அல்-சுயூத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6: வரிசை 6:


[[பகுப்பு:இசுலாமிய அறிஞர்கள்]]
[[பகுப்பு:இசுலாமிய அறிஞர்கள்]]
[[பகுப்பு:1445 பிறப்புகள்]]
[[பகுப்பு:1505 இறப்புகள்]]

21:10, 11 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதி (றலி) அவர்கள் கி.பி. 1445 ல் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் பிறந்தார்கள். சிறு வயதிலேயே அனாதையாக இருந்த இமாம் அவர்கள் சகல கலைகளிலும் பிரசித்தி பெற்று விளங்கினார்கள். இளம் வயதில் அரபு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் கல்வி கற்பதற்காக பல தடவைகள் பிரயாணம் செய்தார்கள். இஸ்லாம் மார்க்கக் அறிவைத் தனது 40 வது வயது வரை கற்பித்து வந்த இமாம் அவர்கள், அதன் பின்னர் மனிதர்களுடனான சகவாசத்தைத் துண்டித்துக்கொண்டு மார்க்க ஞான நூல்களை எழுதுவதில் தமது காலத்தைக் கழித்தார்கள். ஏறத்தாள 600 நூல்கள் இமாம் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.

இமாம் அவர்கள், இமாம் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ (றலி) அவர்களோடு இணைந்து எழுதிய ' தப்ஸீருல் ஜலாலைன் ' என்னும் நூல் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள அரபிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்திற்கமைய கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னார் தமது 60ம் வயதில் கி.பி. 1505 ம் ஆண்டு தனது பிறந்த இடமாகிய கெய்ரோ நகரத்தில் இறையடி எய்தினார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-சுயூத்தி&oldid=1722179" இலிருந்து மீள்விக்கப்பட்டது