சிபிச் சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3: வரிசை 3:
==பெயர் விளக்கம்==
==பெயர் விளக்கம்==
*'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம்.<ref>பசி, பதி, பறி, படி என்னும் ஈரெழுத்தொருமொழிச் சொற்கள் போன்றது சிபி என்னும் சொல்.</ref>
*'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம்.<ref>பசி, பதி, பறி, படி என்னும் ஈரெழுத்தொருமொழிச் சொற்கள் போன்றது சிபி என்னும் சொல்.</ref>
* சிபி என்னும் சொல் '''சிப்பி''' என்னும் சொல்லின் இடைக்குறை. தபு, தப்பு என்னும் சொற்களைப் போன்றது. தபு என்னும் சொல் சாதலைக் குறிக்கும் தன்வினை. தப்பு என்னும் சொல் சாகடித்தலைக் குறிக்கும் பிறிதின் வினை. சிப்பி என்னும் சொல் முத்துச் சிப்பியைக் குறிக்கும். கடலில் மிதக்கும் சிப்பி என்னும் உழிரினம் மழைத்துளியை உண்டு மாண்டுவிடும். மாண்டபின் அந்த மழைத்துளி முத்தாக மாறிவிடும். இந்தச் செய்தியைத் திருக்குறள் தெளிவுபடுத்துகிறது.
* சிபி என்னும் சொல் '''சிப்பி''' என்னும் சொல்லின் இடைக்குறை. தபு, தப்பு என்னும் சொற்களைப் போன்றது. தபு என்னும் சொல் சாதலைக் குறிக்கும் தன்வினை. தப்பு என்னும் சொல் சாகடித்தலைக் குறிக்கும் பிறிதின் வினை. சிப்பி என்னும் சொல் முத்துச் சிப்பியைக் குறிக்கும். கடலில் மிதக்கும் சிப்பி என்னும் உயிரினம் மழைத்துளியை உண்டு மாண்டுவிடும். மாண்டபின் அந்த மழைத்துளி முத்தாக மாறிவிடும். இந்தச் செய்தியைத் திருக்குறள் தெளிவுபடுத்துகிறது.
:நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
:நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
:வித்தகர்க்கு அல்லால் அரிது. <ref>திருக்குறள் 235</ref>
:வித்தகர்க்கு அல்லால் அரிது. <ref>திருக்குறள் 235</ref>

04:29, 13 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

சிபிச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு பொதுவாக வழங்கப்படும் சோழப் பெரு வேந்தன் வரலாற்றைப் பண்டைய நூல்கள் பறைசாற்றுகின்றன.

பெயர் விளக்கம்

  • 'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம்.[1]
  • சிபி என்னும் சொல் சிப்பி என்னும் சொல்லின் இடைக்குறை. தபு, தப்பு என்னும் சொற்களைப் போன்றது. தபு என்னும் சொல் சாதலைக் குறிக்கும் தன்வினை. தப்பு என்னும் சொல் சாகடித்தலைக் குறிக்கும் பிறிதின் வினை. சிப்பி என்னும் சொல் முத்துச் சிப்பியைக் குறிக்கும். கடலில் மிதக்கும் சிப்பி என்னும் உயிரினம் மழைத்துளியை உண்டு மாண்டுவிடும். மாண்டபின் அந்த மழைத்துளி முத்தாக மாறிவிடும். இந்தச் செய்தியைத் திருக்குறள் தெளிவுபடுத்துகிறது.
நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது. [2]

சிபி நத்தம் என்னும் முத்துச் சிப்பி போல் கெட்டான். அது போன்ற சாக்காட்டைச் சிபி போன்ற வித்தகரால்தான் பெற்றுப் புகழ் பெற முடியும் என்று திருக்குறள் சிபி வரலாற்றைக் குறிப்பால் உணர்த்துகிறது.

சோழன் சிபி வரலாறு

புறநானூறு

  • புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டிருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. (சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.) புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.[3]
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கொடைத்திறம் மிக்கவன். என்றாலும் இவனது முன்னோன் புறாவைக் காப்பாற்ற வழங்கிய கொடையை எண்ணுகையில் அது பரம்பரைக் குணம் என்றே கொள்ளத்தக்கது என்று புலவர் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிட்டுள்ளார்.[4] அவர் யானைத் தந்தத்தின் இருபுறமும் தொங்கும்படி உருவாக்கப் பட்டிருந்த அக்காலத் தராசு பற்றிய குறிப்பினையும் தந்துள்ளார்.
  • இந்தப் புலவர் நப்பசலையார் தமது மற்றொரு பாடலிலும் அந்த அரசனைக் குறிப்பிடும்போது இவன் புறவின் இன்னலைப் போக்கிய செய்தியைக் குறிப்பிடுள்ளார். [5]

சிலப்பதிகாரம்

தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.[6]

பெருந்தொகை[7]

பெருந்தொகை நூலில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று 'புத்தன் வழங்கிய கொடையைப் போல, சிபி தன்னிடம் இரந்த இந்திரனுக்குத் தன் எலும்பு ஒன்றை வழங்கியதோடு மட்டுமன்றி, புறாவுக்காகத் தன் உடல் முழுவதையும் கொடுத்தான்' என்று குறிப்பிடுகிறது.[8]

கொடைமடம்

பாரி முல்லைக்குத் தேர் தந்தது போலவும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், குமணன் தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி பெருஞ்சித்திரனாருக்கு வாள் தந்தது போலவும் சிபி தன்னைத் தந்ததும் கொடைமடம்.[9]

அடிக்குறிப்பு

  1. பசி, பதி, பறி, படி என்னும் ஈரெழுத்தொருமொழிச் சொற்கள் போன்றது சிபி என்னும் சொல்.
  2. திருக்குறள் 235
  3. 'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்,
    தன் அகம் புக்க குறுநடைப் புறவின்,
    தபுதி அஞ்சிச் சீரை புக்க,
    வரையா ஈகை உரவோன்'
    என்று சிபிச் சக்கரவர்த்திச் சோழனின் வரலாற்றை புலவர் தாமப்பல்கண்ணனார் குறிப்பிடுகிறார். புறநானூறு 43
  4. புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
    யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
    கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
    ஈதல் நின் புகழும் அன்றே -புறநானூறு 39
  5. புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,
    சினம் கெழு தானை, செம்பியன் மருக! -புறநானூறு 37
  6.  எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
    புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிலப்பதிகாரம், வழக்குரை காதை

  7. மற்றும் விம்பிசார கதை
  8. பாசடைப் போதிப் பேர் அருள் வாமன்
    வரையா ஈகை போல யாவிரும்
    கொடைப்படு வீரக் கொடை வலம்படுதலின்
    முன்னர் ஒருமுறைத் தன் உழை இரந்த
    அன்பு இல் அரக்கர் வேண்டு அளவும் பருக
    என்பு தொறும் கழிப்பித் தன் மெய் திறந்து வாக்கிக்
    குருதிக் கொழும்பதம் கொடுத்ததும் அன்றிக்
    கடுந்துயர்ப் பட்ட கள்ளப் புறவின்
    மாய யாக்கை சொல்லிய தான் தன்
    உடம்பு நிறுத்துக் கொடுத்ததும் அன்றி. பெருந்தொகை தொகுப்புப் பாடல் எண் 101
  9. மடத்தனமான கொடை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபிச்_சக்கரவர்த்தி&oldid=1737651" இலிருந்து மீள்விக்கப்பட்டது