லட்சுமி (இந்துக் கடவுள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வேலை நடந்துக் கொண்டிருக்கிறது வார்ப்புரு நீக்கம்
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 72: வரிசை 72:
*[[தேவி]]
*[[தேவி]]
*[[லட்சுமிநாராயணன்]]
*[[லட்சுமிநாராயணன்]]

==திருமகள் : ஆஸ்திரேலிய ’பேஷன் ஷோ’ சர்ச்சை==

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 2011 மே மாதம் நடந்த ’பேஷன் ஷோ’வில் பங்கேற்ற பெண்கள் இந்துக்கள் தாயாராக வழிபடும் திருமகள் ஸ்ரீ மகாலட்சுமி தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் திருவுருவப் படம் பதித்த நீச்சலுடைகளை, உள்ளாடைகளை அணிந்து நடந்து வந்ததும், அப்போதைய இந்திய அரசு தங்கள் எதிர்ப்பை வெளியுறவுத்துறை மூலமாக தெரிவிக்காததும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.<ref>குமுதம் ஜோதிடம் 27.05.2011</ref><ref>தினமலர்; 08.05.2011 பக்கம் 12</ref>இந்த ஆடைகளை வடிவமைத்த ஆஸ்திரேலியர் ’லிசா புளூ’வை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.இதை நடத்திய நிறுவனம் மன்னிப்பு தெரிவித்ததுடன், உடனடியாக அந்த ஆடைகளை விற்பனையிலிருந்து திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தது.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/australiaandthepacific/australia/8502664/Hindu-goddess-swimsuits-at-Australian-Fashion-Week-spark-angry-protests.html சர்ச்சைக்குள்ளான ஆஸ்திரேலிய ’பேஷன் ஷோ’]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

07:07, 27 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

திருமகள்
ரவி வர்மாவின் திருமகள் ஓவியம்
தேவநாகரிलक्ष्मी
சமசுகிருதம்lakṣmī
வகைதேவி (மூதேவியர்)
இடம்வைகுண்டம், திருப்பாற்கடல்
துணைதிருமால்

திருமகள் அல்லது இலக்குமி அல்லது பொதுவழக்கில் லட்சுமி (Lakshmi) இந்துக்களின் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, ருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.

சொல்லிலக்கணம்

திருமகள் என்ற பெயரானது ஸ்ரீதேவி என்ற சமஸ்கிருதப் பெயருக்கு இணையான சொல்லாக கூறப்படுகிறது. இலட்சுமி, அலைமகள் என பல்வேறு பெயர்களில் திருமகள் அறியப்படுகிறார்.

தோற்றம் மற்றும் புராணம்

அமர்தம் வேண்டி தேவர்களும், அசூரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள்களும், இறைகளும் வெளிவந்தன. அதில் ஒன்றாக திருமகளும் வந்தார்.

பெயர்கள்

  • பத்மா: தாமரையில் வசிப்பவள்
  • கமலா: தாமரையில் வசிப்பவள்
  • பத்மப்பிரியா: தாமரையை விரும்புகின்றவள்
  • பத்மசுந்தரி: தாமரையைப் போல அழகானவள்
  • விஷ்ணுப்பிரியா: திருமாலை விரும்புகின்றவள்

ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஸ்ரீதேவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா எனப் பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

படிமவியல்

திருமகள் வடிவங்கள்

திருமகளின் வடிவங்களாக அட்ட இலட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எட்டு திருமகள் வடிவங்கள் (அஷ்ட லட்சுமிகள்)

செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.

16 வடிவங்கள்

தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்படுகிறது.

திருமகள் விழாக்கள்

வழிபாடு

மந்திரங்கள்

கோயில்கள்

இவற்றையும் காண்க

திருமகள் : ஆஸ்திரேலிய ’பேஷன் ஷோ’ சர்ச்சை

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 2011 மே மாதம் நடந்த ’பேஷன் ஷோ’வில் பங்கேற்ற பெண்கள் இந்துக்கள் தாயாராக வழிபடும் திருமகள் ஸ்ரீ மகாலட்சுமி தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் திருவுருவப் படம் பதித்த நீச்சலுடைகளை, உள்ளாடைகளை அணிந்து நடந்து வந்ததும், அப்போதைய இந்திய அரசு தங்கள் எதிர்ப்பை வெளியுறவுத்துறை மூலமாக தெரிவிக்காததும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.[1][2]இந்த ஆடைகளை வடிவமைத்த ஆஸ்திரேலியர் ’லிசா புளூ’வை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.இதை நடத்திய நிறுவனம் மன்னிப்பு தெரிவித்ததுடன், உடனடியாக அந்த ஆடைகளை விற்பனையிலிருந்து திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தது.[3]

ஆதாரங்கள்

  1. குமுதம் ஜோதிடம் 27.05.2011
  2. தினமலர்; 08.05.2011 பக்கம் 12
  3. சர்ச்சைக்குள்ளான ஆஸ்திரேலிய ’பேஷன் ஷோ’

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_(இந்துக்_கடவுள்)&oldid=1697738" இலிருந்து மீள்விக்கப்பட்டது