அலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Nan பயனரால் அலோகங்கள், அலோகம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
(வேறுபாடு ஏதுமில்லை)

08:54, 30 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

மாழையிலி அல்லது அலோகம் (Non-metal) என்பது வேதியியலில் வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பொழுது தங்கம், வெள்ளி இரும்பு போன்ற மாழை எனப்படும் பொருள்களில் இருந்து மாறுபடும் மாழை அல்லாத வேதிப்பொருட்களைக் குறிக்கும். தனிம அட்டவணையில் 17 தனிமங்கள்தாம் மாழையிலி என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிமங்களில் சுமார் 80 -உக்கும் மேலானவை மாழைகள் எனப்படுகின்றன. எனவே தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் இயற்பியல் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் ஒன்று மாழையாகவோ அல்லது மாழையிலி ஆகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன - அவைகளை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.

உலோகப் பண்புகளை பெற்றிருக்காத வேதியியல் தனிமங்கள் அலோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அலோகங்கள் எளிதில் ஆவியாகக் கூடியனவாகவும், வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதில் கடத்தாத காப்புப் பொருட்களாகவும், குறைவான நெகிழ்வுத் தன்மை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.வேதியியல் பண்புகளின் அடிப்படையில் இவை அதிக அயனியாக்கும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் கவர் ஆற்றல் மதிப்புகளைக் கொண்டுள்ளன. அலோகங்கள் மற்ற தனிமங்கள் அல்லது சேர்மங்களுடன் வினைபுரியும் போது எலக்ட்ரான்களைப் பெற அல்லது பகிர்ந்து கொள்ள முனைகின்றன.

17 தனிமங்கள் பொதுவாக அலோகங்களாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை வாயுக்கள். ( ஐதரசன், ஹீலியம், நைட்ரசன், ஆக்சிசன், புளுரின் ,நியான், குளோரின், ஆர்கான், கிரிப்டான், செனான் மற்றும் ரேடான் ) புரோமின் மட்டும் திரவநிலையில் உள்ளது. கார்பன், பாஸ்பரஸ், கந்தகம், செலினியம் மற்றும் அயோடின் போன்ற வெகுசில தனிமங்கள் திடநிலையில் காணப்படுகின்றன.

மாழையிலிகள்

மாழை, மாழையிலி என்னும் பாகுபாடுக்குத் துல்லியமான வரையறைகள் ஏதும் இல்லை. மாழையிலிகளின் பொதுவான பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன:

  1. வெப்பத்தையும், மின்னாற்றலையும் அவ்வளவாகக் கடத்தா (வெப்ப, மின், வன்கடத்திகள்)
  2. இவை காடி ஆக்சைடுகளாகும் (ஆனால் மாழைகளோ கார ஆக்சைடுகள் ஆகும்)
  3. திண்மநிலையில் பளபளப்பு ஏதும் இல்லாமலும் (மங்கியதாகவும்), வளையாமல் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். (மாழைகள் பளபளம்மாகவும், வளைந்து கொடுக்கவும், தட்டி, கொட்டி நீட்சி பெறச் செய்ய வல்லதாகவும் இருக்கும்)
  4. அடர்த்திக் குறைவானது (மாழைகளைக் காட்டிலும்)
  5. குறைந்த உருகுநிலைகளும் கொதிநிலைகளும் கொண்டவை
  6. அதிக எதிர்மின்னிப்பிணைவீர்ப்பு (electronegativity) கொண்டவை.

தனிம வரிசை அட்டவணையில் அலோகங்கள்:

அட்டவணையில் ஐதரசன் தவிர மற்ற அலோகங்கள், p-தொகுதி யில் அடுக்கப்பட்டுள்ளன. ஹீலியம், s-தொகுதி தனிமம் பொதுவாக மந்த வாயுக்களுக்கான பண்புகளைப் பெற்றிருப்பதால் நியானுக்கு மேலாக ( p-தொகுதி) வைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோகம்&oldid=1715364" இலிருந்து மீள்விக்கப்பட்டது