏறி நின்றே தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டது. முதலாவது மினார் முகமது நபியின் காலத்துக்கு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னரே துனீசியப் பகுதியில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மினார்கள் பல வடிவங்களில் உள்ளன. சதுரம், வட்டம், எண்கோணம் ஆகிய வடிவங்களில் வெட்டுமுகங்களை உடைய மினார்களே அதிகம் காணப்படுவன. ஈராக்கின் சாமரா (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசல் கூம்பு வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; art of islam என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினார்&oldid=1746672" இலிருந்து மீள்விக்கப்பட்டது