அந்தாதித் தொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51: வரிசை 51:




==மேலும் பார்க்க==
==குறிப்புகள்==
* [[அபிராமி அந்தாதி]]
* [[அழகரந்தாதி]]


==குறிப்புகள்==
<References/>
<References/>



13:42, 29 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

ஒரு அடியில் ஈற்றில் அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.


ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி எனப்படலாம்.


எடுத்துக்காட்டுகள்

வேங்கையஞ் சார லோங்கிய மாதவி
விரிமலர்ப் பொதும்பர் நெல்லியன் முகமதி
திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே [1]


மேல் உள்ள பாடலில் எழுத்தந்தாதித் தொடை அமைந்துள்ளதைக் காணலாம். முதலடியின் இறுதியெழுத்தான "வி" இரண்டாம் அடியின் முதலில் வருவதும், இரண்டாம் அடியின் இறுதி எழுத்து மூன்றாம் அடியின் முதலில் வருவதும், மூன்றாம் அடியின் இறுதி எழுத்து மீண்டும் முதலடியின் முதலில் வருவதும் காண்க.


அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.


உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே[2]


மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.


முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

அந்தாதி நூல்கள்

தமிழில் பல அந்தாதி நூல்கள் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றில் அடுத்தடுத்து வரும் செய்யுள்களின் ஈற்றடி முதலடிகளுக்கு இடையில் மட்டும் அந்தாதிகள் அமைகின்றன. கீழே தரப்பட்டுள்ளவை முக்கியமான சில அந்தாதி நூல்களாம்.

அபிராமியந்தாதி
திருவரங்கத்தந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திருவேரகத்தந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திருவந்தாதி - பொய்கையாழ்வார்
ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி - திருவரங்கத்து அமுதனார்


மேலும் பார்க்க

குறிப்புகள்

  1. இராஜகோபாலாச்சாரியார், கே., 1998, பக் 125.
  2. தொல்காப்பியம் இளம்பூரணர் உரை., 2006, பக் 437.

உசாத்துணைகள்

  • இராஜகோபாலாச்சாரியார், கே., யாப்பியல், ஸ்டார் பிரசுரம், சென்னை, 1998,
  • கௌமாரீஸ்வரி (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் - இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2006 (முதற்பதிப்பு 2005)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தாதித்_தொடை&oldid=1729932" இலிருந்து மீள்விக்கப்பட்டது