கற்குவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating interwiki links, now provided by Wikidata on d:q7321974
wikidata
வரிசை 21: வரிசை 21:


[[பகுப்பு:பெருங்கற்படை சின்னங்கள்]]
[[பகுப்பு:பெருங்கற்படை சின்னங்கள்]]

[[nl:Steenman]]
[[no:Varde]]

01:23, 4 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

One of many cairns marking British mass graves at the site of the Battle of Isandlwana.
பனியாற்றோரமாகச் செல்லும், பதை ஒன்றைக் குறிக்கும் கற்குவை.

கற்குவை என்பது, மனிதரால் செயற்கையாக உருவாக்கப்படும் கற்குவியலைக் குறிக்கும். இவை மேட்டு நிலங்களிலும், பற்றைக் காட்டுப் பகுதிகளிலும், மலை உச்சிகளிலும், நீர்வழிகளுக்கு அருகிலும் காணப்படுகின்றன.

இவை பல்வேறு காரணங்களுக்காகக் கட்டப்படுகின்றன.

  • இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அடையாளத்துக்காக அல்லது அவர்களுக்கான நினைவுச் சின்னமாக.
  • மலை உச்சிகளைக் குறிப்பதற்காக.
  • கற்பாங்கான தரிசு நிலங்களூடாகச் செல்லும் அல்லது பனியாறுகளுக்குக் குறுக்காகச் செல்லும் பாதைகளின் இரு மருங்கும் குறித்த இடைவெளிகளில், அப்பாதையைக் குறித்துக் காட்டுவதற்காக.

இவற்றுடன், கற்குவைகள் குறிப்பிட்ட இடங்களில் நடந்த பல்வேறு வகையான நிகழ்வுகளை நினைவு கூர்வதற்காகவும் அமைக்கப்படுகின்றன. இவை ஒரு போர் நிகழ்ந்த இடமாகவோ அல்லது ஒரு வண்டி கவிழ்ந்த இடமாகவோ இருக்கலாம். சில வெறுமனே ஒரு விவசாயி தனது வயலிலிருந்த கற்களை எடுத்துப் போட்ட இடமாகக்கூட இருக்கலாம்.

இவை தளர்வான, சிறிய குவைகளிலிருந்து, விரிவான, வியக்கத்தக்க பொறியியல் அமைப்பாகவும் இருக்கக்கூடும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்குவை&oldid=1701219" இலிருந்து மீள்விக்கப்பட்டது