பகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 6: வரிசை 6:


[[பகுப்பு:காலம்]]
[[பகுப்பு:காலம்]]

[[en:Day]]

05:07, 28 செப்டெம்பர் 2005 இல் நிலவும் திருத்தம்

பொது வழக்கில் சூரிய ஒளி பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் காலப்பகுதி அவ்விடத்தில் பகல் எனலாம். கிழக்குத் திசையில் சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் மேற்கில் மறையும் நேரம் வரையான காலப்பகுதியே இது. ஒரு பகலும், ஒரு இரவும் சேர்ந்தது ஒரு நாள். பகல் நேரம் எப்பொழுதும் ஒரேயளவாக இருப்பதில்லை. ஒரு ஆண்டின் வெவ்வேறு காலங்களில் பகல் நேரத்தின் அளவு வெவ்வேறாக இருக்கின்றது. அத்துடன் புவி மையக் கோட்டுக்குத் தொலைவிலுள்ள இடங்களில் இவ்வேறுபாடு அதிகமாக இருக்கும்.

பூமி தன்னுடைய அச்சில் தன்னைத் தானே சுற்றுவதனாலேயே பகலும் இரவும் உருவாகின்றன. பூமியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அரைப் பகுதி சூரியனை நோக்கியிருக்க, மற்றப்பகுதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும். சூரியனை நோக்கியிருக்கும் பகுதியில் சூரிய ஒளி விழுவதனால் அப்பகுதி பகலாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகல்&oldid=17358" இலிருந்து மீள்விக்கப்பட்டது